திங்கள், 17 மே, 2010

இறுதி மூச்சு வரை தன்மானம் வேண்டி போராடிய அந்த இறுதி நாள் .............................


நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலமர்வு நிகழ்வு: வி.ருத்ரகுமாரன் ஆற்றிய உரை





தமிழ் ஈழ விடுதலைப் பயிருக்கு தம் உயிர்களை எருவாக்கிய எமது மாவீரர்களுக்கும் சிங்கள பேரினவாதத்தின் இனப்படுகொலைக்கு பலியான பொது மக்களுக்கும் முதற்கண் எனது வணக்கஙகளை தெரிவித்துக் கொள்கின்றேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இம் முதலமர்வு நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் ஜனாதிபதி ஜோன்சன் அவர்களது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் சட்டமா அதிபராக விளங்கிய திரு Ramsey Clark அவர்களே! மதியுரைக்குழு உறுப்பினர்களே! சக தெரிவு செய்யப்பட்ட அரசவை பிரதிநிதிகளே! புலம் பெயர்ந்து வாழும் தமிழீழ மக்களே! எமது தமிழீழத் தாயகத்தில் வாழ்ந்து வரும் எமதருமை உறவுகளே! தமிழ்நாட்டு சகோதரர்களே! உலகத் தமிழ் மக்களே! உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதி நாள் - May 18 .....


முள்ளிவாய்க்காலில் தமிழரின் வீரம்செறிந்த விடுதலைப் போருக்கு முடிவுரை எழுதி விட்டதாக சிங்கள தேசம் மார்தட்டுகிறது. இந்தப் பேரழிவின் முதலாவது ஆண்டு நிறைவை சிங்களதேசம் பூரிப்போடு கொண்டாடுகிறது. அவர்கள் எம்மை முழுமையாக அடிமை கொண்டதை.எமது நிலம் முழுமையாக விழுங்கப்பட்டு விட்டதை நினைவு கூர்ந்து கொண்டாட்டம் நடத்துகிறார்கள்.

அராஜகத்தின் உச்சம்.....................

ஆயுதப் போராட்டம் ஓய்ந்து ஆண்டொன்றை எட்டி நிற்கிறது. எத்தனையோ துன்பங்கள், துயரங்களை கடந்தும் எந்தக் குறிக்கோளையும் எட்டாமலே இறுதி முடிவை எட்டிவிட்டது ஆயுதப் போராட்டம். கடந்த வருடம் இதே காலப்பகுதியில் வன்னி மண்ணில் அரங்கேறிய கொலை வெறியாட்டம், நம் இனத்தின் வாழ்வாதார ஆணி வேர்களையே அடியோடு சாய்த்துவிட்டது.

எங்கள் மீதான தடையை நீக்கு....!

எந்த ஒரு இயக்கமானாலும் அல்லது எந்த ஒரு நடைமுறையானாலும் அது கடந்த காலத்தின் துகள்களிலிருந்தே நமக்கு கிடைக்கிறது. கடந்த கால படிப்பினைகள் நம்மை எந்த பாதையை தேர்ந்தெடுக்க வேண்டுமென அறிவுறுத்துகிறது. அதன்படியே நம்மை முந்திச் செல்ல நாம் இன்றைய நடைமுறைக்கு ஏற்ற ஒரு செயலை கையிலெடுக்க தொடங்குகிறோம்.

தமிழ்பேசும் உறவுகளுக்கு களமுனைப்போராளியின் வேண்டுகோள்........................

தமிழீழம்

17.05.2010


எம் உயிரிலும் மேலான தமிழ்பேசும் மக்களே!
முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக எமது விடுதலைப் போராட்டம் சந்தித்த சவால்களும்,நெருக்கடிகளும் எண்ணிப்பார்க்க முடியாதவை.

உலகமயமாக்கல் என்ற நவீன கொள்கைகளுக்குள்ளும்,உலக பயங்கரவாத எதிர்ப்பு என்ற முரண்பாடான வலைசிக்கல்களுக்குள்ளும் விடுதலைக்காக போராடும் தேசங்கள் காணாமல் போகின்றது என்பதே யதார்த்தம்.
இந்த நவீன கொள்கை ஒட்டுமொத்தமாக உலகதமிழினத்தின் விடுதலைக் குரலை நசுக்கி எமது போராட்டத்தை குழிதோண்டி புதைத்திருக்கிறது.

எந்த ஒரு நாட்டினது உதவியின்றி எம்கைகளை நம்பியே நாம் போராடினோம்.
எம்மை அழிக்கவந்தவரது கைகளை தடுக்க எங்களது வலிமையையே நம்பினோம்.ஆனால் சிங்களபேரினவாதமோ உலகெங்கும் ஓடிச்சென்று ஒப்பந்தங்கள் செய்து,ஆயுதங்களை குவித்து ஈழதேசத்தில் அரக்கதாண்டவத்தை அரங்கேற்றியது.சர்வதேசம் ஒருதேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை புரிந்து கொள்ளாமல் சிங்கள பேரினவாதத்தின்
போலிப்பரப்புரைகளை நம்பியது எப்படி?உலகத்தின் தெருக்களெல்லாம் எம்மக்கள் கண்ணீரோடு திரண்டு நின்ற போதும் எமது போராட்ட நியாயத்தை சர்வதேசத்தின் செவிகளுக்குள் உரக்க சொல்வதற்கு நாம் தவறிவிட்டோம்
என்பதே உண்மை.

எம் வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளுடன் நாம் போரிட்டோம், தாங்க முடியாத சுமைகளை எம்மக்கள் சுமந்து கொண்டனர்.ஆனாலும் எமது நியாயமான குரலை,எவராலும் மனித நேயத்துடன் புரிந்து கொள்ளவில்லையே என்ற கனத்த மனதோடு காத்திருக்காமல் சர்வதேசத்தின் செவிகளுக்கு எமதுஉரிமையின் அவசியத்தை உணர்த்திக் கொண்டே இருப்போம்.

இப்போது  தாயகத்தில் நடப்பது என்ன?

காணமல்போதல்,கடத்தல்கள்,கைதுகள்,படுகொலைகள் மீண்டும் தொடர்கதையாகிறது.கட்டுப்படுத்த முடியாத களையாக கலாசார சீரழிவு தொடர்கிறது.தமிழினம்,தமிழ்நிலம்,சிங்கள மயமாக்கபடுகிறது.இந்நிலை எம் தேசியத்தை அழிவுப் பாதைக்கே கொண்டு செல்லும் என்பதே உண்மை.
இந்நிலையில் தமிழினம் திரண்டெழுந்து உரிமைக்காக குரல் கொடுக்கவேண்டும்.
இன்றுவரை தமிழ் மண்ணுக்காக போராடி தம்முயிர்விதைத்த உறவுகளை எங்கள்மனங்களிலிருத்தி அவர்களின் இலட்சியத்தை சுமந்தபடி நடப்போம்.

சிங்கள பேரினவாதத்தால் திட்டமிட்டு உருவாக்கப்படும் புலனாய்வுரீதியான பொய்ப்பரப்புரைகள் உட்பட தமிழ்மக்களுக்குள்உலவுகின்றமுரண்பாடுகளை களைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையையும்,வழிகாட்டலையும்,
ஏற்று மண்ணுக்காக ஆகுதியான மாவீரர்களினதும்,மக்களினதும்,கனவுகளை வென்றெடுக்க உணர்வுரீதியாக ஒன்றுபட்டு ஒன்றுதிரள தமிழ்தேசியத்தின் பெயரால் வேண்டிக்கொள்கிறேன்.


                                       "புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம்"

இவ்வண்ணம்,
இன்றுவரை களமுனையில்
களமாடும்புலனாய்வுப்போராளி.
மா.ஆதித்தன்

புலிகளின் நடமாட்டம் -இராணுவம் எச்சரிக்கை

மன்னார் பகுதியில் உள்ள காட்டு பகுதிக்குள் தமிழ் ஈழ விடுதலை புலிகளின் நட மாட்டம் இருப்பதாக இராணுவம் தெரிவித்துள்ளது . மன்னர் பகுதி கட்டுக்குள் ரோந்து சென்ற படையினர் மனித நடமாட்டத்தின் காலடி சுவடுகளை கண்டு பிடித்துள்ளனர் . ஆங்காங்கே தமது காலடி சுவடுகளை அழித்த வண்ணம் புலிகள் நகர்ந்து சென்றுள்ளனர் . இந்த பகுதியில் உலவும் புலிகளிட்க்கு உணவுகள் கொடுப்போர் மீதும் அவர்களை பாதுகாப்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க படும் என இராணுவம் மக்களை எச்சரித்துள்ளது . மன்னார் பகுதி தொடர் கிளிநொச்சி முல்லை காடுகள் வரை இந்த மனித காலடி சுவடுகளை இராணுவம் பரவலாக கண்டறிந்துள்ளது .இதை அடுத்து மன்னார் மற்றும் பரந்தன் பகுதியில் அதனை சுற்றியுள்ள மக்களை கூட்டதிட்க்கு அழைத்த படையினர் இந்த பகுதியில் விடுதலை புலிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் அவரக்ளிட்க்கு உணவு மற்றும் அடைக்கலம் மற்றும் தகவல் வழங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க படும் என மக்களை அழைத்து எச்சரிக்கை செய்து படையினர் அனுப்பி யுள்ளனர் . அத்தோடு யாரவது புலிகளின் நடமாட்டத்தை சந்தேக மாணவர்களை கண்டால் தமக்கு அறியத் தரும்படி படையினர் மக்களிற்க்கு கூறி அனுப்பி யுள்ளனர்

உலகத்தமிழினத்தின் பிரதிநிதிகள் அணிவகுக்க, அமெரிக்காவின் அரசியலமைப்பு வரையப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சுதந்திர சதுக்கத்தில் இன்று நாடுகடந்த தமிழீழ அரசு தனது "இலட்சியப்பயணத்தை" ஆரம்பிக்கிறது



நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகளின் முதலாவது அமர்வு மே 17-19ல் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கூடுகிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அரசவையின் முதலமர்வு மே மாதம் 17-19ம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் கூடுகிறது என விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார். இன்று வெளியிடப்பட்ட அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,


தென் அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து இலங்கை கண்காணிப்பு..!


தென் அமெரிக்க நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெனிசூலாவில் புலிகளுக்கு ஆதரவான செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக வெளியான தகவல்களை அடுத்து ஹவானாவிற்கான இலங்கைத் தூதுவர், வெனிசூலாவிற்கு விஜயம் செய்துள்ளார். தூதுவர் தமாரா குளியநாயகம் தற்போது வெனிசூலா அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜயசிங்க தெரிவித்துள்ளார். எனினும், தூதுவர் மீண்டும் ஹவானா திரும்பியதன் பின்னரே பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான முழுத் தகவல்களையும் வெளியிட முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாடு கடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இதேவேளை, நாடு கடந்த தமிழீழ இராச்சிய உருவாக்கம் தொடர்பிலான செயற்பாடுகள் குறித்து இலங்கைத் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து செஞ்சட்டை கிளர்ச்சியாளர்கள் தலைவர் சுட்டுக் கொலை

தாய்லாந்தில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தலைமை வகித்து வந்த முன்னாள் ராணுவ அதிகாரி கத்தியா சவாஸ்திபோல் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முள்ளிவாய்க்கால் இன்றைய துயர நாளில் உறுதி எடுத்துக் கொள்வோம் எத்தடை வரிலும் தமிழீழம் அடையும்வரை அணையா நெருப்பாய் எழுந்துநிற்போம் உலகத் தமிழரெல்லாம் ஒரு தலைவர் மேதகு வே. பிரபாகரன் கீழ் அவரின் ஆற்றலில் இலட்சியம் வெல்லப்படுவது உறுதி.

சூசை அண்ணையின் இறுதி வார்த்தைகள் கடந்தவருடம் ...................

நாம் அடிபணியப் போவதில்...
உலகம் கைவிட்ட உறவுகள் 25000 பேர் கோர மரணம்!’ – தளபதி சூசை பேட்டி வன்னி: தமிழ் ஈழ போர் முனையில் கடந்த 24 மணி நேரத்துக்குள் சிங்கள ராணுவம் மேற்கொண்ட கொலை வெறித் தாக்குதலில் வரலாறு காணாத இனப்படுகொலை நிகழ்ந்து வருகிறது. படுகாயமடைந்த 25000 தமிழர்கள்

முள்ளிவாய்க்கால் முடிவல்ல தொடக்கமே: சீமான்

தமிழர்களின் துயரங்களுக்கு தீர்வு தனித்தமிழீழமே! முள்ளிவாய்க்கால் என்பது முடிவல்ல! தொடக்கமே! உறுதியோடு பயணிப்போம் என செந்தமிழ் சீமான் கூறினார்.
 நாம் தமிழர் இயக்கத்தின் கட்சி ஆரம்பநிகழ்வு பற்றியும், வலிசுமந்த மே 16,17,18 ஆம் திகதிகள் குறித்தும் வருடல் இணையம் சார்பாக கருத்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்….

மே 17 சர்வதேச தொலைத்தொடர்பு தினம்

உலகில் மிக வேகமாக வளர்ந்துவரும் துறைகளில் தொலைதொடர்பு துறையும் ஒன்றாகும். ஆரம்ப காலத்தில் மனிதன் தன் செய்தியை அல்லது தகவல்களைத் தொலைவிலுள்ளோருக்குப் பரிமாறிக் கொள்ள புறாக்களைப் பயன்படுத்தினான் என்று வரலாறு கூறுகின்றது. ஊருக்கு ஊர் முரசு அடித்து அறிவித்தல்கள் கொடுத்த காலங்கள் மாறி இன்று முழு உலகுடனும் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்ள வைக்கும் மின்னஞ்சல், குறுஞ்செய்திப்பரிமாற்றம் வரை தகவல் தொடர்புத்துறை அடைந்த மாற்றங்கள் ஏராளம்.

இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதப்பாவனை!


வன்னி இறுதி யுத்தத்தில் இரசாயன ஆயுதப்பாவனை! - சேனதீர வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வன்னிப் போரின் இறுதி நாள்களில் படையினர் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமை தொடர்பான தகவல்களை தெரிந்து வைத்திருந்த காரணத்தினாலேயே லங்கா ஈ நியூசின் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொட படைத்துறையின் புலானாய்வுப் பிரிவினரால் கடத்தப்பட்டதாக லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் சந்த றுவான் சேனதீர வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லோரும் ஒன்றிணைவோம் தேசியத்தின் பெயரால் ......சு.பரமேஸ்வரன்

அன்பார்ந்த தமிழீழ மக்களே.....
 தமிழர்களின் இன்றைய நிலை யாவரும் அறிந்ததுதான். ஆகவே திரும்பத் திரும்ப நாங்களும் அதையே கூறிக்கொண்டிருக்க முடியாது. இன்றைய நிலையில் துணிவுடன் முகம் காட்டி போராட யாரும் தயாராக இல்லை. ஒரு சிலர் முகம் காட்டி செயற்பட்டாலும் அவர்கள் நடுநிலைவாதியாகவே தங்களை இனங்காட்ட முற்படுகின்றார்கள். அல்லது எமது அடையாளங்களை ஏற்க மறுக்கின்றார்கள். போராட்டத்தின் வடிவத்தை மாற்றினால் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் போராட்ட சிந்தனையை மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது. இன்று வந்த ராஜாக்கள் நேற்று என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. ஆனால் அவர்கள் மாவீரரே என மேடைகளில் மட்டும் பேசுவதற்கு மறப்பதில்லை காரணம் அப்படி பேசாவிட்டால் ஆதரவு பெற முடியாது என்பதால். இன்று எவ்வளவோ பேர் கட்சிகள் குளுக்கள் என துவங்கி மாவீரரே என பேசுகிறார்களே தவிர அவர்களது கொள்கைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை எடுப்பதற்கு பாடுபடுவேன் என எவரும் கொள்கை வகுக்கவில்லை. இவர்கள் எவரும் உண்மையாக மாவீரர்கள் மதிப்பை தியாகத்தை அறிந்தவர்கள் அல்லர். எமது தேசியத் தலைவரும் சரி மாவீரர்களும் சரி அனைவரும் விடுதலைப்புலிகள் எனும் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் இன்று உலகம் முளுக்க எமது தலைவருக்கும் மாவீரர்களுக்கும் தடை. ஆகவே தமிழர்களுக்கு மட்டும்தான் தமிழீழ விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள் போராளிகள்!. உலகத்திற்கு மாவீரர்கள் போராளிகள் எமது தலைவர் என அனைவரும் தீவிரவாதிகள். ஆகவே எவரும் தங்களுடைய கட்சிகளின் கூட்டங்களிலே இல்லது அவர்களது அமைப்பின் கொள்கைகளிலே எமது போராளிகள் மீதும் தலைவர் மீதும் எமது பிரதிநிகள் இயக்கம் மீதும் குத்தப்பட்டிருக்கும் தீவிரவாத முத்திரையை கிழித்து அவர்களை உண்மையான போராளிகளாக விடுதலை வீரர்களாக உலகிற்கு காட்ட எவரும் சபதம் எடுக்கவில்லை. தமிழீழத்தில் சிங்களவன் எமது தூபிகள் வரலாற்றுச் சின்னங்கள் என அனைத்தையம் அழித்தொழிக்கின்றான். இங்கு இராஜதந்திரம் என்ற பெயரில் எமது தேசிய அடையாளங்களை மறைக்கின்றார்கள் இன்று முளைத்திருக்கும் இராஜாக்கள். ஆக அங்கே அழிப்பு இங்கே மறைப்பு பிறகு எதைக்கொண்டு நாம் வரலாறு படிப்பது? பிறகு எதைக்கொண்டு நாம் தமிழர் என அடையாளம் காண்பது. பிறகு எதைக்கொண்டு நாம் போராட்டம் நடத்துவது? இன்று வந்து ஜனநாயகம் பேசும் இராஜக்களின் படத்தைக்காட்டியா??. இன்று நடக்கும் அனைத்திற்கும் அடிப்படைப்பிரச்சினையே எமது பிரதிநிதிகள் மீது விதித்திருக்கும் தடைதான் காரணம். தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையை எடுத்து அவர்களை உண்மையான விடுதலைப்போராட் வீரர்களாக அடையாளம் காட்டுவதே மாவீரர்களுக்கு செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும். ஆகவே மக்களின் பிரச்சினைகளுக்கு வழிதேடும் அதே நேரம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை உலகம் முளுவதும் உடைத்தெரிய முளு மூச்சோடு இறங்க வேண்டும். அப்படிச் செய்வோமாக இருந்தால். உலகம் முளுதும் எமக்காக அடைந்து கிடக்கும் விடுதலை வீரர்களையும் தமிழீழ விடுதலைப்புலிகள் என தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இலட்சத்திற்கு மேலானவர்களை விடுதலை அடையச்செய்ய முடியும். அப்படிச் செய்து முடித்தால் புது வீரியத்தோடு நாம் எமது விடுதலை வீரர்களோடு இணைந்து முளு சுதந்திரத்தோடும் உலக நாடுகளின் ஆதரவோடும் போராடலாம். அதன் பின்பு இலங்கை பேரினவாத அரசாங்கத்தை இலகுவாக அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும். எனவே நமது தமிழீழ புரட்சிகர மாணவர்களுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றும் அதே நேரம் எமக்கு உலகம் விதித்த தடையை நீக்கி மிக ஆரோக்கியத்தோடு போராட்டத்தை தொடங்க எம்மோடு இணைந்து உங்களின் மாபொரும் ஆதரவை வழக்குமாறு உங்களை உரிமையோடு அழைக்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
 உங்களுடன் ஒருவனாக நன்றியுடன்
சு.பரமேஸ்வரன்