சனி, 20 பிப்ரவரி, 2010

சக்தி தொலைக்காட்சியில் மின்னல்.............

சக்தி தொலைக்காட்சியில் மின்னல் எனப்படும் தமிழ் நிகழ்ச்சியை வழங்கிவரும் சிறீரங்கா என்பவர் சிறீலங்கா அரசின் இரட்டை முகவராக தொழில்பட்டு வருவதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று ஆதாரத்துடன் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: சிரச தொலைக்காட்சியின் துணை நிறுவனமாக இயங்கும் தமிழ் தொலைக்காட்சியான சக்தி தொலைக்காட்சியின் தயாரிப்பாளரான சிறீரங்கா துணிச்சலாக அரசை விமர்சித்து வருவதாக தமிழ் மக்கள் நம்பிவருகின்றனர். அவரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் மின்னல் எனப்படும் நிகழ்ச்சி தமிழ் மக்கள் மத்தியில் அதிக கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அரசுக்கு அச்சமின்றி அவர் உண்மையை கூறுவதாக பலர் கருதினார்கள். ஆனால் உண்மை மறுதலையானது, மகிந்த ராஜபக்சாவின் மூத்த புதல்வர் நமால் ராஜபக்சாவின் அமைப்பான தருன்யட்ட ஹெடக் என்ற அமைப்பின் நிறைவேற்று அதிகாரமுள்ள உறுப்பினராக சிறீரங்கா செயற்பட்டு வருகின்றார். அவர் நமால் ராஜபக்சாவுடன் நெருக்கமாக இணைந்து செயற்பட்டு வருகிறார். தமிழ் மக்களை இரண்டாம் தர பிரஜைகளாக சித்தரித்து நாமலை அடுத்த தலைவராக்கும் முயற்சியில் சிறீரங்கா ஈடுபட்டு வருகின்றார். சிறீலங்கா மகிந்தாவையோ அல்லது நாமாலையோ ஆதரிப்பது அவரின் தனிப்பட்ட உரிமை, ஆனால் தமிழ் மக்களால் நல்லவர் என நம்பப்படும் ஒருவர் அவர்களை ஏமாற்றுவது துன்பமானது.

ஹமாஸ் தலைவர் கொலை .........?

ஹமாஸ் இயக்க தலைவர் மஹமூத் அல் மபூவாவைக் கொலை செய்தது இஸ்ரேலின் மொசாத் உளவு அமைப்பினர்தான் என்பது நிரூபணமானால் மொசாத்தின் தலைவர் மெயர் டேகனைக் கைது செய்ய இன்டர்போல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துபாய் போலீஸ் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனவரி 20ம் தேதி துபாய்க்கு ஆயுதங்கள் வாங்குவது தொடர்பான பேச்சுகளில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த ஹமாஸ் இயக்கத் தலைவர் மபூவா அவரது ஹோட்டல் அறையில் கொல்லப்பட்டார். ஹமாஸ் இயக்கத்தின் ராணுவப் பிரிவை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர். அவரை எந்தவித ஆயுதமம் இல்லாமல், தரையில் தள்ளி மூச்சுத் திணறடித்துக் கொன்றனர். இந்தக் கொலையில் மொசாத்துக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. மொத்தம் 11 இஸ்ரேலியர்கள் இந்தக் கொலைச் சதியில் இடம் பெற்றிருந்ததாகவும் துபாய் காவல்துறை தெரிவித்துள்ளது. இவர்களில் ஒருவர் பெண் ஆவார். இந்தக் கும்பல், 11 ஐரோப்பியர்களின் பாஸ்போர்ட்டுகளை மோசடியாக பயன்படுத்தி துபாய்க்கு வந்துள்ளது. அவர்களில் 6 பேர் இங்கிலாந்து நாட்டின் பாஸ்போர்ட்டுகளில் முறைகேடு செய்துள்ளனர். இந்த நிலையில், மபூவா கொலை வழக்கில் மொசாத்துக்குத் தொடர்பு இருந்தால், மொசாத் தலைவருக்கு எதிராக இன்டர்போர் ரெட் அலர்ட் பிறப்பிக்க வேண்டும். அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என துபாய் காவல்துறை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் டாஹி கல்பான் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மபூவா கொலையில் மொசாத்துக்குத் தொடர்பு இருப்பது உறுதியானால், மெயர் டேகனுக்கு எதிராக இன்டர்போல் ரெட் அலர்ட் பிறப்பிக்க வேண்டும். அவரைக் கைது செய்து துபாயிடம் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கொலையில் இஸ்ரேலுக்குத் தொடர்பு இருப்பதாக 99 சதவீதம் நான் நம்புகிறேன். மொசாத் இந்த குற்றத்தின் பின்னணியில் இருந்தால் நிச்சயம் அது தண்டிக்கப்பட வேண்டும். அதன் தலைவர் கொலையாளியாக கருதப்பட வேண்டும் என்றார். இதற்கிடையே மபூவா படுகொலையில் தொடர்புடையதாக கருதப்படும் 11 இஸ்ரேலியர்களின் புகைப்படங்ளையும் துபாய் வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இவர்களைக் கைது செய்ய ரெட் அலர்ட் உத்தரவை இன்டர்போல் பிறப்பித்துள்ளது. இந்த 11 பேருமே தற்போது இஸ்ரேலில் பத்திரமாக இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. ஆனால் இந்த கூற்றுகளையெல்லாம் இஸ்ரேல் நிராகரித்துள்ளது. சம்பந்தமே இல்லாத நபர்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பித்துள்ளனர். இது கேலிக்கூத்தாக உள்ளது. மேலும், துபாய் காவல்துறை தலைவர் மொசாத் குறித்து கூறியுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரமே இல்லை. அடிப்படையற்ற புகார் கள் இவை என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மபூவா முதலில்எந்தச் சூழ்நிலையில் இறந்தார் என்பதையே துபாய் காவல்துறை விளக்கவில்லை. வெறும் கண்காணிப்பு காமராவில் பதிவான சில வீடியோ படங்களை மட்டுமே அது காட்டி வருகிறது. அதில் சிலர் பேசிக் கொண்டிருக்கின்றனர், சிலர் நடந்து கொண்டுள்ளனர். இதை ஆதாரமாக கருத முடியாது என்றார். இதற்கிடையே பாஸ்போர்ட்டில் மோசடி செய்தது தொடர்பாக இங்கிலாந்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையே உரசல்கள் தொடங்கியுள்ளன. சந்தேகப்படும் 11 பேரில் 6 பேர் இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகளை மோசடியாக பயன்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து விசாரணைக்கு இங்கிலாந்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஆறு பேரும், பிரிட்டிஷ் இஸ்ரேலியர்கள் ஆறு பேரின் பாஸ்போர்ட்டுகளைத்தான் மோசடியாக திரித்து துபாய் போயுள்ளனர். இதுதவிர 3 அயர்லாந்து பாஸ்போர்ட்டுகள், ஒரு பிரெஞ்சு மற்றும் ஒரு ஜெர்மனி பாஸ்போர்ட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கான விமான டிக்கெட்டை வாங்குவதற்கு அமெரிக்க கிரெடிட் கார்டு பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதுகுறித்தும் துபாய் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகளை மோசடி செய்தது உண்மையாக இருக்குமானால் இங்கிலாந்துக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான உறவு கடுமையாக பாதிக்கும் என்று இங்கிலாந்து தகவல்கள் கூறுகின்றன.

யாழ்ப்பாணத்தில் நிவாரணம் என்ற பெயரில்...........

நிவாரணம் பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகம் உறுப்பினர்களை சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தின் முன்னால் நாள்தோறும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணமுடிகிறது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தி;ல் மீள்குடியமர்ந்துள்ள, மக்கள் மத்தியில் காணாமல் போனோரின் விபரங்களை பெற்றுக்கொடுத்தல், தொழில் வாய்ப்பு, நிவாரணங்கள் மற்றும் ஏனைய நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தே இந்த உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மற்றும் வன்னியின் அமைப்பாளர் திலக்குமார உடுகமவின் தகவல்படி இதுவரை யாழ்ப்பாணத்தில் 26 ஆயிரம் பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இந்த விடயங்களுக்காக நிரப்பப்படும் விண்ணப்பம் ஒன்றுக்கு இடம்பெயர்ந்தோரிடம் இருந்து 20 ரூபா அறிவிடப்படுகிறது. இடம்பெயர்ந்தோரில் பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை விண்ணப்பங்கள் எனத் தெரியாமல், தமது காணாமல் போன பிள்ளைகளை கண்டுபிடிக்கும் விண்ணப்பங்களாக அதனை கருதி அதில் கையொப்பமிட்டு கையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில், மக்களிடம் இருந்து பல்வேறு உறுதிமொழிகளின் அடிப்படையில் பணம் அறவிடப்பட்டு வருவதாக முறைப்பர்டுகள் கிடைத்துள்ளன.

கொழும்பில் சிங்களவர்கள் சிறுபான்மையினராகி விட்டனராம் ..

