செவ்வாய், 14 செப்டம்பர், 2010

அச்சுவேலியில் வெள்ளை வானில் கடத்தல் சம்பவம்

யாழ்ப்பாணம் அச்சுவேலிப் பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு விவசாயியை வெள்ளை வான் கடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது. கப்பம் கோரலுடன் தொடர்பு பட்டதாகவே இக் கடத்தல் சம்பவம் இடம் பெற்றதாகவும்  செய்திகள் தெரிவிக்கின்றன. கடத்தலுடன் தொடர்புபட்டவர்கள் இரண்டு லட்சம் கோரியதாகவும் பின்னர் ஒருலட்சமாக அக் கோரிக்கை மாறியதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் கடத்தப்பட்ட அன்றைய தினம் மாலையிலேயே அவர் யாழ் நகரப்பகுதியில் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. 44 வயதுடைய கே.சிவகுமார் என்பவரே கடத்தி விடுவிக்கப்பட்டவர் ஆவார். இவர் விடுவிக்கப்பட்டமைக்கு கடத்தல்காரர்களால் கேட்கப்பட்ட பணம் கொடுக்கப்பட்டது காரணமா என்பது அறியமுடியவில்லை. பொலிசார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் புத்தவிகாரை.

வடக்கின் பெரும்பாலான பகுதிகளில் புத்தவிகாரைகள் கட்டப்பட்டுள்ளன. இந்து வழிபாட்டுத் தலங்கள் பெருமளவு நிர்மூலமாக்கப்பட்டு பாழடைந்த நிலையில் கைவிடப்பட்டுள்ள நிலையில் புதிதாக புத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவது குறித்து  கடுமையான அதிருப்திகள் வெளிக்கிழம்பியுள்ளன. குறிப்பாக  இது ஒரு திட்டமிட்ட கலாசார அழிப்ப்பாகவும் ஆக்கிரமிப்பாகவும் ஆழும் தரப்பினால் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  இந்நிலையில் .முல்லைத்தீவு நகர்ப் பகுதியின் மையத்தில் புதிதாக ஒரு புத்தவிகாரை கட்டும் பணியில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

திலீபனுடன் முதலாம் நாள்........

காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார். “வோக்கிடோக்கி”யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற “வானை” நோக்கி நடக்கிறார்…. எல்லோரும் பின் தொடர்கிறோம்…. ஆம், அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகி விட்டது. மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர்….! வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது…. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையசைத்து வழியனுப்புகிறார்கள்.

இலங்கைப் பிரச்சினைகளை மூடிமறைக்க ஐ.நா.முயற்சி! - இன்னர் சிட்டி பிரஸ் குற்றச்சாட்டு

இலங்கை பிரச்சினைகளை மூடிமறைக்க ஐ.நா.செயலர் முயற்சிப்பதாக இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் மற்றும் அவரது பேச்சாளர் மார்ட்டின் சினர்கீ ஆகியோர் இலங்கை, சூடான் போன்ற நாடுகளில் தீவிரமிக்க விடயங்கள் குறித்து கருத்து வெளியிடாமை குறித்து இன்னர் சிட்டி பிரஸ் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில்  நாளாந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் போது இலங்கை, சூடான் மற்றும் கொங்கோ போன்ற நாடுகளில் முக்கியமான பிரச்சினைகள் குறித்து எந்தக் கருத்துக்களும் வெளியிடப்படவில்லை.

இரத்தினபுரி தோட்டமொன்றில் பதற்ற நிலை, தமிழ் மக்கள் இடம்பெயர்வு

இரத்தினபுரி மாவட்டம் நிவத்திகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேல குக்குலகலை தோட்டத்திலுள்ள தமிழர்களின் குடியிருப்புக்கள் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளன என்றும் அச்சம் காரணமாக தமிழ்க் குடும்பங்கள் இடம் பெயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தேல குக்குலகலைத் தோட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த காவற்காரர் ஒருவர் கரவிட்ட திமியாவ என்னுமிடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த இரண்டு வீடுகள் தீக்கிரைக்கப்பட்டதாகவும் பத்துக்கும் மேற்பட்ட வீடுகளிலிருந்து பொருட்கள் சூறையாடப்பட்டுள்ளன என்றும் தெரியவருகின்றது.

"எகானமிஸ்ட்" இதழ் மீண்டும் பறிமுதல்.

நேரடியாகவும், தயவு தாட்சண்டமின்றியும் கருத்துக்களைத் தெரிவிக்கும் எகானமிஸ்ட் நாளிதழின் தலையங்கங்கங்கள் இலங்கை அதிகாரிகளை சில முறை கொதிப்படையச் செய்துள்ளன. சில முறை அதன் அதிகாரிகளை எரிச்சலடையச் செய்துள்ளன. இதன் காரணமாக உலகில் பெரிய அளவில் வாசிக்கப்படும் அரசியல் மற்றும் வர்ச்சக சஞ்சிகைளில் ஒன்றான எகானமிஸ்ட்டின் பிரதிகள் இலங்கையில் இருக்கும் அதன் ஒரே முகவரை சென்றடையும் முன்பே பல முறை பறிமுதல் செய்யப்படுகின்றன.

கிணற்றில் இருந்து ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்

கைதடி வடக்கில்  காணாமல் போயிருந்தவரை தேடிய போது காணாமல் போயிருந்த நபர் கிணற்றில் இருந்து சடலமாக மிதப்பது தெரியவந்தது. வீட்டுக்கு அருகில் இருந்த கிணற்றில் இவர் தவறுதலாக வீழ்ந்து இறந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது. அயலவர்களின் உதவியுடன் சடலம் மேலே எடுக்கப்பட்டு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. கைதடி வடக்கை சேர்ந்த கந்தையா டபிளேஸ்வரன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்

வீரவேங்கை நிதி ( மன்னார் மாவட்டம் )

மன்னார் மாவட்டத்தில் வீரமரணம் அடைந்த முதல் புலி. இராணுவச் சுற்றிவளைப்பின் போது இறுதி வரை போராடி எதிரியின் கையில் தான் பிடிபடக்கூடாது என நினைத்து தன் கைத் துப்பாக்கியாலே தன்னைத் தானே சுட்டு எமது இயக்க மரபுக்கு இணங்க வீர மரணத்தை அடைந்தவன் நிதி.அன்று நாங்கள் நிதியைப் பற்றி அறிந்திருந்தோமே தவிர விடுதலையைப் பற்றிப் புரியவில்லை. நிதியின் இறுதி நிகழ்வு பெரிதாக ஊர்வலமாக நடத்தப்படவில்லை. அன்றைய காலகட்டம் மிகப்பயஙகரமாக இருந்ததால், ஒவ்வொருவர் வாயிலும் மெதுவாகப் பேசப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் படையினர்

யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களின் பாவனை போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை படையினரே தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து தமக்கு நெருக்கமானவர்கள் மூலம் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கீரிமலை தீர்த்தக் கேணிக்கு “தம்பல பட்டுணவ”

வரலாற்றுப் புகழ் பெற்ற கீரிமலை தீர்த்தக் கேணிக்கு "தம்பல பட்டுணவ" எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். குதிரை முகம் கொண்ட மன்னன் மகளின் பிணியறுத்து முக அழகை கொடுத்த வரலாற்று சிறப்பு மிக்க மாவட்டபுரம் கீரிமலை தீர்த்த கேணிக்கு சிங்களவர்களால் பெயர்பலகைசூட்டப்பட்டுள்ளது.