புதன், 23 ஜூன், 2010

பொய்ப்பரப்புரையுடன் 16 பேர் வரையில் கைது ?

தமிழீழத் தேசியத் தலைவரின் படங்களையும், விடுதலைப் புலிகள் பற்றிய காணொளிகளையும் கைத்தொலைபேசிகளில் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் கடந்த வாரத்தில் மட்டும் 16 பேர் வரையில் சிறீலங்கா படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மட்டு, அம்பாறை மாவட்டங்களில் தமது செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா படையினர் கூறிவருகின்ற போதிலும், அங்கு நாளாந்த வீதிக்கண்காணிப்பு, மற்றும் கைது நடவடிக்கைகளை படையினர் மேற்கொண்டு வருகின்றனர்

பிரித்தானியர்களை பழி தீர்க்கிறார் ஒபாமா...

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனிப்பட்ட குரோதம் ஒன்றுக்காகவே பிரித்தானியர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார் என்று தகவல்கள் கசிந்துள்ளன. பராக் ஒபாமாவின் தந்தையும், தந்தையின் மூதாதையர்களும் கென்யாவைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
பிரித்தானியர்கள் ஒபாமாவின் அப்பப்பாவை 1949ஆம் ஆண்டு கென்யாவில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் அடைத்து வைத்து பாரதூரமாகச் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி (துரைசிங்கம் புஸ்பகலா மண்கும்பான் யாழ்ப்பாணம்)


உயர உயர அலைகளை வீசியெறியும் கடலுடன் நெருங்கிய நேசமான உறவை வைத்திருக்கும் அந்தக் கடற்கரை ஒரே வெண்மணல் பிரதேசம். சாதாரணமாக எந்த ஒரு இளம் பெண்ணுக்கும் இந்த வெண்மணற் பரப்பைப் பார்த்தால் தோழியருடன் ஓடிப்பிடித்து விளையாடத் தோன்றும். நீச்சல் பயிற்சியில் ஈடுபடவென கரைக்கு வந்த பெண் புலிகளின் மனம் ஏழைகளின் கண்ணீரில் இளகியது. அனுதாபத்துடன் அந்த மக்களின் நிலையைப் பற்றித் தமக்குள் பேசிக்கொண்டார்கள்.

தமிழீழத்தை கைவிட்டால்??!!

தமிழீழ கோரிக்கையை கைவிட்டால் என்னையும் சுட்டு விடுங்கள் , என்று எங்களுக்கெல்லாம் கொள்கையில் எவ்வளவு உறுதியாக இருக்க வேண்டும் என்று உணர்த்தி நிற்பவர் எங்கள் தேசிய தலைவர். அவரை பயங்கரவாதியாக பார்த்தவன் கூட , தங்கள் எதிரியாக பார்த்த துரோகிகள் கூட அவரது தலைமையும் உறுதியையும் கண்டு வியந்தவர்கள் தான்! . சைக்கிள் இல் தொடங்கி விமான படை வரை கட்டி அமைக்க எதனை உயிர்கள் எவ்வளவு பணம் , எத்தனை கட்டமைப்புகள் ! இவ்வளவையும் காட்டி தந்த தலைவருக்கு அதன் விலைமதிக்க முடியாத அர்பணிப்பு புரிந்து இருந்தது.

விடுதலைபுலிகள் ஆதரவு என்ற போலியான 'கடிதத்தை' கையில் வைத்து கொண்டு மீண்டும் அறிக்கை!!

இரங்கற்பா எழுதியதும் நிஜம்.


முள்ளிவாய்க்கால் ஐயன் காலத்தில் நடந்தது நிஜம்.


மழை விட்டும் தூவானம் விடவில்லை என்றதும் நிஜம்.


அரசியல் ஞானம் இல்லை என்றதும் நிஜம்.

தமிழர்களின் எதிர்கால இருப்பு????????

அண்மைக்காலங்களில் நடந்துமுடிந்த இலங்கைத் தேர்தல்களில் தமிழர்களின் தெரிவு என்பது சிங்கள தேசத்திலிருந்து வேறுபட்டதாக இருப்பதை சிங்கள தேசமும் சர்வதேச உலகமும் கண்டுள்ளது. ஆனால் அவ்வாறான இனப்பிளவை புரிந்துகொண்டு பொருத்தமான தீர்வை முன்வைக்காமல் இழுத்துச்செல்லும் சிங்கள தேசத்துடன்

புலிகளிடம் மாதாந்தம் ஊதியம் பெற்று வந்தவர்?

யாழ் பிராந்திய கட்டளைத் தளபதியாகவும் கடமையாற்றி வருபவரும் ஜெனரல் சரத் பொன்சேக்காவிற்கு எதிரான இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தில் நீதிபதியாக செயற்படுபவருமான மேஜர் ஜெனரல் மகிந்த அத்துருசிங்க புலிகளிடம் மாதாந்தம் 50 ஆயிரம் ரூபா ஊதியம் பெற்று வந்தவர் என்ற தகவல் வெளியாகியிருப்பதாக சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

புலிகளுக்கு புத்துயிர் எனப் புகார்!

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக கடந்த ஆண்டு முடிவுக்கு வந்த இறுதிகட்ட போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தனக்கு ஆலோசனை வழங்க ஐ நா வின் தலைமைச் செயலர் பான் கீ மூன் அமைத்துள்ள குழுவுக்கு இலங்கை அரசு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
போரின் போது இடம் பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தொடர்பாக ஐ நா வின் தலைமைச் செயலருக்கு ஆலோசனை வழங்க மூன்று உறுப்பினர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.