கொழும்பில் கடந்த இருபது வருடங்களில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டு விட்டதாக அப்பட்டமான பொய் ஒன்றை சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார். இருபது வருடங்களுக்கு முன்னர் கொழும்பில் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்தார்கள் என்றும் தற்போது 30 வீதமாகக் குறைந்து போய்விட்டனர் என்றும் அவர் கூறியிருக்கிறார். ஆனால் - 2001இல் இறுதியாக எடுக்கப்பட்ட சனத் தொகைக் கணக்கெடுப்பின் படி கொழும்பு மாவட்டத்தின் சனத் தொகை 2,251,274 ஆகும். இதில் சிங்களவர்கள் 1,724,459 பேர். இங்கு இலங்கைத் தமிழர்கள் 247,739 பேரும், இந்தியத் தமிழர்கள் 24,821 பேரும் முஸ்லிம்கள் 202,731 பேரும் வாழ்கின்றனர். இந்த நிலையில் - மகிந்த ராஜபக்ச கொழும்பில் சிங்களவர்களின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைந்து விட்டதாகத் தவறான புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளைத் தூண்டிவிடும் கருத்தாகவும் இது அமைந்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காட்சிகள் உண்மையானவை

சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய தமிழ் இளைஞர்கள் ஸ்ரீலங்கா இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் காட்சிகளின் நம்பகத் தன்மை குறித்து அமெரிக்க நிறுவனம் ஓன்று ஆய்வு நடத்தியதாக அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சட்டவிரோத ஆட்கடத்தல் மற்றும் படுகொலைகளை ஆராயம் சிறப்பு பிரதிநிதி பிலிப் அலஸ்ரனின் வேண்டுகோளின் பேரில் குறிப்பிட்ட காணொளிக் காட்சிகளின் நம்பத்தன்மையை தாங்கள் பரிசோதித்தா கொக்னி ரெக் என்ன அமெரிக்க நிறுவனம் தெரிவித்துள்ளது. அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறிப்பிட்ட கானொளிகள் உண்மையானவை என்பதை தமது நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் அதன் பின்னரே அவை மேலதிக விசாரணைகளுக்கான அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவினால் நேரடியாக இயக்ப்படும் தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ?

இந்தியாவினால் நேரடியாக இயக்ப்படும் தமிழ் கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் கூட்டமைப்பு அலுவலகம் ஒன்று இந்தியாவின் தலைநகர் புதுடெலகியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக கூட்டமைப்பின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவில் உள்ள அலுவலகம் துணை புரியும் என்று கூட்டமைப்பினர் நம்பிக்கை கொண்டுள்ளனர். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பு தமிழ் மக்கள் செறிவாக வாழும் வடக்கு கிழக்கில் ஒரு அலுவலக்தை கூட இயங்கு நிலையில் கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் சார்பிலேயே அலுவலகங்கள் வடக்கு கிழக்கில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களுக்கானதா அல்லது இந்தியாவிற்கானதா

அரசின் அடுத்த குறி ..........?

வெளிநாட்டமைச்சு சந்தேகத்துக்கிடமான NGO மற்றும் சர்வதேச NGO க்கள் பற்றி ஒரு விசாரணையை தொடங்கவிருப்பதாக அறியப்படுகிறது. “வெளிநாடுகளில் இருந்து முறை தவறிய வழிகளில் நிதி சேர்த்தல், அதனை அரசைக்கவிழ்பதற்கு உபயோகம் செய்தல் ஆகிய குற்றங்களையே அரசு புலனாய்வு செய்யவிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லகம ராஜதந்திகளை அண் மையில் சந்தித்த போது மேற்படி விடயம் குறித்து அவர்களுக்கு விளக்கமளித்துள்ளதாகவும் இவ்வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இலங்கை அரசாங்கம் இந்த பாரதூரமான விடயம் குறித்து கவலை கொண்டுள்ளது. இத்தகைய கொடுக்கல்வாங்கல் குறித்தும் இதில் சம்பந்தப்பட்ட தனிப்பட்டவர்கள் மற்றும் குழுவினர் குறித்தும் கண்டுபிடிப்பதற்கான சகல நடவடிக்கைகளும் எடுக்கப் படும் இத்தகைய கொடுக்கல்வாங்கல்களு டன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்பந்தப்பட்டுள்ள தனிப்பட்ட்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்ததாக அந்த வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்,

