திங்கள், 19 ஜூலை, 2010

தேடுகிறேன் என் முகவரியை ...தமிழனாய் பிறந்ததால் ...

கூடிக்குலாவிய எங்கள்கூத்தடித்த இடங்களெங்கே?.....
காற்று வாங்கி தனிமையில்சஞ்சரித்து தன்னிலை மறந்து
இளைப்பாறிய என் ஆலமரமெங்கே?..........கொடும்நெருப்பிடையே புழுவாய்துடித்திடை வேகிறோம்.கோடியுறவிருந்தும் கேட்கவொரு
நாதியற்ற இனமாக நடுத்தெருவில்வாழ்கின்ற போதிலும்
தலை நிமிர்வோம். நீதியொருநாளெம்மை நிமிர்த்தும். அதுவரை
அணையாதிருக்க அரும்பாடு படுகிறோம்
நாளாந்தம் நோயால் நலிந்தும்,ஆகாரமேதுமின்றி வெறும் வயிற்றுடன்
அயர்ந்த பொழுதுகளையும்,கூவி வரும் குண்டில்- உயிர்
கூடு கலைந்தும் உயிரற்றுநடைப்பிணமாய் வாழும் எமை
இப்போ யார் நினைப்பார்...வாழ்விடத்தின் வேரறுத்தும்
வாழ்வை தொலைத்தும் -உறவுகள்பிரிந்து துயர் வாட்ட - நெஞ்சறைக்குள்
ஊர் நினைவு வந்து உலை மூட்ட - போர்துரத்த ஓடி புழுவானோம்.
யாருமே பேசாப் பொருளானோம்...முன்பிருந்த பெருமையெல்லாம்
தெருவில் போட்டு வழி நடந்துவறுமையில் வாடிவதங்கிடினும்,
கூர் முனையை வணதகாதவர் என்றவரலாறு எமக்கிருக்கட்டும் - சாவு
விளைகின்ற தரையினிலெ வேர்கொள்வோம். ஏதுமில்லையென்றாலும்
சாகவில்லை இருக்கிறோம்சரணாகதியடையவில்லை,
தன்மானமிழக்கவில்லை.கொடும்நெருப்பிடையே புழுவாய்
துடித்திடை வேகிறோம்.கோடியுறவிருந்தும் கேட்கவொரு
நாதியற்ற இனமாக நடுத்தெருவில்வாழ்கின்ற போதிலும்
நீதியொரு நாளெம்மை நிமிர்த்தும். அதுவரை
அணையாதிருக்க அரும்பாடு படுகிறோம் -தலை நிமிர்வோம்.
எங்களின் பேரால் வாழ்வோரும் - தேசியமே
சொந்தமென உரிமை கொள்பவரும்,கருகுமெம் வாழ்வுதனை பேச
ஓரிருவர் புறப்பட்டால் - அது போதும்
வீரம் விரித்த வித்துக்களின் பாதம் பட்டு
உயிர்தெழும் எம்மினமென்ற நப்பாசையில்
இன்றுமுயிர் இங்கு துடிப்பதை யாரறிவார்....
அதுவரை..................காத்திருப்பேன்................எங்களின் வைகறை பொழுதிற்காய்.......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக