திங்கள், 7 ஜூன், 2010

கப்டன் ஈழமாறன்-இராமையா தினேஷ் மாதகல் - யாழ்ப்பாணம்

(பூநகரித் தளம் மீதான தவளை நடவடிக்கையில் வீரச்சாவு)டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா... என்ர பெடியள் என்ன மாதிரியோ... விடடா மச்சான்..."


வைத்திய சாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப் படாதவனாய், தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக் கொண்டிருந்தான் "ஈழமாறன்" அவனின் நச்சரிப்பைத் தாங்காது வைத்தியரிடம் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும்.

பாதுகாப்பு வாபஸ் பெறப்படவுள்ளது..

முக்கிய பிரபுக்களுக்கான பாதுகாப்பு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரபுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேவையற்ற பாதுகாப்பு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் முக்கிய பிரபுக்களுக்கான பாதுகாப்பினை துஸ்பிரயோகம் செய்வதாக ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலருக்கும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரபுக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் விசேட அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேவையற்ற பாதுகாப்பினை வாபஸ் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் வாரமளவில் ஆரம்பிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


உலகத்திலேயே அதிக இறப்புக்களுக்கு காரணமாக இருக்கும் முதல் பத்து இடத்திலே இருக்கும் நோய்களின் பட்டியல்.

பான் கி மூன் தமிழனை நாயிலும் கேவலமாக நினைக்கிறபடியால் 3 மாதமாகியும் .................

காஸாவுக்குச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்த விசாரணையை மேற்கொள்வது தொடர்பில் இஸ்ரேல் மற்றும் துருக்கிப் பிரதமர்களுடன் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் கலந்தாலோசனை நடத்தியதாக ஐ.நா. தெரிவித்திருந்தது. ஆனால் கடந்த வருடம் இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின்போது....
....இடம்பெற்றதாகக் குற்றச்சாட்டு

புலிகள் கேட்டதை நீங்கள் கேட்க கூடாது; வீடு கூட கட்டித்தர முடியாது - மஹிந்த

புலிகள் கேட்டதை நீங்களும் கேட்காதீர்கள்; சிங்கள மக்கள் வழங்கிய ஆணைப்படியே நான் நடப்பேன்; வீடு கூட கட்டித்தர என்னிடம் பணம் இல்லை என்று கூறியுள்ளார் மஹிந்த இராஜபக்‌ஷ அவர்கள். இன்று கூட்டமைப்பிற்கும் மஹிந்தவிற்கும் நடந்த பேச்சின் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

மது அருந்திவிட்டு வகுப்பறையில் படுத்துறங்கிய மாணவிகள்

அனுராதபுரத்திலுள்ள முன்னணி அரச பாடசாலையொன்றில் 11 வயதுடைய 3 மாணவிகள் மதுவருந்திவிட்டு போதையில் படுத்துறங்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. வகுப்பறையில் படுத்துறங்கிய மாணவிகளை கண்ட ஆசிரியை அவர்கள் திடீரென நோயுற்றுளார்களா என வினவியபோது அவர்கள் வகுப்பறையில் மதுபாணம் அருந்திவிட்டு போதையேறி தூங்கியிருந்தமை தெரியவந்துள்ளது. அத்துடன் அவர்கள் அருந்திய மதுப்போத்தலில் அரைபோத்தல் மிகுதியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

பேச்சுவார்த்தை சாதகமாக முடிவடைந்தது

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்ட பேச்சு வார்த்தை சாதகமாக முடிவடைந்நதாகவும் மீண்டும் ஒரு தடவை இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ராசபக்சேவே திரும்பிப் போ!!-கண்மணி

கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழீழ மக்களின் குருதியை தாகம் தீர குடித்து, தமது உடல் முழுக்க தமிழர்களின் குருதியை பூசிக் கொண்டு இந்த மாந்த குல வாழ்விற்கே பெரும் சவாலாக வாழ்ந்து கொண்டிருக்கும் மனித உரிமை குற்றவாளி நாளை இந்தியா வருகிறானாம். தமிழ் மக்கள் அழித்த சண்டாளன், ராஜகம்பீரத்தோடு இந்தியா வருவதற்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறான் என்றால், எம் தமிழ் இன மானத்தை அவர்களின் உள்ளார்ந்த உணர்வுகளை, அவர்களுக்குள் கொப்பளிக்கும் இன உறவுகளின் துடிப்புகளை இந்த நாடு புரிந்து கொள்ளவில்லை என்றுதான் பொருள்படும். இந்தியா வரும் இந்த மனித உயிர் குடித்த சண்டாளன் ராஜபக்சே, பிரான்ஸ் அரசால் போர் குற்றவாளி என குற்றம் சாட்டப்பட்டவன்.

சரத்துக்கு தூக்கு'கில்லர் கோட்டா மிரட்டல்'



இலங்கையில் கடந்த வருடம் நடந்த இறுதிப் போரின் போது இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகள் போர்க் குற்றங்களுக்கான உத்தரவை விடுத்தார்கள் என்று இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்கள், தொடர்ந்து சொல்வாரானால், ''அவர் தூக்கிலிடப்படுவார்'' என்று இலங்கையின் பாதுகாப்புத்துறை செயலாளரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபாய ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.