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திலுள்ள இரு ஆயுதக் குழுக்களின் முகாம்க ளையும் அகற்றி வர்த்தக நிலையங்களுக்குப் பாதுகாப்பு வழங்குமாறு கோரி வர்த்தகர்கள் நேற்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். செங்கலடி பிரதேசத்தில் கடந்த ன்று மாத காலப் பகுதிக்குள் எட்டு கடைகள் உடைக்கப்பட்டு பெறுமதி மிக்க பொருட் கள் கொள்ளையிடப்பட்டதையடுத்து வர்த்த கர்கள், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ஆர்ப்பாட்டத்திற்காக நேற்று அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்தன. பொலிஸ், இராணுவம் மற்றும் விசேட அதிரடிப்படை முகாம்கள் சூழ இருக்கின்ற செங்கலடிப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவது ஆயுதக்குழுக்களின் கைவரிசையே என தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக் காலத்தில் செங்கலடி வர்த்தகர்களிடம் தொலைபேசி லமாக கப்பம் கோரப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டன. எனினும் முறைப்பாட்டாளர்கள் பின்னர் தொலை பேசி மூலம் அச்சுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரான் அணு ஆயுதம் தயாரிக்காது,,,,

இரான் அணு ஆயுதத்தில் நம்பிக்கை கொண்ட நாடல்ல என்றும், அது அப்படியான ஆயுதத்தை தயாரிக்காது என்றும் இரானின் அதியுயர் மதத்தலைவரான அயதொல்லா அலி கமெனி கூறியுள்ளார். இரானின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது நாசகாரி கப்பலின் வெள்ளோட்ட வைபவத்தில் உரையாற்றிய அவர், சில மேற்குலக அதிகாரிகள் காலாவதியான, அர்த்தமற்ற கருத்தை திரும்பத்திரும்பக் கூறிவருவதாக கூறினார். இரானின் தற்போதைய மற்றும் கடந்தகால நடவடிக்கைகள் அணு ஆயுதத்தை தயாரிப்பதுடன் தொடர்பு பட்டவை என்று சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் முதல் தடவையாக கூறிய மறு தினம் அவரது இந்த அறிக்கை வந்துள்ளது

இயேசு கிறிஸ்துவை இழிவுபடுத்தும் படம்

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில், இயேசு கிறிஸ்து ஒரு கையில் சிகரெட்டையும், இன்னொரு கையில் பீர் டப்பா ஒன்றையும் வைத்திருப்பது போன்ற படங்களுடன் அச்சிட்டு வெளியான ஆரம்பப் பள்ளி பாடப் புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்திருக்கிறார்கள். அந்தப் புத்தகத்தின் பதிப்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மேகாலய மாநில கல்வி அமைச்சர் அம்பரீன் லிங்டோ அறிவித்துள்ளார். இவ்வாறு பாடப் புத்தகம் அச்சிடப்பட்டது, சர்வமதத்தவர்களும் ஒன்றாக இணைந்து வாழும் இந்தியப் பாரம்பரியத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளதாக கத்தோலிக்கத் தேவாலாய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்தக் குறிப்பிட்ட பதிப்பாளர், கத்தோலிக்கப் பள்ளிகளில் எந்தவிதப் புத்தகங்களையும் விற்பனை செய்வதற்கு இந்திய கத்தோலிக்க தேவாலயம் தடை விதித்துள்ளது.

அமெரிக்காவில் பயங்கரவாதம் - மனிதாபிமானம் தொடர்பான பிரித்தறியும் வழக்கு,

அமெரிக்காவில் பயங்கரவாதமும், பயங்கரவாதத்தினால் பாதிக்கபட்டோருக்கானமனிதாபிமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வேலைத்திட்டங்களையும் வேறுபடுத்தி தெளிவு படுத்தும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அல்-ஹை டா, குர்திஸ் விடுதலை அமைப்பு, விடுதலைப்புலிகள் ஆகியன அமெரிக்காவில் பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டன. ஆனால் குறித்த அமைப்புக்களுடன் தொடர்பான அல்லது அந்த இனம் மதம் சார்ந்த மனிதாபிமான அமைப்புக்கள் நிவாரணம், புனர்வாழ்வு, சமாதானம் தொடர்பில் பணிபுரிகின்றன. ஆனால் இந்த தன்னார்வ அமைப்புக்களை பயங்கரவாதத்திற்கு உதவியவர்கள் என்ற பேரில் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. மட்டுமன்றி பயங்கரவாத அமைப்புக்களிற்குள்ளும் மனிதாபிமான அமைப்புக்கள் பல பணிகளை செய்து வருகின்றன. ஆகவே இவைகளை இனம் கண்டுஇவர்களது தடைகளை நீக்கி செயற்படவைக்கவேண்டும் என இடது சாரிஅமைப்புக்கள் ஒன்று சேர்ந்து மனிதாபிமான சட்டங்களிற்கான திட்டம் என்ற அமைப்பு வழக்கு ஒன்றினை தாக்கல் செய்தது. இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.