செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

வாருங்கள் பழகலாம் ?..........

ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிசலுகையினைப் பெறுதல், அனைத்து நாடுகளில் இருந்து வரும் உல்லாசபயணிகளின் வரவினை கூட்டுதல், வெளி நாட்டு முதலீடுகளை அதிகரித்தல் என்பனவே அண்மையில் வெளி நாட்டு அமைச்சருக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. இதற்கேற்ப காய்களை நகர்த்துமாறு அனைத்து நாட்டு தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் சிங்களக் குடியேற்றங்கள்

இனப்பிரச்சினை தீவிரம் பெறுவதற்கான தோற்றுவாய்களில் ஒன்றாக இருந்த சிங்களக் குடியேற்றங்கள் மறுபடியும் தமிழ்மக்களுக்கு அச்சத்தைக் கொடுக்க ஆரம்பித்து விட்டன. முன்னர் கிழக்கில் தான் சிங்களக் குடியேற்றங்கள் பற்றிய அச்சம் ஏற்பட்டிருந்தது. கிழக்கைத் தமிர்களிடம் இருந்து பறிக்கும் முயற்சிகள் நடப்பதாக தமிழர்கள் முன்னர் பயந்தார்கள். அதுபோலவே நடந்தும் விட்டது. இப்போது வடக்கின் மீது அதேபோன்று குறி வைக்கப்பட்டிருக்கிறது.


நிருபமா ராவின் நெருங்கிய நண்பனாம் !!!!! ......டக்ளஸ்

இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவிடம், இலங்கைத் தமிழ் மக்களுக்குச் செய்திருக்க வேண்டிய பல விடயங்களை இந்திய அரசு செய்யத் தவறிவிட்டது என யாழ்ப்பாணத்தில் அவரை சந்தித்த தமிழ் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று.....


பிஞ்சென்றும் பூவென்றும் பிரித்து
அவ் சிறு வண்டு கூட பார்த்து தான் தேன்பருகும்.
இங்கு சிங்கள வெறியனுக்கு தமிழ் பிஞ்சின்
இறப்பெனில் சந்தோசம். செய்த சிப்பாய்க்கு பதவி
உயர்வுகள் தானாக கிட்டும்.
பெற்றதாய் முன்னே தந்தையும் தமையனும் கூடவே
இறந்து கிடப்பது தான் விதியா????
இதை பார்த்து வெறும் காகித துண்டின் அறிக்கைகள்
எழுதிடத்தான் ஐ.நாவே நீயா??
சர்வவல்லமை கொண்டதாய் சொல்லும்
சர்வ தேசத்தின் பணியா??


காந்திய நாடே நீகொடுத்த குண்டுகள் இங்கு
இவரை துளைத்துள்ளது.
அந்த பிஞ்கின் உயிரையும் கூட குடித்துள்ளது.
இதுதான் காந்தி உனக்கு சொல்லி தந்ததா??
இல்லை புத்தரின் போதனையும் இதுதானா??
வாழப்பிறந்தவரா நாங்கள் இல்லை
பலராலும் வஞ்சிக்க பிறந்தவரா??
சொல்லி விட்டு கொல்லுங்கள் சாகும் போது தன்னும்
தெரிந்து கொண்டு இறப்போம்
ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று

கப்டன் ஈழமாறன் (இராமையா தினேஷ்)

"டேய் மச்சான் என்னைக் கொண்டுபோய் வீடுறா... என்ர பெடியள் என்ன மாதிரியோ... விடடா மச்சான்..." வைத்திய சாலையின் கட்டிலில் இருந்தபடி, காலில் குத்திய திருக்கை முள்ளைப் பற்றிப் பெரிதும் கவலைப் படாதவனாய், தன் அருகில் இருந்த போராளியிடம் கூறிக் கொண்டிருந்தான் "ஈழமாறன்" அவனின் நச்சரிப்பைத் தாங்காது வைத்தியரிடம் அவர்களுக்கு, அவரின் வார்த்தைகள் ஏமாற்றத்தையே கொடுக்கும். "விசம் உடனே இறங்காது தம்பி. இதால ஆக்கள் செத்துப்போயிருக்கினம். ஒரு இரண்டு நாள் பொறும்! பிறகு போகலாம்." என்ப் புன்னகை முகத்தில் தவழவிட்டவாறு சொல்வதை, ஏமாற்றத்துடன் பார்ப்பான் அவன்.