திங்கள், 19 ஜூலை, 2010

தேடுகிறேன் என் முகவரியை ...தமிழனாய் பிறந்ததால் ...

கூடிக்குலாவிய எங்கள்கூத்தடித்த இடங்களெங்கே?.....
காற்று வாங்கி தனிமையில்சஞ்சரித்து தன்னிலை மறந்து
இளைப்பாறிய என் ஆலமரமெங்கே?..........கொடும்நெருப்பிடையே புழுவாய்துடித்திடை வேகிறோம்.கோடியுறவிருந்தும் கேட்கவொரு
நாதியற்ற இனமாக நடுத்தெருவில்வாழ்கின்ற போதிலும்
தலை நிமிர்வோம். நீதியொருநாளெம்மை நிமிர்த்தும். அதுவரை
அணையாதிருக்க அரும்பாடு படுகிறோம்
நாளாந்தம் நோயால் நலிந்தும்,ஆகாரமேதுமின்றி வெறும் வயிற்றுடன்
அயர்ந்த பொழுதுகளையும்,கூவி வரும் குண்டில்- உயிர்
கூடு கலைந்தும் உயிரற்றுநடைப்பிணமாய் வாழும் எமை
இப்போ யார் நினைப்பார்...வாழ்விடத்தின் வேரறுத்தும்
வாழ்வை தொலைத்தும் -உறவுகள்பிரிந்து துயர் வாட்ட - நெஞ்சறைக்குள்
ஊர் நினைவு வந்து உலை மூட்ட - போர்துரத்த ஓடி புழுவானோம்.
யாருமே பேசாப் பொருளானோம்...முன்பிருந்த பெருமையெல்லாம்
தெருவில் போட்டு வழி நடந்துவறுமையில் வாடிவதங்கிடினும்,
கூர் முனையை வணதகாதவர் என்றவரலாறு எமக்கிருக்கட்டும் - சாவு
விளைகின்ற தரையினிலெ வேர்கொள்வோம். ஏதுமில்லையென்றாலும்
சாகவில்லை இருக்கிறோம்சரணாகதியடையவில்லை,
தன்மானமிழக்கவில்லை.கொடும்நெருப்பிடையே புழுவாய்
துடித்திடை வேகிறோம்.கோடியுறவிருந்தும் கேட்கவொரு
நாதியற்ற இனமாக நடுத்தெருவில்வாழ்கின்ற போதிலும்
நீதியொரு நாளெம்மை நிமிர்த்தும். அதுவரை
அணையாதிருக்க அரும்பாடு படுகிறோம் -தலை நிமிர்வோம்.
எங்களின் பேரால் வாழ்வோரும் - தேசியமே
சொந்தமென உரிமை கொள்பவரும்,கருகுமெம் வாழ்வுதனை பேச
ஓரிருவர் புறப்பட்டால் - அது போதும்
வீரம் விரித்த வித்துக்களின் பாதம் பட்டு
உயிர்தெழும் எம்மினமென்ற நப்பாசையில்
இன்றுமுயிர் இங்கு துடிப்பதை யாரறிவார்....
அதுவரை..................காத்திருப்பேன்................எங்களின் வைகறை பொழுதிற்காய்.......

கறுப்பு ஜூலையின் 27 ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து "நியாயத்துக்காக நடைபயணம்" நடுநிசி விழிப்புநிலைப் போராட்டம்.


1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் நடந்த கலவரத்தில் தமிழ் இனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை நாளான கறுப்பு ஜூலையின் 27 ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு லண்டனில் நடைபெறவுள்ளது. இந்த கறுப்பு ஜூலை ஊர்வலமானது 2010 ஜூலை 23ம் திகதி, வெள்ளிக்கிழமை வெஸ்மினிஸ்டர் மெதடிஸ்ட் தேவாலயத்தின் பின்புறமாக உள்ள டோதில் வீதியில் (Tothill Street) இரவு 9 மணிக்கு ஆரம்பமாகி டவுனிங் வீதியில் (Downing Street) 11.30 மணிக்கு நிறைவடையவுள்ளது.

பெண்களை அதிகமாக கொண்ட சமூகமாக தமிழ்இனம் ..........!

போரில் ஒரு பெண் பாதிப்படைகின்ற போது, அதில் அவள் மட்டுமல்ல, அந்தக் குடும்பம், உறவுகள் சார்ந்த குடும்பங்கள், கிராமம், சமூகம் என்று அது பல தளங்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதற்குக் காரணம், மறு உற்பத்தித் திறன் அவளிடம் இருப்பதேயாகும். ஒரு சமூக உற்பத்தி அவளூடாகத்தான் நிகழ்கிறது. இந்த நிலையில்,

நான் சும்மா அறிக்கை விட ---இவன் அழகபெருமா வேறை ...நானும் மகிந்தவும் போட்ட பிளான் தெரியாமல் உளறுகிறான்-மு .கருணாநிதி

இலங்கை தனது பொறுப்புக்களை சரியான முறையில் நிறைவேற்றி வருகின்றமையினால் இங்குள்ள நிலைமை தொடர்பில் ஆராய இந்தியா சிறப்புத் தூதுவர் ஒருவரை அனுப்ப வேண்டிய அவசியம் தற்போது இல்லை.
மேலும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவானது உலகிலேயே தலைசிறந்த உறவாகும் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்---

பதவி,பட்டங்களுக்கு,தலை வணங்கா எம் தலைவர் -கூறுபவர் ப.சிதம்பரம்

"தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் எதிரானவர் அல்லர். இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கூறியபடி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அவர் முடிசூடா மன்னனாக இருந்திருப்பார்."

யாழில் நடப்பது வேதனை தருகிறது ....

என் அன்பான யாழ்ப்பான சமுகமே ஒரு நிமிடம் திரும்பிப்பாருங்கள் வன்னிமாவட்டத்தை அது முழுத் தமிழீழ மண்ணுக்காக போராடி இன்று உருக்குலைந்து நிக்கின்றது ஆனால் தமிழீழம் விடுதலை பெற்று அங்கு ஒரு தமிழ் அரசு அமையும் போது.........

லெப்.கேணல்.மணிவண்ணன்(இம்ரான் பாண்டியன் படையணி - தங்கவேல் ரகுராம் வாழைச்சேனை மட்டுநகர் )

"நான் பிடிச்ச இடத்தில ஒரு அங்குலம் கூட விட்டுக் கொடுக்க மாட்டன். கடைசிவரை சண்டை பிடிப்பன்." அவன் சொன்னது போலவே அந்த அசாத்திய துணிச்சல் மிக்க வீரன் தான் முன்னேறிய இடத்தில் நின்ற படியே சமரிட்டு மடிந்தான்... அந்த அமைதியான போர்வீரன் "......

நமக்கான விடுதலைத் தேவையை நாம் சுவாசிக்க பழக வேண்டும்... நமது விடுதலை என்பது யாசித்துப் பெறும் தானமல்ல ...!

ஜூலை 26, 1983. வெளிக்கடைச் சிறை நம்மை அதிரவைத்தக் காலக்கட்டம். சிங்கள பேரினவாதத்தின் அடையாளம் தொடர்ந்து இதுவரை வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு நிலை வருமா? என்று எல்லோரும் அன்னார்ந்து பார்த்தார்கள். இதயம் பிழியப்பட்டது. மனம் சல்லடையாய் துளைக்கப்பட்டது. வரலாறு ஏனோ மீண்டும் மீண்டும் சுற்றி ஒரே இடத்திற்கு வருகிறது.

ஓயாத அலைகள் 01 வரலாற்று முக்கியத்துவம் பெற்ற முல்லைப் பெருஞ்சமர்................

யாழ். குடாவிலிருந்து விடுதலைப் புலிகள் தமது இயங்குதளத்தை வன்னிக்கு மாற்றிக்கொண்டபோது, புலிகள் பலமிழந்து வன்னிக்குள் முடக்கப்பட்டு விட்டார்கள் என்று சிங்கள அரசு மேற்கொண்ட பரப்புரை, 18.07.1996 அன்று அதிகாலை வேளையில் முல்லைப் படைத்தளத்தின் தடையமைப்பினுள் வெடித்த டோப்பிட்டோவின் வெடியோசையோடு முடிவுக்கு வந்தது.


ஓயாத அலைகள் என்று பெயரிடப்பட்டு விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், இதன் பெயரிற்கேற்ப பிற்பட்ட காலத்தில் ஓயாத அலைகள் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட வெற்றிகர வலிந்த தாக்குதல்களிற்கான முதற்படியாக அமைந்து ஓயாத அலைகள் - 01 எனக் குறித்துக் காட்டவேண்டிய தாக்குதலுமானது.

நம்பிக்கையுடன் நாம் தமிழராய் ..............

என்றுமே சமூகம் சமநிலையாக இருந்ததில்லை என்பதில் இருந்து நம் சிந்தனையை துவக்குவோம். அரை நூற்றாண்டு காலமாக போராடிய நம் தேசிய இனத்தின் மிக முக்கிய அடையாளமாக கருதப்பட்ட ஈழ சகோதர சகோதரிகள் இன்று மிகப் பெரிய பின்னடைவில் இருக்கிறார்கள். சர்வ உரிமைகளுடன் வாழ ஒரு நாடு என்ற அடிப்படை மனித தேவையை மனித விழுமியங்களை சுரண்டி கொழிக்கும் வல்லாதிக்கம் மிகத் தீவிர எதிர்க்கிறது.

பயந்து கலங்கிய இனவெறி சிங்களவனுக்கு இன்று தமிழர்கள்…


பல தசாப்தங்களாக தமிழர் விடுதலையை சிறிலங்கா அரசு பல சொற்பதங்களினால் அழைத்து அவமதிப்பு செய்தும் அவர்களுக்கு உலக அரங்கில் அபகீர்த்தியை ஏற்படுத்து முகமாக செயல்பட்டு வந்தார்கள்.

மீண்டும் களை எடுப்பு ஆரம்பமா ?அல்லது துரோக கும்பலின் மக்களை பயம் காட்டும் திட்டமா ?

சனிக்கிழமை காலையில் கிட்டத்தட்ட 7.30 மணியளவில் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒரு இளம் பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

ஐ.நா.விற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை வழக்கு

ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசனைக் குழுவிற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. ஐ.நா. பிரகடனத்தின் 6 ஆம் மற்றும் 33, 34 ஆம் உப பிரிவுகளுக்கு புறம்பான வகையில் செயலாளர் பான் கீ மூன் ஆலோசனைக் குழுவினை உருவாக்கியுள்ளதாக இலங்கை அரசு குற்றம் சுமத்தியுள்ளது.