புதன், 26 மே, 2010

சீறிய தமிழனின்..!!

பிணங்களான புலிகளை
அம்மனமாய் எறிந்தார்களாம்.
மானம் காக்க
களமாடிய
அந்த மாவீரர்கள்
மானத்தை சோதிக்கவா?
அவமானம் அடைந்தது
மானுடம்.

அடையாளம் காட்ட
அணிவகுப்பு.
பிணங்களின்
அடையாளம் காண
அணிவகுப்பு.
மகிந்தாவின்
கோரைப்பல்
அம்பலமானது
அரை நொடியில்.
அகிலமே தலைகுணிந்த
அந்த கணம்
நம் ஆன்மாவை
பிழிந்தெடுத்தது.

உன் ஆன்மா
உயிருடன் இருந்தால்
நீ உயிருடன் இல்லை
என புரிந்துக் கொள்.
பிணங்களுக்கு மானம்
இருப்பதில்லை.
அழுகிய சதையில்
நெளியும் புழுக்களில்
நடனங்கள், நாட்டியங்கள்
வெற்றி விழாவாம்.

அசோகனின் சக்கரம்
தமிழனின் உடல் பிழிந்து
குருதி கறையாய்...
தமிழனின் அம்மணம்
புத்தனின் தத்துவத்தை
தோற்கடித்தது.

மகிந்தாவின்
கூட்டாளிகள்
நெருப்பு விழிகளால்
சுட்டெரிக்கப் படலாம்.
நொறுங்கப்போகும்
சிங்கள தேசம்
சீறிய தமிழனின்
சூரிய கதிர்களால்
சுருங்கத் தொடங்கலாம்.

சுடர் முகம் தூக்கி
தமிழ் முகம் காட்ட
தலைவன் மீண்டும்
களம் காணுவான்.
நம் விலங்குகள்
நொருங்கிடும்
அந்த நொடி
விடுதலையின் காற்றில்
புலிக்கொடி பட்டொளி வீசும்....

3 கருத்துகள்:

  1. தமிழனின் அம்மணம்
    புத்தனின் தத்துவத்தை
    தோற்கடித்தது.

    பதிலளிநீக்கு
  2. ராஜபட்சே குடும்பம், பொன்சேகா மட்டுமல்ல சோனியாகாந்தி, மன்மோகனும் இனக்கொலை குற்றவாளிகளே, இவர்களையும் மன்னிக்க மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டுமே தவிற இந்தியாவிடம் கெஞ்சிக் கொண்டிருக்கக் கூடாது. அப்படிக் கெஞ்சுவதைத் தவிற வேறு வழியில்லை என்றால் பேசாமல் ராஜபட்சேவிடமே ”எங்களுக்கு ஏதாவது பார்த்துச் செய்யுங்கள்” என்று கெஞ்சலாமே. சுதந்திரத் தமிழீழமே இலங்கை ... இனப்பிரச்சனைக்கு தீர்வு என்பது எங்களின் நிலைப்பாடு. இனக்கொலையாளிகளை தண்டிக்கும் சூழல் சர்வதேச அளவில் உருவாகி வருகிறது. இதை தமிழினம் சரியாகப் பயன்படுத்துக் கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. இன்றைய உலகத்தில் நல்ல தலைவர்கள் என்பது அரிதாகி விட்டது. மக்களுக்காக போராடும் குணம் உள்ளவர்கள் மறைந்து விட்டார்களா அல்லது மறைத்து விட்டார்களா தெரியவில்லை. தன் குடும்பத்துக்காக சம்பாதிக்கும் தலைவர்களை பெற்றுள்ள நாடுகளில் வாழும் துர்பாக்கியசாளிகளாக நாம் வாழ வேண்டிஉள்ளது. நல்ல தலைவர்கள் இல்லாததால் புரட்சியாளர்கள் இங்கு தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுகிறார்கள். அப்படி ஒரு சுழலில் தான் நமது தமிழீழமும் சிக்கியுண்டது. விடியும் நாள் வரும்!.. வெல்வோம் தமிழீழம்.

    பதிலளிநீக்கு