வெள்ளி, 9 ஜூலை, 2010

ஈழம்- நேபாளம்

இந்திய நிலவியலரசியல் (Geopolitics) எல்லைக்குட்பட்ட இவ்விரு பகுதிகளிலும் இரு மகத்தான போராட்டங்கள் நடைபெற்றன. ஒன்று நேபாளத்தில் தேசிய சனநாயகத்திற்கான போராட்டம். மற்றொன்று ஈழத்தில் தேசிய விடுதலைக்கான போராட்டம். நம்மை சாட்சியாகக் கொண்டு நடைபெற்ற இப்போராட்டங்களில் நேபாளம் 250 ஆண்டுகளாக மன்னனின் கொடுங்கோல் ஆட்சியை வீழ்த்தி வெற்றி கண்டது; ஈழம் சிங்கள இனவெறி அரச பயங்கரவாதத்திடம் வரலாறு காணாத தோல்வியைத் தழுவியது.

அடேல் பாலசிங்கம் பார்வையில் திரு.பிரபாகரன்

எமது வீட்டிற்கு திரு.பிரபாகரன் அடிக்கடி வந்து செல்வார். உத்தியோக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அவரது விஜயம் அமையும். அவர் தனியே தனது மெய்ப் பாதுகாவலர்களுடன் வருவார். மற்றும் சமயங்களில், தனது குடும்பத்தினருடன் வருவார்.


அப்பொழுது 1998ம் ஆண்டின் மத்திய காலம்,

வாழும் சாத்தியங்களை இழந்துவிட்ட தமிழ் மக்கள் கோரி நிற்கும் ஈழ உணர்வுக்கு ஆதரவாக நாம் என்ன செய்யப் போகிறோம்?

தமிழ் மக்கள் தொடர்பாக கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் இலங்கைக்கும் இல்லை; கொடுத்த வாக்குறுதியை ஏன் காப்பாற்றவில்லை என்று கேட்க வேண்டிய அவசியம் இந்தியாவுக்கும் இல்லை. காரணம் வன்னி மக்கள் இன்று கேள்வி கேட்க நாதியற்ற மக்கள். கேட்கும் நிலையில் இருக்கிறவர்கள் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஏனைய தமிழ்த் தலைவர்களோ தலைவர் வருவார், உரை நிகழ்த்துவார்.புலி விரைவில் உறுமும் - நரிகள் ஓடி ஒளியும் என்று மக்களைப் பற்றிய கவலையில்லாமல்

அமெரிக்காவும் ரஸ்யாவும் உளவாளிகளை கைமாறிக்கொள்கின்றது

அமெரி்க்காவில் 10 ரஷ்ய உளவாளிகள் பிடிபட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், அவர்களை மீட்க ரஷ்யா கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக தன் வசம் கைதிகளாக உள்ள அமெரிக்க உளவாளிகளை ஒப்படைக்க ரஷ்யா முன் வந்துள்ளது. அதற்குப் பதிலாக ரஷ்ய உளவாளிகளை ஒப்படைக்க அமெரிக்காவும் முன்வரும் என்று தெரிகிறது

ராஜதந்திரப்போர் இந்தியாvs ஸ்ரீலங்கா

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியா காண்பித்த ஒப்பந்தங்களிலெல்லாம் கையெழுத்திட்டு, இந்தியாவை அனுசரித்து போவதாக தனது தரப்பு நல்லெண்ண சமிக்ஞையை காண்பித்த மகிந்த, கொழும்பு வந்தவுடன் சீனாவுடன் தனக்குள்ள ஆத்மார்த்தமான உறவினை பிரதிபலிக்கும் வகையில் வேறு பல ஒப்பந்தங்களை

இந்திய-சிறீலங்கா ஒப்பந்தம்..............மீட்டல் அவசியம்

இந்திய - சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை சுதுமலையில் நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் பல லட்சம் தமிழ்மக்கள் இந்திய இராணுவத் தளபதிகள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தலைவர் பிரபாகரன் தெளிவுபடுத்தினார். அதில் 'எம்மக்களது விடுதலைக்காக எம்மக்களது விமோசனத்துக்காக நாங்கள் ஏந்திய ஆயுதங்களை இந்திய அரசிடம் ஒப்படைக்கிறோம். தமிழீழ மக்களின் ஒரே பாதுகாப்புச் சாதனமாக இருந்து வந்த இந்த ஆயுதங்களை இந்திய அரசு எம்மிடத்திலிருந்து பெற்றுக் கொள்வதிலிருந்து தமிழீழ மக்களின் பாதுகாப்பு என்ற பெரும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறது.


ஆயுதக் கையளிப்பு என்பது இந்தப் பொறுப்பு மாற்றத்தை தான் குறிக்கிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. தமிழீழத் தனியரசே தமிழீழ மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்பிக்கையுண்டு.


தமிழீழ இலட்சியத்துக்காகவே நான் தொடர்ந்து போராடுவேன். தமிழீழ மக்களின் நலன்கருதி இடைக்கால அரசில் பங்கு பற்ற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்துக்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலகட்டத்திலும் தேர்தலில் பங்குபற்றப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்" என்றார்.


இதன் பின்னர் தலைவர் பிரபாகரனின் உத்தரவின் பேரில் ஆயுதங்கள் பலாலி இராணுவ முகாமில் வைத்து இந்திய இராணுவத்திடம் கையளிக்கப்பட்டது. ஆனால் இந்தியப் பிரதமர் ராஜிவ்காந்தி தலைவர் பிரபாகரனுக்குக் கொடுத்த எந்தவொரு வாக்குறுதியையும் நிறைவேற்றாது இழுத்தடித்து வந்ததோடு தமிழ்த் துரோகக் குழுக்களை தமிழீழப்பகுதிகளில் கொண்டு வந்துவிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழீழ மக்களுக்கும் எதிரான செயல்களைப் புரிய அவர்களை ஏவிவிட்டார்.

சிங்களத்தின் சூழ்ச்சிக்குள் தாமாகத் தாவிக் குதிக்கும் ? "தமிழ்த் தேசியர்கள்"!

சிறிலங்கா அரசு வெற்றி மமதையில் மிதந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒரு வகையான உயர்வுச் சிக்கலிலும் மாட்டிக் கொண்டிருக்கிறது. உலகத்திலேயே ’பயங்கரவாதத்தை’ ஒழித்துக்கட்டிக் காட்டியிருக்கிறோம். எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ளுங்கள் என அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கே அழைப்பு விட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு தமிழனின் கனவு!!

விடுதலையின்
வேட்கையில்
ஒவ்வொன்றாய் உதிர்கிறது
ஈழ உயிர்ப்புகள்;


ஆயினும் -
வெல்வோமெனும் திடத்தில்
தோற்றிடவில்லை ஒரு
உலகத்
தமிழரும்!

மந்திராலோசனை

கொழும்பிலுள்ள ஐ.நா.பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்குத் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முடிவெடுத்தமயும் அதன் வதிவிடப்பிரதி நிதி நீல் பூனேயை திருப்பி அழைத்தமையும் சிறிலங்காவின் இராஜதந்திர நடவடிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

புலம்பெயர்ந்தோர் உதவினால்................தொடங்கியாச்சு மீண்டும்

இன, மத பேதமின்றி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. புலம் பெயர்ந்த தமிழர்கள் உதவினால் வன்னியில் ஒரு வருடத்தில் சகலருக்கும் வீடுகளை கட்டிக்கொடுக்கலாம் என பிரதியமைச்சர் விநாய மூகர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

உயிரை பணயம் வைத்து பிரயாணத்தை மேற்கொள்ளவேண்டாம்!

குடியுரிமை பெறத் தவறிய இலங்கையர்களை அவுஸ்திரேலியா தாயகத்துக்கு திருப்பியனுப்பும். இதனால் உயிரை பணயம் வைத்து பிரயாணத்தை மேற்கொள்ளவேண் டாம் என்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது….