திங்கள், 10 ஜனவரி, 2011

யாழ் சுபாஸ் ஹோட்டல் உரிமையாளரிடம் கையளிப்பு !! சிறீதர் தியேட்டர் கையளிக்கப்படுமா?

யாழ்ப்பாணம் சுபாஸ் ஹோட்டல் இராணுவ முகாம் சித்திரவதைகளுக்கு பெயர் போனது அதே போல சிறிதர் தியேட்டர் ஒட்டுக்குழு அதிபதி டக்ளஸ் இன் அசுரத்தனத்திற்கும் அனியாயங்களுக்கும் பெயர் போனது. போர் முடிந்தும் மேற்கூறிய இடங்களை விட்டு டக்ளஸ் குழுவும் இராணுவமும் இன்னமும் அகலவில்லை. இந்த சூழலில் இப்போ இராணுவம் சுபாஸ் ஹோட்டலை 15 ஆம் திகதி உரிமையாளரிடம் கையளிக்கப்போவதாக கூறியுள்ளது. இதே போல சிறிதர் தியேட்டரை டக்ளஸ் விட்டு விலகுவாரா???

இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு பயிற்சி வழங்கத் தயார் – பாகிஸ்தான்

இலங்கைக் காவல்துறை உத்தியோகத்தர்களுக்கும், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுக்கும் புலனாய்வுப் பயிற்சிகளை வழங்கத் தயார் என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பாகிஸ்தான் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் இதேவேளை, பாகிஸ்தானின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு இலங்கை பூரண ஒத்துழைப்பு வழங்கும் என சபாநயாகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது பாகிஸ்தான் வழங்கிய ஒத்துழைப்பு அளப்பரியதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் வீரவணக்க நாள்


தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற்பெண் தளபதியான மேஜர் சோதியா அவர்களின் 21 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்’மைக்கேல் வசந்தி’ என்ற இயற்பெயருடைய, யாழ் மாவட்டத்தில் வடமராட்சி, நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவியாவார். 1984 இல் புலிகள் அமைப்பில் இணைந்துகொண்டதோடு முதலாவது பயிற்சிமுகாமிற் பயிற்சிபெற்று தாயகம் திரும்பினார். புலிகளின் படையணியில் மருத்துவப்போராளியாகவும் தளபதியாகவுமிருந்தார்.

உயிர் அச்சுறுத்தல் காரணமாக யாழ்.குடாநாட்டில் மீண்டும்சரணடையும் படலம் ஆரம்பம்

யாழ். குடாநாட்டில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் உயிர் அச்சுறுத்தல் எனக் கூறி மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தில் குடும்பஸ்தர்  ஒருவர் சரணடைந்துள்ளார்.குடாநாட்டில் மீண்டும் படுகொலைகள் இடம்பெற்று வருவதன் காரணமாகவே யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 32 வயதுடைய பிரஸ்தாபகுடும்பஸ்தர்      சரணடைந்துள்ளார்.இவரை மனித உரிமைகள் ஆனைக் குழுவின் யாழ். அலுவலக அதிகாரிகள் யாழ். பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.இதேவேளை, யாழ்.மனித உரிமை ஆனைக்குழு அலுவலக இணைப்பதிகாரி த.கனகராஜ் விடுமுறையில் சென்றுள்ளதால் இது சம்பந்தமாக மேலதிக தகவல்கள் எதனையும் தரமுடியாதுள்ளதாக அங்கு கடமையில் இருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்