ஞாயிறு, 2 ஜனவரி, 2011

கிளாலிப் படுகொலைகள் (02.01.1993 - 29.07.1993 வரை)

யாழ் குடாநாட்டினையும் அதன் வெளி நிலப்பரப்பையும் ஊடறுத்துச் செல்லும் பிரதான தரைவழி மார்க்கம் ஆனையிறவு ஆகும். 1990ஆம் ஆண்டு ஏப்பிரலுக்கு முன்னர் யாழ் குடாநாட்டிலிலுள்ள எட்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் போக்குவரத்து, விநியோகப் பாதையாக ஆனையிறவு ஊடான தரை வழிப்பாதையே இருந்தது. 1990ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பமான போரின் விளைவால் தரைவழிப் பாதை மூடப்பட்டது. இதன் பின்னர் யாழ் மக்களின்போக்குவரத்துநகர்வுகள்,உணவுவிநியோகமார்க்கங்கள்என்பனஆனையிறவுக்குமேற்குப்புறமாகஅமைந்துள்ளபூநகரி-கேரதீவு-சங்குப்பிட்டியினூடாக நடைபெற்றது. இப்போக்குவரத்து மார்க்கம் கடல் நீரேரியூடாக இருந்தது.

பறவைகளே எங்கிருந்து வருகிறீர்கள்? முன்பும் நீங்கள் வந்ததாக ஞாபகம்!!!

கனவு பற்றி அதிகமாக ஆய்வு செய்தவர் ‘சிக்மண்ட் பிராய்ட்’ என்ற உளவியலாளர். கனவு பற்றி அவர் முன்வைத்த கருத்துக்கள் முதன்மை பெற்றுள்ள போதிலும் கனவு குறித்த பல கதைகள் ஏற்கெனவே நம்மிடம் உண்டு.திரிசடை கண்ட கனவு சீதையின் விடயத்தில் சரியாகிப் போனது. எனவே கனவுகள் அத்தனையும் நனவிலி மனத்தின் வெளிப்பாடு என்று கூறுவதற்கு அப்பால் எதிர்கால நிகழ்வுகளும் கனவுகளாகக் காட்சி தரும் என்பதை அடியோடு மறுத்துவிட முடியாது. அந்த வகையில் நேற்று இரவு ஆழ்ந்த நித்திரையில் ஒரு கனவு கண்டேன். அது வித்தியாசமான கனவு.மிகப்பெரியதொரு பறவைக் கூட்டம் போட்டி போட்டு பறந்து வருகிறது. பறவைகளில் கறுப்புப் பறவைகள் ஏராளம். பறக்க முடியாத பறவைகளும் தாராளம். குஞ்சுப் பறவைகள் முதல் முதிய பறவைகள் வரை தமது சிறகுகளை விரித்து அடித்துப் பறந்து வரும் வேகத்தைக் கண்ட போது, ஏதோ வைத்த பொருளை எடுக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அவை பறந்து வருவதாக உணர முடிந்தது.

அரசுடன் பேசும் வாய்ப்பு இந்த மாதம் ஏற்படலாம் -சுரேஷ் பிரேமச்சந்திரன்

அரசியல் தீர்வு தொடர்பாக அரசாங்கத்துடன் இந்த மாதம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இச்சந்திப்பு தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞை தென்படுவதாக,, அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது. அவர்கள் உண்மையாக செயற்பட்டால் எமது முன்மொழிவுகளை கையளிப்போம். நாம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார். வடக்குக் கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைய வேண்டும். மற்றும் சமஷ்டி முறையின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அதிகார பரவலாக்கம் இடம்பெற வேண்டும் என கடந்த ஏப்ரல் 8ஆம் திகதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்ததையும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஞாபகப்படுத்தினார்.

இலங்கைக்கான பயணத்தை ஐ.நா. நிபுணர் குழு கைவிட்டது!

ஐ.நா. நிபுணர்குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் முடிபை கைவிட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. நிபுணர்குழு இலங்கை வருவதற்கு நுழைவு அனுமதி வழங்கத் தயார் என்றும் ஆனால் அவர்கள் நல்லிணக்க ஆணைக் குழுவை மட்டுமே சந்திக்க முடியும். வேறுயாரையும் சந்திக்கவோ விசாரணை நடத்தவோ முடியாது என்றும் அரசாங்கம் அறிவித்திருந்தது.

புத்தாண்டு தினத்தில் உரும்பிராயில் ஒருவர் காணமற்போயுள்ளார்

புத்தாண்டு தினத்தில் உரும்பிராயில் ஒருவர் காணமற்போயுள்ளார் இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சிவகுல வீதி, உரும்பிராய் மேற்கு, உரும்பிராயைச் சேர்ந்த ஓட்டோ சாரதியான சோதிநாதன் கோபிநாத் (வயது – 27),என்பவரே நேற்று காணமற் போய்யுள்ளார் புத்தாண்டு தினத்தன்று அதிகாலை 7.30 மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும்,அதனைத் தொடர்ந்து தனக்கு ஒரு HIRE வந்திருப்பதாகவும், உடனே போய்ட்டு வருவதாகவும் கூறிய கோபிநாத் இன்றுவரை வீடு திரும்பவில்லை. கோபிநாத் வீடு திரும்பாததை அடுத்து, அவரது மனைவி  தனது கணவர் காணமற் போயுள்ளார் என முறைப்பாடு செய்துள்ளார். கோபிநாத் ஒரு பிள்ளையின் தந்தையாவார்