செவ்வாய், 18 ஜனவரி, 2011

யாழ் கச்சேரி நல்லூரில் 65பவுண் நகைகள் கத்திமுனையில் கொள்ளை

யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் பகுதி வீடொன்றில் ஓட்டைப் பிரித்து உள் நுழைந்த ஐவர் கொண்ட திருடர் குழுவொன்று அங்குள்ளவர்களை மிரட்டி 65 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,வேலுப்பிள்ளை வேதநாயகம் வயது 70 என்பவரது வீட்டிற்குள் சென்ற திருடர் குழுவே அவரது மனைவி வேதநாயகம் பரிமளகாந்தி (வயது 62), அவரது மகளான வேதநாயகம் அர்ச்சனா (வயது21) இவர்களைக் கத்தி முனையில் வைத்தே நகைகளைகொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற பகுதியிலிருந்து 150 மீற்றர் தூரத்தில் மல்லாகம் மாவட்ட நீதவானது வீடு அமைந்துளமை குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பில் நீதவானின் பொலிசாரின் உதவியுடன் யாழ் பொலிசாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து யாழ்ப்பாணப் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீட்டிற்குள் நுழைந்த திருடர் குழு ஐவரில் இருவர் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் மற்றய மூவரும் 25 வயதிற்குட்பட்டவர்கள். வீட்டினுள் சென்று அங்கிருந்த துணிகளை எடுத்து தமது முகங்களை மூடியவாறு வீட்டிலிருந்த மூவரையும் கத்தி முனையில் அவர்கள் அணிந்திருந்த நகை முதற்கொண்டு அலுமாரிக்குள்ளிருந்த நகைகளையும் எடுத்துச்சென்றுள்ளனர்.
இக் கொள்ளைச் சம்பவத்தின்போது திருடன் ஒருவனின் துணி கழன்றதால் மகள் அடையாளம் கண்டுள்ளார். சம்பவத்தின்போது காலை நேரம் அவ்வீட்டிற்கு சிவில் உடையில் சென்றவர்கள் புகைப்படம் ஒன்றினைக் காட்டி புகைப்படத்தில் உள்ளவர் சங்கர் என அடையாளப்படுத்தி விசாரித்துள்ளனர். அதனை அடையாளங்காட்டிய பெண்ணை இது தொடர்பாக தகவல் தெரிவிக்க வேண்டாமென அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக