வியாழன், 15 ஜூலை, 2010

கப்டன் அறிவு

தூரத்தே கேட்ட சத்தம் வரவர அதிகரித்துக் கொண்டிருந்தது. அமைதியான அன்றைய சூழலை இடை விடாத அந்த இரைச்சல் ஓசை பயங்கரமானதாக மாற்றியது. அவர்களுக்கு அது வழமையானது தான். எனினும், அன்று ஏதோ ஓர் அசாதாரணமான சூழல் இருப்பதாக அவர்களுக்குப்பட்டது.

போராட்டத்தை இந்தியாவில் ஆரம்பித்தால் தமிழனுக்கு விடிவு நிச்சயம் ....

தமிழீழ தேசிய தலைவர் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர்ந்த தமிழர்களிடம் ஒப்படைத்திருக்கிறார் என தங்களை தமிழ் தேசியவாதிகள் என சொல்லிக் கொள்பவர்கள் இப்போது அடிக்கடி சொல்லி வருகின்றனர். அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட போராட்டத்தை இவர்கள் முன்னெடுக்கிறார்களா இல்லையா

தோல்வி??

தோல்வி, ஒரு வெற்றியின் தொடக்கம்தான் என்பது ஒரு வகை அபிப்பிராயம். இது ஒரு முடிவின் அடையாளம் என்பது இன்னொரு வகை அபிப்பிராயம்.


ஏற்பட்ட தோல்வியை, பாடமாக எடுத்துக்கொண்டு புதிதாகத் தொடங்குவதா, அவமானமாக எடுத்துக்கொண்டு ஒதுங்குவதா என்பதில்தான் வளர்ச்சிக்கான வாய்ப்பும் வாய்ப்பின்மையும் இருக்கிறது.

புனர்வாழ்வு என்றபோர்வையில் போராளிகள் சித்திரவதை -BBC

அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் போராளிகள், வசதி வழங்கல்கள் இன்றி துன்புறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அவர்கள் தொலைபேசி மூலமும், கடிதங்களின் மூலமும் தமக்கு தகவல் தெரிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி சேவை தெரிவித்துள்ளது.

புலம்பெயர் ஊடக பார்வையில் ..2010.ஆம் ஆண்டு துரோக ஆண்டாக பிரகடனம் போல் தெரிகிறது .

மே18 2009  பின் தமிழ் மக்களிடம் குறிப்பாக புலம்பெயர் மக்களிடம் நச்சு தன்மை மிகுந்த பிரச்சாரம்திட்டமிட்டபடிஅரங்கேற்றபட்டு கொண்டிருக்கிறது .
இதன் காரணிகள் தேசியத்தலைவரின் பிரசன்னமின்மை,போராளிகளின் சிறைவாழ்வு,மக்களின்(களம் )முகாம் வாழ்வு , அமைப்பின்சொத்துகளின் உரிமைகோராதன்மை, கற்பனை கூடிய செய்தி ஆய்வு ,
தவறான தகவல் பரிமாற்றம் ,இலங்கை அரசாங்கத்தின் திட்டமிடப்பட்ட புலனாய்வு வலைப்பின்னல்போன்றவை எம் இனத்தை மீண்டும் அழிவு பாதைக்கு கொண்டு செல்லபோகிறது என்பது எவராலும்ஊகித்து  கொள்ள முடியும்.
இஞ்சினியர்,மாத்தையா,குணபால் ,ஒப்பிலாமணி,கருணா பிள்ளையான்,  இனியபாரதி ,கேபி போன்றோர்மற்றும் மாற்று கருத்து கொண்டோர்  எமது போராட்டத்தை காட்டி கொடுத்து அழிக்கஉறுதுணையாக நின்றபடியால்....
புலிகளால் சிலர் அழிக்கப்பட்டனர்.மீதி உள்ளோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரசன்னம் இல்லாத இன் நிலையில்
தமிழ் மக்கள் மேல் ஏறி சவாரி செய்ய தொடங்கிவிட்டார்கள் .இதன் முற்று முழுதான உள்அர்த்தம் புரியாமல் இன்னமும்
சில ஆய்வாளர்களும் ஊடகங்களும் எங்கிருந்தோ கிடைக்கும் தகவல் அடிப்படையில் அதன் உண்மை தன்மையை
அறியாமலும் அறிய முயட்சிக்காமலும் தமது கற்பனைக்கு ஏற்ப எழுதி எல்லோரையும் குழப்ப தொடங்கிவிட்டார்கள் .
தற்போது அவர்களுக்கு கிடைத்திருக்கும் புது கதாபாத்திரம் ராம் ,நகுலன் அன் கோ .
இவ்விருவரும் தமிழினத்துக்கும் தமிழ் ஈழத்திற்கும் செய்த துரோகம் இவர்கள் தமிழீழ போராடத்தில் தம்மை இணைத்து
தம்மை வருத்தியதாகும்.இவர்கள் இருவரும் எவளவு தூரம் விடுதலைப் போராட்டத்தில் களமாடினார்கள் என்பதுபுலம்பெயர் தமிழர் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.இவர்கள் இருவரும் தான் களத்தில் வடமுனைகளத்தைவிட்டு வேறு களமுனையில் நின்ற விடுதலைப்புலி போராளிகள்.இவர்களுடன் நின்ற குறிப்பிடப்பட்ட போராளிகள் தமதுஇலக்குகளை எவ்வாறு அடைந்தார்கள் என்பதும் புலம்பெயர் தமிழர் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இவர்களை துரோகி ஆக்குபவர்களை பார்த்து ஒரு சில கேள்விகள் ........இவர்களுடன் அப்போதும் இப்போதும் நீங்கள் தொடர்பில்
உள்ளீர்களா ?அல்லது தொடர்பில் இருந்து அவர்களை புறக்கணிக்க எண்ணுகிறீர்களா ?இவர்கள் இராணுவத்திடம் உள்ளார்கள் என்றால்
அது உங்களுக்கு யார் மூலமாக தெரியும் ,தெரியப்படுதியவர்களுக்கும் உங்களுக்கும் என்னதொடர்பு ?ராமும் நகுலனும் முக்கிய இரு தளபதிகள்
இவர்களுக்கு எவளவு தொடர்பு,ஆயுதத்கிடங்குகளின் விபரம் தெரிந்திருக்க வாய்ப்புண்டு இவர்களில் எவராவது ,எவையனவாவது ,
காட்டிக் கொடுக்கப்பட்டதுக்கு உங்களிடம் தக்க ஆதாரம் உண்டா ?அவர்களுடன் நின்ற மீதி போராளிகள் என்ன ஆனார்கள் என்ற விபரமாவதுதெரியுமா ?இவர்கள் பிடிபட்டதற்க்கு ஐ சி ஆர் சி இன் ஆதார பூர்வமான ஆவணம் ஏதாவது உண்டா உங்களிடம் ?
ஏன் இவர்கள் உங்கள் பார்வையில்இவளவு கூர்மையாக தெரிகிறார்கள்?


இதற்கு காரணம் ஒட்டு மொத்த புலிகளின் பிரசன்னம் இல்லாத நிலைமையில் இவ்விருவரின் பிரசன்னம்.உங்களால் இவர்களை
ஏற்று கொள்ள முடியாத நிலை என்பதேயாகும்?இவர்களும் தங்களை வருத்தி தமிழ் ஈழத்துக்காக போராடியவீரர்கள் என்பதை மறந்து உண்மைத்தன்மை எது பொய் எது சதிவலைப்பின்னல் எது என்பதும் தெரியாமல் மேல் குறிக்கப்பட்ட துரோகிகள் வரிசையில்இவர்களையும்
இணைத்துள்ளீர்கள் ,இணைக்க எதுவாகி உள்ளீர்கள் என்பதேயாகும் ....
இப்போ எங்கள் எல்லோருக்கும் முன் உள்ள கடமை போராளிகளின் விடிவு ,முகாமில் உள்ள மக்களின் வாழ்வு.இதனை விடுத்து யாரை துரோகிஆக்கலாம் என்ற கற்பனை ஆய்வைவிடும்படி  அழிந்து போன எம் தாய் மண் தமிழீழத்தின் பெயரால் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு
முன்னைநாள் போராளி

பாதுகாப்பு வலையங்கள் அகற்றப்பட மாட்டாது!

யுத்தம் நிறைவடைந்திருந்தாலும் வடக்கிலுள்ள பாதுகாப்பு வலையங்கள் நீக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உயர் பாதுகாப்புவலயங்கள் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு