செவ்வாய், 7 டிசம்பர், 2010

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

இலங்கை பாராளுமன்ற எம்.பி.க்களுக்கு யோகா கற்றுக்கொடுக்க  அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எம்.பி.க்களின் மனதுக்கு புத்துணர்ச்சி கிடைத்து இதன் மூலம் அவர்கள் தங்கள் செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்த முடியும் என கருதப்படுகிறது. இந்த வகுப்புகளில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. விருப்பபட்ட எம்.பி.க்கள் மட்டும் இதில் பங்கேற்கலாம். யோகா வகுப்புககள் தொடங்கப்படுவது குறித்து யோகாசன ஆசிரியர்களிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத முகாம்கள் இலங்கையில்.

சமீபத்தில் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதி இந்தியாவில் பிடிபட்டான். அவன் கொடுத்த வாக்குமூலத்தில் இலங்கையில் தங்களது அமைப்பின் முகாம்கள் இருப்பதாகவும், அங்கு பயிற்சி பெற்றுதான்  வந்து இருப்பதாகவும் தெரிவித்து இருந்தான். இதற்கு இலங்கை அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தங்கள் நாட்டில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத முகாம்கள் எதுவும் இல்லை என்று கூறியது. ஆனால், இலங்கையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத குழுவினரின் பயிற்சி முகாம்கள் குறித்த முக்கிய ரகசியங்களை விக்கிலீக் இணைய தளம் அம்பலப்படுத்தி உள்ளது.
 

ஊடக சுதந்திரம். இலங்கையானது ஆசியாவின் ஆச்சரியம்.

ஒரு நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த விடயமாக இருப்பது ஊடகத்துறையாகும். ஊடகத்துறையானது ஒரு நாட்டை நல்ல வழியில் அல்லது. கெட்டவழியில் இட்டுச் செல்கின்ற ஒரு சக்தியாக இருக்கின்றது. இலங்கையில் ஒரு சுதந்திரமான ஊடகம் இருந்ததா என்பது தொடர்பில் ஒரு கேள்விக்குறியே இருக்கின்றது.ஏனெனில் .துரதிஷ்டவசமாக எமது நாட்டில் 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ரிச்சட் சொய்ஸா தொடக்கம் 2009 மார்ச் மாதம் 6 ஆம் திகதி சதிமதன் வரையும் 41 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார்கள்.
 படுகொலை செய்யப்பட்ட ஊகடவியலாளர்களில் 34 தமிழ் ஊடகவியலாளர்களும் 2 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் 5 சிங்கள ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றார்கள். எமது நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவந்ததற்குப் பிற்பாடுதான் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்

யாழ்.நவீன சந்தைப் பகுதிகளில் கலாசாரச் சீரழிவுகள்.!!!

யாழ்ப்பாணம் நவீன சந்தைப் பகுதியில் தனியார் கல்வி நிலையங்களுக்குச் சென்று விட்டு வீடுகளுக்குத் திரும்பாமல் தேவையற்ற விதத்தில் இளைஞர்களும், யுவதிகளும் அங்கும் இங்குமாக அலைந்து திரிவதுடன் கூட்டம் கூட்டமாக நின்று மிக மோசமான கலாசாரச் சீரழிவுகள்  செய்வதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஈழப்போராட்டம் இப்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் கையில்...

இன்னொரு "கிட்லர்" பிறப்பே புலிகளின் இராணுவ தோல்விக்கு காரணமாக இருந்தது.

ஸ்ரீலங்கா இராணுவம் ஆளனி,படைக்கலன்களின் பெருக்கம் மற்றும் அதிகூடிய(பரந்த கொலைவெறி) சூட்டு வலு காரணமாக , உள்ளுர் வளங்களுடன் மற்றும் பெருளாதார, மருத்துவ நெருக்கடியின் மத்தியில் போராடிய அமைப்பை வெற்றிகண்டுள்ளமையை வெற்றி என்று கூறலாமா? .
சிலாவத்துறையில் ஆரம்பித்த  போரானது எந்த இராணுவ தந்திரத்தை பின்பற்றியதாக அல்லது ஏதாவது புதிய தந்திரத்தை பின்பற்றியதாக இருந்ததா? போர் ஆரம்பித்த முதற் கொண்டு இடைவிடாத தாக்குதல் முறையையே படைகள் பின்பற்றி வந்தன. மேலும் பரவலான தாக்குதல் முறைகள் இதில் விமான குண்டுத் தாக்குதல்கள் முழத்திற்கு முழம் இடம் பெற்றதாகும்.

அவதானம்...அவதானம்..அவதானம்...!!!

பொலனறுவையின் பிரதான பாடசாலையொன்றின் மாணவிகள் ஐவர் கர்ப்பம் தரித்த நிலையில் பாடசாலைக்கு சமூகமளித்துக் கொண்டிருந்த விடயம் அம்பலமானதில் பிரதேச மக்கள் ஆடிப் போயுள்ளனர்.

புலம்பெயர் தமிழீழ விடுதலைத் தளத்தைச் சிதைக்கும் திட்டத்தின் முதல் அடியாகவே சிங்களப் புலனாய்வாளர்களால் ‘தமிழர் நடுவம்’ - சுவிசிலிருந்து கதிரவன்

‘வெளிநாடுகளில் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்களை அடையாளம் காணவும், விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு தொடர்புகளை அறிந்துக் கொள்ளவுமே கே.பியை அரசாங்கம் பயன்படுத்துகின்றது. கேபியை பயன்படுத்தி, வெளிநாட்டு புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் ஒரு குழப்ப நிலையை தோற்றுவிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது’ – சிங்களத்தின் அமைச்சர் விமல் வீரவன்ச.........

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேன்ஜ் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்!

அமெரிக்கா உட்பட பல நாடுகளின் பல முக்கிய இரகசிய ஆதாரங்களை வெளியிட்டுவந்த, விசில் ஊதும் இணையத்தளம் என மேற்குல ஊடகங்களால் வர்ணிக்கப்படும் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் நிறுவனர் ஜூலியன் அசேன்ஜ் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்

355 மிரர் சைட்களை தொடங்கிய விக்கிலீக்ஸ்...

 இரட்டை வேட, கபட நாடகங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் விக்கிலீக்ஸ் இணையதளம், அமெரிக்கா தனது தளத்தை முடக்கிப் போடுவதிலிருந்து தப்ப 355 ‘மிரர்’ தளங்களை துவக்கியுள்ளது.
இதுகுறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தற்போது நாங்கள் கடும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளோம். இன்டர்நெட் உலகிலிருந்து எங்களை முற்றிலும் முடக்கிப் போடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன கட்டுநாயக்க வானூர்தி நிலையத்தில் தாக்கப்பட்டுள்ளார்

கலாநிதி விக்கிரபாகு கருணாரத்ன, லண்டனில் இருந்து கொழும்பு திரும்பியபோது இன்று மாலை வானூர்தி நிலையத்தில் வைத்து காடையர்களினால் தாக்கப்பட்டுள்ளார்.
லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்த இவர், தமிழ் மக்கள், தமிழ் அமைப்புக்கள், சிங்கள மக்கள். ஊடகவியலாளர்கள், மற்றும் பிரித்தானிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துவிட்டு நாடு திரும்பியபோது தாக்கப்பட்டுள்ளார்.