செவ்வாய், 18 மே, 2010

தேசிய தலைவர் விடுதலையின் அடையாளம்

சுட்டேன், சுட்டேன் என்று தமது ஆசை தீரும்வரை சுட்டுத் தள்ளிய ஜெனரல் டயர் இன்று நம்மிடம் இல்லை. ஜாலியன் வாலாபாக்கில் ரத்தம் தோய்ந்த மண்ணை எடுத்து பொட்டலமாய் தம்முடைய பையில் வைத்துக் கொண்ட பகத்சிங் அசைக்க முடியா ஆற்றலாக விடுதலையின் அடையாளமாக இன்றும் நம்மிடம் உலாவிக் கொண்டிருக்கிறார். அடக்குமுறையாளர்களான ஜார் இல்லை. ஹிட்லர் இல்லை. முசோலினி இல்லை. நிஜாம்கள் இல்லை. ஆனால் இவர்களிடம் பெற்ற விடுதலை இன்று உயிரோடு உலாவிக் கொண்டிருக்கிறது. அடக்குமுறை ஒருநாளும் வெற்றிபெறாது, மக்களின் வெற்றியை

முள்ளிவாய்க்கால் – மூச்சடங்கிய இறுதிக் கணங்கள்!

மாபெரும் இலட்சியவாதத்தின் வீழ்ச்சியும் அந்த இலட்சியவாதம் சரித்திரமாகியும் கொண்டிருந்த ஒரு தருணம் அது. நிலைமைகள், நிர்ப்பந்தங்கள், யதார்த்தங்கள், உண்மைகள் என எல்லாம் ஒன்றாகத் திரண்டு உருவாக்கிய ஒரு நிலவரம் அது. அது இறுதிநாள். முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு வலுமிக்க அமைப்பு

தேசியத்திற்காய் உழைக்க நினைப்போர் எம் மக்களுக்கு கைகொடுங்கள் – வன்னி மக்கள் பேரவை!

வன்னியில் வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாத துயர்களைச் சுமந்த எமது மக்கள் சிந்தும் இரத்தக் கண்ணீரைத் துடைக்க அனைவரும் ஒன்றிணையுமாறு வன்னிமக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு: இன வன்முறையின் முழுமையான வடிவம் நேரடியாக ஒப்பேற்றப்பட்டு ஒரு ஆண்டு இன்றுடன் நிறைகிறது. எத்தனை முடியுமோ அத்தனை கொடுமைகளும் குறித்த சிறிய நிலப்பரப்பில் வைத்து இலட்சக்கணக்கான மக்கள் மீது திணிக்கப்பட்டன. 40ஆயிரத்தினைத் தாண்டிய உயிர்ப்பலியெடுப்புக்கள் 75ஆயிரத்தினைத் தாண்டிய காயமடைதல்கள், பட்டினி அவலம், அநாதரவாக்கப்பட்டமை என மிகப் பெரும் அநீதி

முள்ளிவாய்க்கால் சாம்பலிலிருந்து உயிர்த்தெழுந்த பீனிக்ஸ் பறவை ............

அன்று முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழனின் கதை முடிந்தது என்று முழக்கமிட்டவர்களுக்கு நேற்று அமெரிக்காவின் பிலடெல்பியா நகரம் பதில் சொல்லிருக்கும். சொல்லியிருக்கவேண்டும்…. ஆம்…ஈழத்தமிழனின் நாடு கடந்த தமிழீழ அரசவையின் முதல் அமர்வு வெற்றிகரமாக நேற்று ஆரம்பமாகி இன்றும் நாளையும் தொடர்ந்து நடைபெறவிருக்கின்றது.

தமிழ் மக்களின் சுதந்திரம் சாத்தியமானது - ராம் சே கிளாக்

115 பிரதி நிதிகளைக்கொண்ட நாடு கடந்த அரசாங்கத்தில் 85 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் நாடு கடந்த அரசாங்கத்தின் முதலாவது அங்குரார்ப்பண கூட்டம் அமெரிக்காவில் பிலேதெல்பியா நகரில் ஆரம்பமானது. தமிழீழ தேசிய கொடியுடன் ஆரம்பமான இந்த கூட்டம் மூன்று நாட்கள் இடம்பெறும் என கூறப்படுகின்றது. இதில் பிரதான பேச்சாளர்களாக பங்குபற்றிய அமெரிக்க முன் நாள் சட்ட மா அதிபர் பேசுகையில்;

விடுவிக்கப்பட்ட போராளி மீண்டும் கொழும்பில் கைது

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து காயமுற்ற போராளி ஒருவர்படையினரால் முள்ளீவாய்க்காலில் கைது செய்யப்பட்டு பின்னர் 9 மாதத்தின் பின்னர் வலுவிழந்தோர் பட்டியலில் விடுவிக்கப்பட்டார். இவர் மேலதிக சிகிச்சைக்காக இந்தியாவுக்கு புறப்படவிருந்த நிலையில், கல்கிசையில் வைத்து அவர் பொலிஸாரினால் மீண்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஸ்ரீதரன் ஐங்கரன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் பாரியளவிலான ஆயுதங்கள் மற்றும் யுத்தத் தளபாடங்களை குறித்த தகவல்களை வைத்திருந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் மூலம் தெரியவந்ததை அடுத்தே, தாம் கைது செய்ததாக பொலிஸ் கூறியுள்ளது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பல போராளிகளை இராணுவ உழவுப்பிரிவு கைது செய்துள்ளது. கடந்த மாதம் மன்னாரில் விடுவிக்கப்பட்ட இரு வலுவிழந்த இரு போராளிகளை இராணுவ உளவு பிரிவு கைது செய்துள்ளது. கூடவே விடுவிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட அடையாள பத்திரத்தில் 06 மாதத்திற்கே அந்த பத்திரம் செல்லுபடியாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அந்த பத்திரம் காலாவதியாகிய பின்னர் எங்கும் எப்போதும் மீண்டும் கைது செய்யப்படலாம் எனவும் அச்சமடைந்துள்ளனர் விடுவிக்கபட்ட போராளிகள். இது தவிர சில விடுவிக்கப்பட்ட வலுவிழந்த போராளிகளை அருகில் உள்ள இராணுவ முகாமிற்கு வந்து செல்லுமாறும் படையினர் புதிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக விடுவிக்கப்பட்ட போராளிகள் கூறியுள்ளனர்.
தமிழ் ஈழத்தில் வன்னிப் பெருநிலத்தில் 17 ஆம் நாள் மே 2009 அன்று சிங்கள அரசால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிப் பொது மக்களுக்காகவும், எம் மண்ணை மீட்க தம் உயிரை ஈகம் செய்த மாவீரருக்காகவும் Leicester சிவ முருகன் கோவிலில் சிறப்பு வழிபாட்டு நிகழ்வு ஒன்று தேசத்தின் பாலம் உறுப்பினர்களால் ஒழுங்கு செய்யப் பட்டு நடாத்தி முடிக்கப் பட்டது. இதில் பல மக்களும் வேறு பாடின்றி கலந்து கொண்டு ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்தனர். கோவிலின் பிரதம குரு உரையாற்றுகையில், தமிழரின் காவல் தெய்வம் முருகப் பெருமானே என்றும், எம் இனத்தை அழித்தவர்களை எம் பெருமான் என்றோ ஒரு நாள் சங்காரம் செய்வார் என்றும் குறிப்பிட்டார்