ஞாயிறு, 30 மே, 2010

புலம்பெயர் தமிழர்கள் மீது இலங்கை அரசு தொடுத்துள்ள இராஜதந்திரப் போர் ..................


சிறீலங்காவின் புதிய அரசாங்கம், அதன் பழைய அரச தலைவரின் தலைமையில் முற்றுமுழுதான ஒரு இராஜதந்திரப்போரில் தற்போது இறங்கியுள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார்.


சிறீலங்கா அரசின் இந்த இராஜதந்திரப்போர் என்பது எதற்காக? யாரை எதிர்த்து? உலகில் உள்ள மனிதாபிமான மற்றும் மனித உரிமை அமைப்புக்கள், அனைத்துலக அரச சார்ப்பற்ற நிறுவனங்கள், மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் தொடர்பில் கருத்துக்களை தெரிவித்துவரும் மேற்குலகம்,

மஹிந்த ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு அளித்த பேட்டி


இலங்கையும் இந்தியாவும் வெறும் நண்பர்கள் அல்ல. நாம் உறவினர்களைப் போன்றுள்ளோம். இன்று எமது உறவு மிகவும் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ளது.
எம்மை கவனித்துக் கொள்ளவேண்டிய கடமை இந்தியாவுக்குள்ளது. எவ்வாறெனில், ஆதிக்க உணர்வுகொண்டதோர் மூத்த சகோதரனைப் போன்றல்லாது, தனது சிறிய சகோதரியைக் கவனித்துக்கொள்வதைப் போன்று அமையவேண்டும் என்று நான் கருதுகின்றேன் என ‘டைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

விரிவடையும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரங்கள்................



போர் முடிவுக்கு வந்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும் பாதுகாப்பு அமைச்சு தன் நாட்டின் வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் பகுதி நிதியை விழுங்கும் அமைச்சாக மாறியிருக்கிறது. அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கு 20,222 கோடி ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்வதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதில் மூலதனச்செலவு என்பது

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முகத்திரை கிழிகிறது

கடைசியில் மெல்லமெல்ல தமது உண்மையான கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது வெளியிட்டுவருகிறது. அதாவது "வட கிழக்குத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியல் தீர்வை வழங்க அரசாங்கம் தயார் எனில் தாம் அரசுடன் இணைந்து மகிந்த அரசை பாராளுமன்றில் 3ல் 2 பெரும் பான்மையாக்குவேன் என்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
அப்படியாயின் அரசியல் சாசனத்தை திருத்தி,

ஈழத்தமிழனின் ஆண்டுத்திவசம் கருணாநிதிக்கு செம்மொழி மாநாடு!




தமிழர்களின் சாபக்கேடாக, ஈழத்தின் துரதிஸ்ட்டமாக, விரும்பியோ விரும்பாமலோ அப்புறப்படுத்த முடியாத பெரும் சமூகச்சுமையாக. ஊழல், பணபட்டுவாடா மூலம் தழிழ்நாட்டை குட்டிச்சுவராக்கி. கற்காலத்தை நோக்கிய பாதையில் தமிழ்நாட்டை இட்டுச்செல்லும் துரோக சக்தியாக, முத்துவேலுநாயக்கர், தெட்சணாமூர்த்தி, என்கின்ற “கருணா நிதி” தழிழர்களை மையங்கொண்டு, சூரிய கிரகணமாக ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

விகடன் கக்கும் நஞ்சு...........

ஈழப் பிரச்சனைபற்றி ஒரு கட்டுரை பிரபாகரனின் அட்டைப் படத்துடன் வெளியிட்டால் நல்ல வியாபாரம் நடக்கும் என்பதை விகடன் குழுமப் பத்திரிகைகள் உணர்ந்து கொண்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை ஒரு நடுநிலையாளனாகவும் ஈழத்திற்கு ஆதரவாளன் போலவும் தன்னைக் காட்டிக் கொள்ளூம்படி தொடர்ந்து பல கட்டுரைகளை ஆனந்தவிகடனிலும் ஜுனியர் விகடனிலும் மட்டுமல்ல அவள் விகடனிலும் வெளியிட்டுவருகிறது விகடன் குழுமம்

விதைகளிலிருந்து.........................

உலகை உலுக்கிய ஓர் மாபெரும் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. ஒரு இன விடுதலைக்கான போராட்டம் கடும் கருவி போராட்டத்தால் நெருக்குதலுக்கு உள்ளானது. வளம்கொழிக்க வாழ்ந்த ஓர் இனம் சிங்கள பேரினவாத கூட்டுப்படையால் கொலை வெறிக்களம் ஆனது. பல்வேறு போராட்டங்களை கடந்து கருவி ஏந்தி களத்தில் புகுந்த தமிழீழ விடுதலை புலிகள் தமது போரட்டத்தை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தனர். தமது ஆயுதங்கள் மௌனிப்பதாக அறிக்கை கொடுத்தார்கள்.

லெப்.கேணல் ராதா..........

யார் இந்த ராதா? தமிழீழ போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்கட்கு ராதாவை தெரியாமல் இருக்க முடியாது. யாழ் இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போதே ஆற்றலும் ஆளுமையும் மிக்க இளைஞனாயிருந்த ஹரிச்சந்திரா தான் 1983ல் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டதும் தலைவரினால் ராதா எனப் பெயரிடப்பட்டு எமது விடுதலைப்பயணத்தில் தளபதி ராதா ஆகினார்.