வெள்ளி, 9 ஜூலை, 2010

மந்திராலோசனை

கொழும்பிலுள்ள ஐ.நா.பிராந்திய அலுவலகத்தை மூடுவதற்குத் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் முடிவெடுத்தமயும் அதன் வதிவிடப்பிரதி நிதி நீல் பூனேயை திருப்பி அழைத்தமையும் சிறிலங்காவின் இராஜதந்திர நடவடிக்கைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.


இலங்கைக்கு எதிரான ஐ.நா நிபுணர் குழுவை பான் கீ மூன் வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தேசிய சுந்தந்திர முன்னணியின் தலைவரும் நிரமாணத்துறை மற்றும் பொறியியல் தொழில்நுட்ப அமைச்சருமான விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் ஐ.நாவின் கொழும்பு அலுவலகத்தின் முன் எதிர்ப்புப் போராட்டங்களை கடந்த மூன்று நாட்களாக நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் கொழும்பில் உள்ள ஐ.நா ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த அலுவலகத்தை ஐநா செய்லாளர் நாயகம் மூடுமாறு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து நேற்று ஐக்கிய நாடுகளுடன் தொடர்பு கொண்ட வெளி நாட்டமைச்சர் பீரிஸ் சில தினங்களுக்குள் தாம் நல்ல முடிவெடுப்பதாகவும் அனைவருக்கும் பாதுகாப்பு வழங்குவதாகவும் கூறினார் ஆனால் ஐக்கிய நாடுகள் இதனை செவிமடுக்கவில்லை. இதனால் நேற்று நாடு திரும்பிய மஹிந்தவுடன் பீரிஸ் மந்திராலோசனை நடாத்தினாராம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக