புதன், 26 மே, 2010

புத்தன் என்னும் தத்துவமும் காந்தி என்னும் தத்துவமும் சேர்ந்து தமிழர்களுக்கு எழுதும் விதி

லெப்.கேணல் பாமா/கோதை

விடுதலைப் புலிகள் மகளிர் படையணி சந்தித்த அனேகமான சண்டைகளில், அது தரைச் சண்டையாயினும் சரி கடற்சண்டையாயினும் சரி அவற்றிலே தனது பங்களிப்பைச் செய்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டவள் எங்கள் பாமா !


எல்லாவற்றிலுமே குறிப்பிடத்தக்க திறமையுள்ள, நிறைவான போராளியாக நாம் அவளைக் கண்டோம். நெஞ்சுக்குள் உறைந்து போன அவளது உருவமும் உறுதியான நடவடிக்கைகளும் எந்த ஒரு போராளியையும் அடிக்கடி நினைவு கூரச் செய்யும்.
ஓராண்டு முடிந்தது – எங்கள்
உறவுகள் மடிந்து ,


ஓராண்டு முடிந்தது
எங்கள் உறவுகள் சிதைந்து ,


ஓராண்டு முடிந்தது – எங்கள்....
உறவுகளின் இரத்தம்,
தசைகளை
உலகம் ஒன்றாய் சுவைத்து
ஓராண்டு முடிந்தது –
இன்றோடு....
ஓராண்டு முடிந்தது...


மரண ஓலம் எங்கும்...

சீறிய தமிழனின்..!!

பிணங்களான புலிகளை
அம்மனமாய் எறிந்தார்களாம்.
மானம் காக்க
களமாடிய
அந்த மாவீரர்கள்
மானத்தை சோதிக்கவா?
அவமானம் அடைந்தது
மானுடம்.

அடையாளம் காட்ட
அணிவகுப்பு.
பிணங்களின்
அடையாளம் காண
அணிவகுப்பு.
மகிந்தாவின்
கோரைப்பல்
அம்பலமானது
அரை நொடியில்.
அகிலமே தலைகுணிந்த
அந்த கணம்
நம் ஆன்மாவை
பிழிந்தெடுத்தது.

உன் ஆன்மா
உயிருடன் இருந்தால்
நீ உயிருடன் இல்லை
என புரிந்துக் கொள்.
பிணங்களுக்கு மானம்
இருப்பதில்லை.
அழுகிய சதையில்
நெளியும் புழுக்களில்
நடனங்கள், நாட்டியங்கள்
வெற்றி விழாவாம்.

அசோகனின் சக்கரம்
தமிழனின் உடல் பிழிந்து
குருதி கறையாய்...
தமிழனின் அம்மணம்
புத்தனின் தத்துவத்தை
தோற்கடித்தது.

மகிந்தாவின்
கூட்டாளிகள்
நெருப்பு விழிகளால்
சுட்டெரிக்கப் படலாம்.
நொறுங்கப்போகும்
சிங்கள தேசம்
சீறிய தமிழனின்
சூரிய கதிர்களால்
சுருங்கத் தொடங்கலாம்.

சுடர் முகம் தூக்கி
தமிழ் முகம் காட்ட
தலைவன் மீண்டும்
களம் காணுவான்.
நம் விலங்குகள்
நொருங்கிடும்
அந்த நொடி
விடுதலையின் காற்றில்
புலிக்கொடி பட்டொளி வீசும்....

கூட்டமைப்பின் நோக்கம் என்ன?

அரசியலுக்கான சூழல் எம்மைத் தேடிவரும் என்றிருக்காமல் வருகின்ற சூழலை அரசியலாக்குவதே ஒரு சிறந்த அரசியலாளனின் வெற்றிக்கான பாதையாகும். சூழலை அரசியலாக்கும் செயற்பாடு போரின் இறுதிக்காலத்தில் போதிய அளவு கைக்கொள்ளப்படாமையே எமது போராட்டத்தின் பின்னடைவுக்கான காரணம் என்கின்ற குறிப்பிட்ட அளவிலான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டே வருகின்றன.

நாடு கடந்த தமிழீழ அரசின் அமர்வுக்கு இடமளித்த அமெரிக்காவுக்கு எதிராக சிறிலங்கா அரசு வகுத்துள்ள திட்டம்?

ஜீ-15 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றுள்ள சிறிலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச,புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களுடன் உறவுகளை வளர்த்துக்கொள்ள விரும்பும் அமெரிக்காவுக்கு சரியான பழிவாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜீ - 15 அமைப்பு தலைமை பதவியை பயன்படுத்தவேண்டும் என்று சிறிலங்கா அரசு உயர் மட்டத்தினர் மகிந்தவுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஏன் நமக்கு விடுதலை தேவையாக இருக்கிறது?

கத்தோலிக்க கிறித்துவ நிறுவனத்தின் ஒரு அமைப்பாக காரிதாஸ் லங்கை அமைப்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த அறிக்கையின்படி கடந்த 30 ஆண்டுகால கடும் சமர்களுக்குப் பின்னர் நிறைவு பெற்ற சமர்காலம் என்று இலங்கை அரசு அறிவித்தாலும்கூட, சற்றேறக்குறைய 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணிலே ஏதிலிகளாக இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள இந்த அமைப்பு, தற்போதைய கடுமையான வெப்பநிலை மற்றும் பருவக்கால சூழ்நிலைகளால் தண்ணீர் பற்றாக்குறை, அதனால் ஏற்படும் உள்ள உடல் பாதிப்புகளை வருத்தத்தோடு வெளிப்படுத்தி இருக்கிறது. கொத்து வெடுகுண்டுகளை பயன்படுத்துவதை உலகளவில் தடைசெய்யும் சட்டத்தை வருகிற ஆகஸ்ட் முதல் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் வேளையில்

""போராட்டம் ஓயாது'';கேணல் ராம் உறுதி!- பாகம்-3

சுதந்திர தாகத்துடன் தமிழீழ பெரும் பரப்பின் மலைக்காடுகளில் ஆயுதப் போ ராட்டத்தைத் தொடர்ந்து நடத்திக் கொண் டிருக்கும் கேணல் ராம் தலைமையிலான விடுதலைப்புலிகள் பிரிவினர், தமிழகப் பத்திரிகையாளர் பாண்டியனின் தாகம் தணிக்கத் தண்ணீர் கொடுத்தனர். சுவை யான தண்ணீர் என்கிற பாண்டியன்,

இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவம் ஐ. நா படையில்!

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவொன்று ஐ.நா படையுடன் இணைந்து பணிபுரிவதற்காக மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு விரைவில் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
மூன்று அதிகாரிகள் உட்பட மொத்தம் 61 பேர் இந்தப்படைப்பிரிவில் அங்கம் வகிக்கவுள்ளனர் எனஅரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவப் பிரிவொன்று மத்திய ஆபிரிக்காவுக்குச் செல்வது இதுவே முதற்தட வையாகும்.இலங்கை இராணுவத்தின் தொழிற்சார் தகைமை மற்றும் அதன் திறமை என்பனவற்றுக்கு ஐ.நா வழங்கியுள்ள அங்கீகாரமாகவே இது கருதப்படுவதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம் அண்மையில் போர்குற்றத்திலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டுள்ளது. இவர்களை விசாரிக்கவேண்டும் என கூறும் சர்வதேச சமூகமும் ஐ. நாவும் இப்படியான குற்றம் இழைத்த இராணுவத்தினை எவ்வாறு ஐ. நாவில் சேர்க்கமுடியும்?

உலகுக்கு உணர்த்திய தமிழீழ அடையாளம்.....

"தமிழ்மக்களுக்கான விடுதலைப்போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப்புலிகளின் புலிக்கொடியை இவ்வளவு காலமும் தாங்கிய தமிழினம், பயங்கரவாத அமைப்பாக பன்னாட்டு சமூகத்தினால் தடைசெய்யப்பட்ட அந்த அமைப்பின் கொடியை தாங்கியதால் சர்வதேச சமூகத்திடமிருந்து அந்நியப்படுத்தப்பட்டுவிட்டது. அந்த கொடியினை களைந்துவிட்டு தமிழ்மக்களின் உரிமைகளையும் நலன்களையும் ஒரு மக்கள் சமூகமாக சென்று சர்வதேச சமூகத்திடம் இறைஞ்சினால் - அல்லது பேரம் பேசினால் - தமிழ்மக்களுடைய விடுதலையை பெற்றுவிடலாம்"-