வெள்ளி, 9 ஜூலை, 2010

புலம்பெயர்ந்தோர் உதவினால்................தொடங்கியாச்சு மீண்டும்

இன, மத பேதமின்றி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. புலம் பெயர்ந்த தமிழர்கள் உதவினால் வன்னியில் ஒரு வருடத்தில் சகலருக்கும் வீடுகளை கட்டிக்கொடுக்கலாம் என பிரதியமைச்சர் விநாய மூகர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது: இன, மத பேதமின்றி மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. காணி உறுதிப்பத்திரம் வைத்திருந்தால் மக்கள் அங்கு குடியேற்றப்படுவார்கள். இனத்துவேசம் பேசிக்கொண்டு மீள்குடியேற்றத்தை மேற்கொள்ள முடியாது.


அரச சார்பற்ற நிறுவனங்களிடம் சரியான தகவல்களும், திட்டங்களும் இருந்தால் அதற்குப் பொறுப்பான தலைவரிடமிருந்து அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும். பல அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு கூடுதலான நிதி பயன்பாட்டு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


வன்னியில் புதிய அத்தியாயம் துளிர் விடுகின்றது. சகலரும் இணைந்து கை கோர்த்தால் மிக விரைவாக அந்தப் பிரதேசத்தைக் கட்டியெழுப்ப முடியும். சுனாமி இயற்கை அனர்த்தமாகும். எனினும், வன்னியில் மனித அனர்த்தமே ஏற்படுத்தப்பட்டது.


சுனாமி அனர்த்தத்தின் போது, சகலரும் கைகோர்த்தது போல, இவ் விடயத்திலும் கைகோர்க்கவேண்டும். புலம்பெயர்ந்தோர் உதவினால் வன்னியில் ஒரு வருடத்தில் சகலருக்கும் வீடுகளை கட்டிக்கொடுக்க முடியும்.


மீள்குடியேற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதப்படுத்திக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களை வரவேற்று ஒருங்கிணைந்து கைகோர்த்துக்கொண்டு செயற்பட்டால் அப் பகுதியில் அபிவிருத்தியை மேற்கொளள முடியும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக