செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று.....


பிஞ்சென்றும் பூவென்றும் பிரித்து
அவ் சிறு வண்டு கூட பார்த்து தான் தேன்பருகும்.
இங்கு சிங்கள வெறியனுக்கு தமிழ் பிஞ்சின்
இறப்பெனில் சந்தோசம். செய்த சிப்பாய்க்கு பதவி
உயர்வுகள் தானாக கிட்டும்.
பெற்றதாய் முன்னே தந்தையும் தமையனும் கூடவே
இறந்து கிடப்பது தான் விதியா????
இதை பார்த்து வெறும் காகித துண்டின் அறிக்கைகள்
எழுதிடத்தான் ஐ.நாவே நீயா??
சர்வவல்லமை கொண்டதாய் சொல்லும்
சர்வ தேசத்தின் பணியா??


காந்திய நாடே நீகொடுத்த குண்டுகள் இங்கு
இவரை துளைத்துள்ளது.
அந்த பிஞ்கின் உயிரையும் கூட குடித்துள்ளது.
இதுதான் காந்தி உனக்கு சொல்லி தந்ததா??
இல்லை புத்தரின் போதனையும் இதுதானா??
வாழப்பிறந்தவரா நாங்கள் இல்லை
பலராலும் வஞ்சிக்க பிறந்தவரா??
சொல்லி விட்டு கொல்லுங்கள் சாகும் போது தன்னும்
தெரிந்து கொண்டு இறப்போம்
ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக