செவ்வாய், 14 செப்டம்பர், 2010

யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் படையினர்

யாழ்ப்பாணத்தில் சமூகச் சீர்கேடுகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் படையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஆபாசப் புத்தகங்கள் மற்றும் சீடீக்களின் விற்பனை, கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துக்களின் பாவனை போன்றவற்றை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் படையினர் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.அத்துடன் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துக்களை படையினரே தென்னிலங்கையிலிருந்து கொண்டு வந்து தமக்கு நெருக்கமானவர்கள் மூலம் மக்களிடையே குறிப்பாக இளைஞர்களிடையே விநியோகித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே வெளிநாட்டிலுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாகப் பணத்தினைப் பெற்றுக் கொள்ளும் யாழ்ப்பாண இளைஞர்கள் ஆடம்பரப் பிரியர்களாக மாறியிருப்பதாகவும் இவர்களில் பலர் கஞ்சா அபின் போன்ற போதை வஸ்துப் பாவனையை ஆரம்பித்திருப்பதாகவும் யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.யாழ்ப்பாண இளைஞர்கள் வழிதவறிப் போவதைத் தடுப்பதற்கு வெளிநாட்டிலுள்ள உறவினர்களும் இளைஞர் யுவதிகளுக்கு பெருமளவு பணத்தை நேரடியாக வழங்குவதும் ஒரு காரணம் எனக் குறிப்பிடும் ஆர்வலர்கள் பண விடயத்தில் சற்றுப் பொறுப்புடன் நடந்து கொள்வது புலத்திலுள்ளவர்களின் கடமை எனவும் சுட்டிக் காட்டுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக