சனி, 20 பிப்ரவரி, 2010

யாழ்ப்பாணத்தில் நிவாரணம் என்ற பெயரில்...........

நிவாரணம் பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாணத்தில் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் அலுவலகம் உறுப்பினர்களை சேர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி வீதியில் அமைந்துள்ள, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தின் முன்னால் நாள்தோறும் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதைக் காணமுடிகிறது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தி;ல் மீள்குடியமர்ந்துள்ள, மக்கள் மத்தியில் காணாமல் போனோரின் விபரங்களை பெற்றுக்கொடுத்தல், தொழில் வாய்ப்பு, நிவாரணங்கள் மற்றும் ஏனைய நிவாரணங்களை பெற்றுக்கொடுப்பதாக உறுதியளித்தே இந்த உறுப்பினர் சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண மற்றும் வன்னியின் அமைப்பாளர் திலக்குமார உடுகமவின் தகவல்படி இதுவரை யாழ்ப்பாணத்தில் 26 ஆயிரம் பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையை பெற்றுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இந்த விடயங்களுக்காக நிரப்பப்படும் விண்ணப்பம் ஒன்றுக்கு இடம்பெயர்ந்தோரிடம் இருந்து 20 ரூபா அறிவிடப்படுகிறது. இடம்பெயர்ந்தோரில் பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை விண்ணப்பங்கள் எனத் தெரியாமல், தமது காணாமல் போன பிள்ளைகளை கண்டுபிடிக்கும் விண்ணப்பங்களாக அதனை கருதி அதில் கையொப்பமிட்டு கையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தின் பல்வேறு இடங்களிலும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 11 அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களில், மக்களிடம் இருந்து பல்வேறு உறுதிமொழிகளின் அடிப்படையில் பணம் அறவிடப்பட்டு வருவதாக முறைப்பர்டுகள் கிடைத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக