திங்கள், 17 மே, 2010

எல்லோரும் ஒன்றிணைவோம் தேசியத்தின் பெயரால் ......சு.பரமேஸ்வரன்

அன்பார்ந்த தமிழீழ மக்களே.....
 தமிழர்களின் இன்றைய நிலை யாவரும் அறிந்ததுதான். ஆகவே திரும்பத் திரும்ப நாங்களும் அதையே கூறிக்கொண்டிருக்க முடியாது. இன்றைய நிலையில் துணிவுடன் முகம் காட்டி போராட யாரும் தயாராக இல்லை. ஒரு சிலர் முகம் காட்டி செயற்பட்டாலும் அவர்கள் நடுநிலைவாதியாகவே தங்களை இனங்காட்ட முற்படுகின்றார்கள். அல்லது எமது அடையாளங்களை ஏற்க மறுக்கின்றார்கள். போராட்டத்தின் வடிவத்தை மாற்றினால் ஏற்றுக்கொள்ளலாம் ஆனால் போராட்ட சிந்தனையை மாற்றுவதற்கு அனுமதிக்க முடியாது. இன்று வந்த ராஜாக்கள் நேற்று என்ன செய்தார்கள் என்ற கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை. ஆனால் அவர்கள் மாவீரரே என மேடைகளில் மட்டும் பேசுவதற்கு மறப்பதில்லை காரணம் அப்படி பேசாவிட்டால் ஆதரவு பெற முடியாது என்பதால். இன்று எவ்வளவோ பேர் கட்சிகள் குளுக்கள் என துவங்கி மாவீரரே என பேசுகிறார்களே தவிர அவர்களது கொள்கைகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை எடுப்பதற்கு பாடுபடுவேன் என எவரும் கொள்கை வகுக்கவில்லை. இவர்கள் எவரும் உண்மையாக மாவீரர்கள் மதிப்பை தியாகத்தை அறிந்தவர்கள் அல்லர். எமது தேசியத் தலைவரும் சரி மாவீரர்களும் சரி அனைவரும் விடுதலைப்புலிகள் எனும் இயக்கத்தில் இருந்து வந்தவர்கள். ஆனால் இன்று உலகம் முளுக்க எமது தலைவருக்கும் மாவீரர்களுக்கும் தடை. ஆகவே தமிழர்களுக்கு மட்டும்தான் தமிழீழ விடுதலைப்புலிகளைச் சேர்ந்தவர்கள் போராளிகள்!. உலகத்திற்கு மாவீரர்கள் போராளிகள் எமது தலைவர் என அனைவரும் தீவிரவாதிகள். ஆகவே எவரும் தங்களுடைய கட்சிகளின் கூட்டங்களிலே இல்லது அவர்களது அமைப்பின் கொள்கைகளிலே எமது போராளிகள் மீதும் தலைவர் மீதும் எமது பிரதிநிகள் இயக்கம் மீதும் குத்தப்பட்டிருக்கும் தீவிரவாத முத்திரையை கிழித்து அவர்களை உண்மையான போராளிகளாக விடுதலை வீரர்களாக உலகிற்கு காட்ட எவரும் சபதம் எடுக்கவில்லை. தமிழீழத்தில் சிங்களவன் எமது தூபிகள் வரலாற்றுச் சின்னங்கள் என அனைத்தையம் அழித்தொழிக்கின்றான். இங்கு இராஜதந்திரம் என்ற பெயரில் எமது தேசிய அடையாளங்களை மறைக்கின்றார்கள் இன்று முளைத்திருக்கும் இராஜாக்கள். ஆக அங்கே அழிப்பு இங்கே மறைப்பு பிறகு எதைக்கொண்டு நாம் வரலாறு படிப்பது? பிறகு எதைக்கொண்டு நாம் தமிழர் என அடையாளம் காண்பது. பிறகு எதைக்கொண்டு நாம் போராட்டம் நடத்துவது? இன்று வந்து ஜனநாயகம் பேசும் இராஜக்களின் படத்தைக்காட்டியா??. இன்று நடக்கும் அனைத்திற்கும் அடிப்படைப்பிரச்சினையே எமது பிரதிநிதிகள் மீது விதித்திருக்கும் தடைதான் காரணம். தமிழீழ விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையை எடுத்து அவர்களை உண்மையான விடுதலைப்போராட் வீரர்களாக அடையாளம் காட்டுவதே மாவீரர்களுக்கு செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும். ஆகவே மக்களின் பிரச்சினைகளுக்கு வழிதேடும் அதே நேரம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை உலகம் முளுவதும் உடைத்தெரிய முளு மூச்சோடு இறங்க வேண்டும். அப்படிச் செய்வோமாக இருந்தால். உலகம் முளுதும் எமக்காக அடைந்து கிடக்கும் விடுதலை வீரர்களையும் தமிழீழ விடுதலைப்புலிகள் என தடுத்துவைக்கப்பட்டிருக்கும் இலட்சத்திற்கு மேலானவர்களை விடுதலை அடையச்செய்ய முடியும். அப்படிச் செய்து முடித்தால் புது வீரியத்தோடு நாம் எமது விடுதலை வீரர்களோடு இணைந்து முளு சுதந்திரத்தோடும் உலக நாடுகளின் ஆதரவோடும் போராடலாம். அதன் பின்பு இலங்கை பேரினவாத அரசாங்கத்தை இலகுவாக அனைத்துலக நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியும். எனவே நமது தமிழீழ புரட்சிகர மாணவர்களுடன் இணைந்து மக்களுக்கு சேவையாற்றும் அதே நேரம் எமக்கு உலகம் விதித்த தடையை நீக்கி மிக ஆரோக்கியத்தோடு போராட்டத்தை தொடங்க எம்மோடு இணைந்து உங்களின் மாபொரும் ஆதரவை வழக்குமாறு உங்களை உரிமையோடு அழைக்கின்றோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்
 உங்களுடன் ஒருவனாக நன்றியுடன்
சு.பரமேஸ்வரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக