புதன், 26 மே, 2010

இனப்படுகொலையில் ஈடுபட்ட இலங்கை இராணுவம் ஐ. நா படையில்!

இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவொன்று ஐ.நா படையுடன் இணைந்து பணிபுரிவதற்காக மத்திய ஆபிரிக்க குடியரசு மற்றும் சாட் ஆகிய நாடுகளுக்கு விரைவில் புறப்பட்டுச் செல்லவுள்ளது.
மூன்று அதிகாரிகள் உட்பட மொத்தம் 61 பேர் இந்தப்படைப்பிரிவில் அங்கம் வகிக்கவுள்ளனர் எனஅரசாங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை இராணுவப் பிரிவொன்று மத்திய ஆபிரிக்காவுக்குச் செல்வது இதுவே முதற்தட வையாகும்.இலங்கை இராணுவத்தின் தொழிற்சார் தகைமை மற்றும் அதன் திறமை என்பனவற்றுக்கு ஐ.நா வழங்கியுள்ள அங்கீகாரமாகவே இது கருதப்படுவதாக இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவம் அண்மையில் போர்குற்றத்திலும், இனப்படுகொலையிலும் ஈடுபட்டுள்ளது. இவர்களை விசாரிக்கவேண்டும் என கூறும் சர்வதேச சமூகமும் ஐ. நாவும் இப்படியான குற்றம் இழைத்த இராணுவத்தினை எவ்வாறு ஐ. நாவில் சேர்க்கமுடியும்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக