புதன், 5 மே, 2010

மே 20 இல் பீரிஸ் அணி ஜி.எஸ்பி பெற பிரசல்ஸ் வருகை, புலம்பெயர் மக்கள் தயாரா?

மே 20 இல் வெளி நாட்டமைச்சர் பீரிஸ் தலைமையில் ஒரு பெரும் அணி ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேச்சு வார்த்தை செய்ய பிறசல்ஸ் வருகின்றது. ஜி.எஸ்.பி வரிசலுகையினை பெறுவதற்கே இந்த அணி வருகின்றது என எதிர்பார்க்கபடுகின்றது. ஆகவே புலம்பெயர் மக்கள் குழாம் அதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றிய பிரதி நிதிகளை சந்திக்க வாய்ப்புக்கள் உண்டா? சந்தர்ப்பம் இல்லையேல் பிறசல்ஸில் அந்த நாளில் ஐரோப்பிய அலுவலகம் முன்பாக ஏதாவது ஏற்பாட்டையாவது செய்ய முடியுமா?

சிங்களக் குடியேற்றம் !

கொக்கிளாய் பறவைகள் சரணாலயப் பகுதியை அரசியல்வாதிகளின் ஆதரவுடன் ஆக்கிரமிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக கடந்த திங்களன்று பறவைகள் சரணாலயத்தின் ஆயிரம் ஏக்கர் பரப்பளவான நிலம் அழிக்கப்பட்டு பெற்றோல் வீசிறப்பட்டு தீவைக்கபட்டுள்ளது. இதன்காரணமாக 2000 தொடக்கம் 3000 வரையிலான தூக்கணாங்குருவிக் கூடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கொக்கிளாய் பறவைகள் சரணாலயம் சுமார் 6000 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டது. இதில் 1000 ஏக்கர் பகுதியே அழிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக உரிய அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டபோது அவர்கள் இந்த அழிப்பு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவில்லை என்றும் அரசியல்வாதிகளின் பின்புலத்துடனேயே இந்த முயற்சி மேற்கொள்ளபட்டதால் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இலங்கையில் காணப்படும் 13வகையான நாரை இனங்களில் மூன்று வகை இந்தச் சரணாலயத்திலேயே உள்ளன. அத்துடன் பெருந்தொகையான பெலிக்கன் பறவைகளும் வெளிநாட்டுப் பறவைகளும் இந்த சரணாலயத்தில் வசித்து வருகின்றன. மேலும் இந்தப் பகுதியில் ஒரு குட்டியும் 35 யானைகளும் வசித்து வருகின்றன. இந்த பறவைகள் சரணாலயத்தை அழித்து விவசாயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை இந்தப்பகுதிகளில் கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொக்கிளாய் சரணாலயத்தில் இருந்து 9கி.மீற்றர் சுற்றாடலில் வசிப்பவர்கள் இந்த அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அவர்களில் சில முஸ்லிம் கிராமவாசிகளும் அடங்கியிருந்தாகவும் தெரிவிக்கப்படுகிறது. கொக்கிளாய் பாரம்பரிய தமிழ்க் கிராமமாகும். மீன்வளம் நிறைந்த இந்தப் பகுதியில் சிங்களக்குடியேற்றங்கள் நிறுவப்பட்டு அவற்றுக்கு இராணுவப் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

நேர்மை மாறாத மேதகு பிரபாகரன்

ஒரு இனவிடுதலைக்கான போராட்டம் மட்டுமல்ல, எந்தவொரு உரிமைக்கான போராட்டம் என்றாலும், அதில் இரண்டு செயல்கள் பங்கு வகிக்கும். ஒன்று கருத்தியல் போர், மற்றொன்று கருவியேந்தும் போர். கருவியேந்தி போராடிகூட வென்றுவிடலாம். ஆனால்

பத்திரிக்கைச் சுதந்திரம் .....

தேர்தல் நடத்தி, அதன் மூலம் மக்கள் தங்களுடைய வாக்குச் சுதந்திரத்தை பயன்படுத்தி, தங்களை ஆள ஒரு அரசை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அவர்களுக்கு அளிப்பதனால் மட்டுமே ஒரு நாட்டை ஜனநாயக நாடாக உறுதி செய்திட முடியாது.

லட்சியம் வெல்லுமடா..


முற்றுப்புள்ளிகள் எல்லாம் முடிவுரை அல்ல.. அடுத்த வாக்கியத்தின் ஆரம்பமே... 'தோல்வி - சோர்வு ' இவையெல்லாம் உனை பயங்கொள்ள வைக்கத் தான் படைக்கப்பட்டன.. அரிசிமாவுக் கோலமிட்டு எறும்புக்குகூட பசியாற்றிய தமிழன் தான் இன்று தன் மண்ணிலேயே அகதி... கலங்காதே தமிழனே.. லட்சியம் வெல்லும் நிச்சயம் ஒரு திகதி.. புல்கூட மிதி பட்டால் எழுந்து தானாய் நிற்கும்.. புல் அல்லநீ தமிழா நீ புலிப்படையின் வர்க்கம்.. உணர்ந்து நீ எழுந்தால் உலகம் உனது சொர்க்கம்.. மூவேந்தர்கள் வளர்த்த நம் மூதாதையர் மொழியை பாவேந்தர் சொற்படி பாரெங்கும் பரப்புவோம்.. வா தமிழனே.. வென்று காட்டுவோம்...

மீண்டெழுவோம்...................


வன்னி பெருநிலப்பரப்பிலே திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பு அரங்கேறி ஓராண்டு உருண்டோடுகிறது . அடுத்த சந்ததிக்கு தமிழன் இருந்தான் என்று கூற மண்டை ஓடுகளும் மனித எலும்புகளும் நிறைந்த புதை குழிகள் தான் எச்சங்களாக எஞ்சி இருக்கிறது வன்னிபெருநிலப்பரப்பிலே . பிழைக்க வந்த பரதேசிக் கும்பல் எம் உறவுகளின் ரெத்தத்தை உறுஞ்சிக் குடித்து களிப்படைந்தது . அயல் நாட்டு அரசியல் நடத்தும் இனத் துரோகிகள் தம் அரசியல் நகர்த்தல்களுக்காக மட்டுமே பயன்படுத்தினார்கள் ஈழத்தமிழர்களை ,ஒரிருவரை தவிர. வெற்றி வரலாறுகள் எம்மை நெகிழ வைத்தாலும் இந்த இன அழிப்பு கலங்க வைத்திருக்கிறது - ஆனாலும் நாம் மீண்டெழுவோம் சிங்கள கூட்டத்தின் திட்டமிட்ட இனப்படுகொலையிலிருந்து....... சிங்களத்தின் திட்டமிட்ட இனவழிப்பில் ""தம் இன் உயிர்களை , ஆகுதியாக்கிய போராளிகள் , தளபதிகள் , பொதுமக்களுக்கு முதலாம் ஆண்டு வீரவணக்க நினைவஞ்சலிகள்"" ..

"வலை"

இராணுவரீதியாகவும் ,சர்வதேச ரீதியாகவும் பலமான விடுதலை அமைப்பாக பரிணமித்த விடுதலைப்புலிகள் அமைப்பை மக்களிடம் இருந்தும் சர்வதேசத்திடம் இருந்து பிரித்து தனிமைப்படுத்த "திட்டம்" தீட்டியது சிறிலங்காவும் சர்வதேச வல்லாதிக்கமும். இதற்கான "நிகழ்ச்சி நிரலில்" முதலில்