வெள்ளி, 19 நவம்பர், 2010

உயிர் விலைகள்..

விடுதலையின் பிரசவிப்பிற்காய்
வடுக்களை ஏற்றாய்
வசந்தத்தை தொலைத்து
வடிவிழந்து கிடக்கிறாய்
துடிக்கிறது மனசு

பாதகர் கால்கள்
பதிகிறது உன்னில்
வெஞ்சினம் கொள்வாய்
வேதனை வேண்டாம்
தேற்றிடு மனதை.

நீதிக்கான யுத்தம்
அர்த்தமற்றுப்போகுமா.....?
நிறைந்து கிடக்கும் வரலாறு
மறைந்திடுமா..........?
கொடுதலை என்னும்
நிலை வந்த போதும்
விடுதலை நிலை மாறா
தலைவன்............
உயிர் நீக்கத்தயங்காத
உத்தமர்கள்........
குடும்பச் சுமையோடு
விடுதலைச் சுமையை
முழுதாய்ச் சுமந்த மக்கள்.......
குடும்பமே எல்லையில் நின்று
கடுங்சமர் புரிந்த வரலாறு.......

இப்படி இப்படி
எத்தனையோ சுமந்தாய்
எல்லாமே அழிந்துபோகுமா.....?
உன் தேகமெங்கும்
திட்டுத்திட்டாய்
கொட்டுண்டு கிடக்கிறது
உயிர் விலைகள்
அத்தனையும் வீணாகிப்போய் விடுமா?

கிட்ட நின்று
எட்டிப்பார்த்தோம்
தொட்டிடத்தான் முடியவில்லை
ஆனாலும்.........
பாதைகள் மாறலாம்
உனக்கான
பயணம் ஓய்ந்திடுமா........????