வெள்ளி, 21 மே, 2010

தேசிய தலைவர் கற்றுத் தந்தது!!!

நாமும் கதை சொல்லி வெகு நாட்களாகி விட்டது. என்னவோ தெரியவில்லை நமது கிராமங்களில் கதை சொல்லி நமக்கு சில செய்திகளை புரிய வைக்கிறார்கள். அந்த கதைகள் நமது மனங்களில் இறுதிவரை தங்கி வருகிறது. இன்று போகும் தமிழீழ விடுதலை அரசியல் போக்கு நம்மை பெரும் வியப்புக்குள் ஆழ்த்துகிறது. விடுதலை போராட்டத்திற்கான வரலாற்று காரணங்கள், போராட்டம் துவக்கப்பட்ட காலத்திலிருந்து அது கருவி போராட்டமாக உருமாறிய காலக்கட்டங்கள். அதிலிருந்து மீட்டெடுக்கப்பட்ட தமிழனின் மானம், மரியாதை, உரிமை, தமிழனுக்கான வாழ்வடையாளம், அவனுக்கு கிடைத்த அங்கீகாரம் ஆகியவைகள் தற்காலிகமாக ஒரு பின்னடைவை சந்தித்திருக்கின்றன.

ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை!

ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கும் திட்டத்தில் மாற்றமில்லை என அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார். துருக்கி மற்றும் பிரேஸிலுடனான ஈரானின் அணுத் திட்டங்கள் திருப்தி அளிக்கும் வகையில் அமையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானின் அணுத் திட்டங்கள் தொடர்பில் மேற்குலக நாடுகள் தொடர்ச்சியாக சந்தேகம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சக்தி வளப் பயன்பாட்டுக்காக ஈரான் அணு ஆலைகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்ட போதிலும், ஆணுவாயு உற்பத்திகள் நடைபெறுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சரக்குக் கப்பல் கண்காணிப்பு வங்கி கொடுக்கல் வாங்கல் போன்றவை தொடர்பில் ஈரான் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்படக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், மேற்குலக நாடுகளின் இந்த தீர்மானத்திற்கு பிரேஸில் மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன. ஈரான் மீது பொருளாதார விதிக்கப்பட வேண்டுமென பல உறுப்பு நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மரணத்தின் விளிம்பில் மனித இனம்....


உலகின் பல ஆய்வாளர்களும் கூட கண்டுகொள்ளாத அல்லது ஒருவேளை கண்டு சொல்லாத மிகப்பெய செயல் ஒன்று தொடர்ந்து நடந்தபடி பூமியை வாட்டிவதைத்து உருக்கிக்கொண்டே இருக்கிறது. இமயமலை, ஆர்டிக், அண்டார்டிக் உருக மிக முக்கிய காரணம் நம் பூமியின் அடிப்பகுதியிலிருந்து மேல் எழும்பி வரும், வந்து கொண்டிருக்கும் லாவா மற்றும் மேக்மாவின் அளவு கடந்த, தடுக்கப்படாத வெப்பமே.

“செப்ரப்பர்-11” …. “மே – 17”……

2001 செப்ரெம்பர் 11இல் அமெரிக்காவில் நடத்தப்பட்ட இரட்டைக்கோபுரத் தாக்குதலின் பின்னர் “செப்ரெம்பர் 11′ என்ற குறியீட்டுச் சொல் புழக்கத்துக்கு வந்தது. அது சர்வதேச ரீதியில் பிரபலமடைந்துமிருக்கிறது. அதேவேளை இந்தத் தாக்குதலுக்குப் பின்னர், அதாவது “செப்ரெம்பர் 11 க்குப் பின்னரான நிலைமைகள்’ என்று அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வெளியுறவுக் கொள்கைகள் என்ற அளவிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த மாற்றங்கள், விளைவுகளின் அடிப்படையிலேயே மேற்படி குறியீட்டுச் சொல் கையாளப்படுகிறது. இதைப்போல “மே 17′ என்பது இலங்கைத் தீவில் எத்தகைய நிலைமைகளை உருவாக்கியிருக்கிறது?

காயப்பட்ட எமது போராளியை ஸ்ரீலங்கா இராணுவம் சித்ரவதை செய்து கொல்லும் ................?இதுவும் போற்குற்றமில்லையோ ?

வதை முகாம்களும், பெண் வாழ்வும் – டி.அருள் எழிலன்

நாற்பது வயதுக்குள்தான் இருக்கும் அந்தப் பெண்மணிக்கு. இப்போது அவரைப் பார்க்க அறுபது வயது முதிய பெண் போல தோற்றமளிக்கிறார். ஈழத்தின் வடபகுதி அரசுப் பள்ளியொன்றில் ஆசிரியையாக பணியாற்றிக் கொண்டிருந்தவரின் வாழ்வை வன்னி மீதான பேரினவாத யுத்தம் குலைத்துப் போட்டு விட்டது. ஒரு வழியாக அவர்கள் இங்கே கரைசேர்ந்திருக்கிறார்கள்.