ஞாயிறு, 2 ஜனவரி, 2011

இலங்கைக்கான பயணத்தை ஐ.நா. நிபுணர் குழு கைவிட்டது!

ஐ.நா. நிபுணர்குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளும் முடிபை கைவிட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா. நிபுணர்குழு இலங்கை வருவதற்கு நுழைவு அனுமதி வழங்கத் தயார் என்றும் ஆனால் அவர்கள் நல்லிணக்க ஆணைக் குழுவை மட்டுமே சந்திக்க முடியும். வேறுயாரையும் சந்திக்கவோ விசாரணை நடத்தவோ முடியாது என்றும் அரசாங்கம் அறிவித்திருந்தது.
இதையடுத்து ஐ.நா. நிபுணர் குழுவின் நோக்கம் பரந்தளவிலானது என்றும் அது இலங்கை செல்ல விரும்புவது தனியே நல்லிணக்க ஆணைக்குழுவைச் சந்திப்பதற்காக மட்டும் இருக்காது என்றும் ஐ.நா. பொதுச் செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியிருந்தார். இந்த நிலையில் அரசாங்கம் வேறு எவரையும் சந்திக்க அனுமதி மறுத்துள்ளதால் ஐ.நா. நிபுணர்குழுவின் பயணம் இடம்பெறாது என்றே நம்பப்படுகிறது. ஐ.நா. நிபுணர்குழுவின் பயணத்திற்கான முன்னேற்பாடுகளை கவனிப்பதற்காக அதன் பிரதம அதிகாரி றிச்சர்ட் பெனட் இன்னொரு அதிகாரியுடன் இந்தவாரம் இலங்கை வருவதற்கு திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் தனது பயணத்தைத் தற்போது கைவிட்டுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக ஐ.நா. நிபுணர் குழுவின் இலங்கைக்கான பயணமும் கைவிடப்படலாம் என்று நம்பப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக