செவ்வாய், 18 ஜனவரி, 2011

யாழ் கச்சேரி நல்லூரில் 65பவுண் நகைகள் கத்திமுனையில் கொள்ளை

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் பகுதி வீடொன்றில் ஓட்டைப் பிரித்து உள் நுழைந்த ஐவர் கொண்ட திருடர் குழுவொன்று அங்குள்ளவர்களை மிரட்டி 65 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,வேலுப்பிள்ளை வேதநாயகம் வயது 70 என்பவரது வீட்டிற்குள் சென்ற திருடர் குழுவே அவரது மனைவி வேதநாயகம் பரிமளகாந்தி (வயது 62), அவரது மகளான வேதநாயகம் அர்ச்சனா (வயது21) இவர்களைக் கத்தி முனையில் வைத்தே நகைகளைகொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

படையினரின் சோதனைகள் சுற்றிவளைப்புக்கள் அதிகரிப்பு!!

மானிப்பாயில்  துப்பாக்கிப் பிரயோகத்தைத் தொடர்ந்து நவாலிப் பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் படையினர் ஈடுபட்டுள்ளதுடன் மானிப்பாய் நவாலி பிரதான வீதிகளில் இராணுவத்தினர் கடும் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
மானிப்பாய் சங்கரப்பிள்ளை வீதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவ் வீட்டின் குடும்பத்தலைவி தெரிவிக்கையில்
,

மாவை சொல்வது அப்பட்டமான பொய் – பத்மினி சிதம்பரநாதன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தமிழ் தேசிய மக்கள் முன்னணி முக்கிஸ்தர் பத்மினி சிதம்பரநாதனுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ள கருத்து முற்றுமுழுதான பொய் என்று பத்மினி சிதம்பரநாதன்  தெரிவித்துள்ளார்.கூட்டுச் சேர்வது தொடர்பில் பத்மினி சிதம்பரநாதனுடனும் பேச்சு நடத்திவருகின்றோம் என்று மாவை சேனாதிராசா தெரிவித்துள்ள கருத்துத் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை

வயாவிளான் கிழக்குப்பகுதிகளில் கண்ணிவெடி அகற்றப்பட்டமைக்கான சான்றிதழ் கிடைக்கப்பெற்றபோதும் பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து அந்தப்பகுதியில் மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை என்றுதெரிவிக்கப்படுகின்றது.வலி.வடக்கு பிரதேசங்க ளில் மக்களை மீளக்குடிய மர்த்துவதற்கான நடவடிக்கைகள் கடந்த வருடம் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அழைப்பை அலட்சியம் செய்தார் சந்திரிகா

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க வருமாறு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை அவர் அலட்சியம் செய்துவருவதாக ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர் தகவல் தெரிவித்துள்ளார்.சாட்சியமளிக்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டு இரண்டு வாரங்கள் கழிந்த நிலையிலும் அது தொடர்பில் அவர் இதுவரை பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகின்றது. அத்துடன் எதிர்வரும் காலங்களிலும் அவர் பதிலளிக்கவோ, சாட்சியமளிக்கவோ தயாராக இல்லை என்பதாகச் சந்திரிகாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரகசிய சுவிஸ் வங்கிக்கணக்கு விபரங்களை வெளியிடவுள்ள விக்கிலீக்ஸ்

அதிரடியாக இரகசியங்களை வெளியிட்டுவரும் இணையத்தளமான விக்கிலீக்ஸிடம் தற்போது சுமார் 2000 சுவிஸ் வங்கிக்கணக்காளர்களின் இரகசிய கணக்கு விபரங்கள் அடங்கிய 2 இறுவட்டுக்கள் கிடைத்துள்ளதால் இவை கூடிய விரைவில் வெளியாகலாம் எனஎதிர்ப்பார்க்கப்படுகின்றது.இந்த இறுவட்டுக்கள் சுவிஸ் வங்கியின் முன்னாள் உழியர்களில் ஒருவரான ருடோல்ப் எல்மாராலேயே அசாஞ்சேவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்கள் கொழும்புக்குப் பலவந்தமாக அனுப்பிவைப்பு

கொழும்பில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுவதற்காக வவுனியா மெனிக்பாம் முகாமில் இருந்து பெண்களும் சிறுமியரும் பலவந்தமாக அனுப்பி வைக்கப்படுகின்றனர் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 18பேரும், திங்களன்று 30 பேரும் வவுனியாவில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.