செவ்வாய், 7 டிசம்பர், 2010

லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத முகாம்கள் இலங்கையில்.

சமீபத்தில் லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதி இந்தியாவில் பிடிபட்டான். அவன் கொடுத்த வாக்குமூலத்தில் இலங்கையில் தங்களது அமைப்பின் முகாம்கள் இருப்பதாகவும், அங்கு பயிற்சி பெற்றுதான்  வந்து இருப்பதாகவும் தெரிவித்து இருந்தான். இதற்கு இலங்கை அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. தங்கள் நாட்டில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத முகாம்கள் எதுவும் இல்லை என்று கூறியது. ஆனால், இலங்கையில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத குழுவினரின் பயிற்சி முகாம்கள் குறித்த முக்கிய ரகசியங்களை விக்கிலீக் இணைய தளம் அம்பலப்படுத்தி உள்ளது.
 

அமெரிக்காவின் ரகசியங்களை ஒன்றன்பின் ஒன்றாக விக்கிலீக் இணையதளம் அறிக்கையாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அமெரிக்க அரசின் முக்கிய ரகசிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், இலங்கையில் பயிற்சி முகாம் ஒன்றை நிறுவிக்கொண்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் இந்தியாவின் கேரளா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் அவர்களின் நடவடிக்கை முகாம்களை அமைப்பதற்கு திட்டமிட்டிருந்தது. இந்த அமைப்பின் தலைவர்களில் ஒருவரான ஷபீக்கபா என்பவர் இந்தியாவில் 2 இடங்களில் தனது நடவடிக்கை முகாம்களை அமைத்து கொள்வதில் தீவிர கவனம் செலுத்தினார். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை போன்ற நாடுகளில் லஷ்கர்-இ-தொய்பாவின் வளர்ச்சி அச்சுறுத்தும் வகையில் அமைந்திருந்தது.

இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்ட பத்திரிகை நிருபர்கள் போத்தல ஜயந்த, அஷ்ரப் அலி போன்றவர்களும், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலரும் இதே கருத்தை தெரிவித்தனர். ஆனால் இவை அனைத்தும் பொய் என்று இலங்கை அரசு உதறி தள்ளியது. தற்போது, அதன் மீதான குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் வெளிவரத் தொடங்கி புயலை கிளப்பி வருகிறது. இது இலங்கை அரசை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக