புதன், 9 ஜூன், 2010

வரிபுலிப் படையாய்... -கண்மணி

வீசியடித்த புரட்சிப் புயல்
ஓய்ந்ததாய் பரப்புரை
செய்யப்பட்டது.
புயலுக்கு ஓய்வா?
புரியாத மடையர்கள்

கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்


ஆண்குரல்:- “அம்மா.... எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக.... என்னால் செய்யக்கூடிய தியாகம் எதுவோ.... அதைத்தான் நான் செய்யப்போகிறன்.. அதை மனமகிழ்வோடும் பூரண சந்தோஷத்தோடும் செய்கின்றேன். உங்களுக்கு இது ஜீரணிக்க முடியாத வேதனையாய்த்தான் இருக்கும். எனவே எங்களின் சாவுக்காக கண்ணீர் வடித்து கவலையடைவதைவிட நீங்கள் அதை ஏற்றுக்கொள்வதே எனக்கு நீங்கள் செய்யும் இறுதிக்கடனாய் ஆத்மாசாந்தியாய் இருக்கும் அம்மா..... உங்கள் மகன் நினைவுக்கல்லில் நிமிர்ந்து நிற்பான்.. நீங்கள் சுவாசிக்கும் காற்றில் நனையும் மழைத்துளியில் எல்லாம் உங்கள் மகன் கலந்திருப்பான்....”


கரும்புலி மேஜர் அறிவுக்குமரனின் அன்புசுமந்த வரிகள் இவை... தன்தாயை நேசித்தது போலவே... தன் தாயகத்தையும் பூசித்த தேசப்பற்றாளன்.....

ஆயுதங்கள் மெளனிக்கப்பட்ட நிலையில்,.................!

எந்தவொரு சமுதாயத்தின் எதிர்காலப் போக்கும், அதன்கலாச்சார, பொருண்மிய நிலைப்பாடுகளும் சமுதாய வளர்ச்சியும் அந்த சமுதாயத்தினைச் சார்ந்த இளையோரின் பங்களிப்பிலேயே முக்கியமாகத் தங்கியிருக்கின்றன. இது உலகின் அனைத்து சமுதாயங்களிற்கும் பொருந்தும் .ஆனால் ஈழத்தமிழர்கள் என்ற எமது இன சமுதாயத்திற்கு தற்போதைய நிலைமையில் தமிழ் இளையோர்களின் பங்களிப்பென்பது இன்றியமையாத தேவையாக மாறியிருக்கின்றது.

தேசியத் தலைவர் அவர்களது ஆன்மா மீது நடாத்தப்படும் விசாரணைகள் நிறுத்தப்பட வேண்டும்!-ஈழநாடு

ஈழத் தமிழர்களுக்கான பலம் பொருந்திய சக்தியாக, ஈழத் தமிழர்களுக்கான பேரம் பேசும் வலுவாக இருந்த விடுதலைப் புலிகளைப் பிளவு படுத்துவதன் மூலம், அந்த மாபெரும் சக்தியை முள்ளிவாங்க்காலில் முடங்கச் செய்தது சிங்கள அரசு. இது, கொடூரங்கள், மனிதாபிமானமற்ற போர்க் குற்றங்கள் நிறைந்த செயற்பாடாக இருப்பினும்,

ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் மௌனம்!

இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றச் செயல்களில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம் மற்றும் அதன் செயலாளர் நாயகம் பான் கீ மூன், பிரதம அதிகாரி விஜய் நம்பியார் ஆகியோரின் பங்களிப்பு பற்றி சர்வதேச நெருக்கடிகள் குழுவும் ஏனைய அமைப்புக்களும் கேள்வி எழுப்பியுள்ளன.

வடக்கு கிழக்கில் ஒரு சட்டமும் தெற்கில் வேறொரு சட்டமும்

யுத்த காலத்தில் குண்டு வைக்கச் சொன்னவர்களுக்கு ஆடம்பர வசதிகளை வழங்கி அவர்களை அமைச்சர் பதவிகளில் இருத்தி விட்டு அவர்களது கட்டளைகளின் படி செயற்பட்டவர்களை சிறையில் அடைத்து வைத்திருப்பது எந்த வகையில் நியாயம் என

இனவாதம் தூண்டப்படுமானால் போராட்டம் வன்னிக் காட்டிலன்றி .................!?

அரசியல் தீர்வை எட்டுவதற்கு கிடைத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தை தவறவிட்டு மீண்டும் இனவாதத்தை தூண்டிவிட்டு பழைய அழிவுப் பாதையிலேயே சென்றால் நாட்டை பிளவுபடுத்தும் போராட்டம் இனி வன்னிக் காட்டிலன்றி, படித்த புலம்பெயர் வாழ் தமிழ் மக்களால் நியூயோர்க், வாஷிங்டன் போன்ற பலம் வாய்ந்த இடங்களில் இருந்தே ஆரம்பமாகும்

செய்தித் துளிகள்


13 ஆவது திருத்த சட்டத்தை குப்பையில் போடவேண்டும்!!

அரசியலமைப்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு முன்பதாக 13ஆவது திருத்த சட்டமூலத்தை குப்பைத் தொட்டியில் வீசியெறிந்து விட்டு தேர்தல் முறைமையை முற்றாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

7 ஒப்பந்தங்கள்?!!!!!

தமிழர் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வு, முகாம்களில் தங்கியுள்ளோரை விரைவாக மீள்குடியமர்த்துவது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ராஜபக்சவுடன், பிரதமர் மன்மோகன் சிங் விவாதித்த நிலையில், இந்தியா - இலங்கை இடையே 7 ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தானது.

சீறிவரும் புலியாக...!-கண்மணி



ஏற்றமும் இறக்கமும் கொண்டதுதான் வரலாறு. சமநிலை காண்பதற்கு வரலாறு ஒன்றும் எந்திரம் அல்ல. அது தம்மை இழந்து, தம்மை அழித்து, அதிலிருந்து துளிர்விடும் ஓர் அற்புதம். படர்ந்து வளரும் மரங்களின் இலைகள் அந்த மரம் உயிர்வாழ உரமாவதை இயற்கை தத்துவமாக நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. ஆகவே எந்தஒரு இயக்கமானாலும் போராட்ட வரலாறானாலும் அதை விழுவதும், எழுவதும் இயல்பானதுதான். விழுவதிலிருந்து எழாமல் இருப்பதுதான் நம்மை ஏற்றமுறாமல் செய்துவிடும்.