ஞாயிறு, 23 மே, 2010

சூடான் பிரதிநிதியின் ஆலோசனைகளும் நிபுணர் குழுக்களின் பிரவேசமும் – இதயச்சந்திரன்

அமெரிக்காவின் பிலடெல்பியா மாநிலத்தில் நடைபெற்ற, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதல் அமர்வில், தென் சூடான் மக்கள் விடுதலை இயக்கத்தின் (SPLM) அமெரிக்க பிரதிநிதி டொமச் றொச்சும் (Domach Rauch) முன்னாள் அமெரிக்காவின் சட்டமா அதிபர் ராம்சே கிளார்க்கும் (Ramsey Clark) சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டுள்ளனர். இவர்களின் பிரசன்னம், பல செய்திகளைக் காவி நிற்பதனை உணரலாம். அவர்கள் அங்கு ஆற்றிய உரைகளில்

வாருங்கள் மீட்டெடுப்போம் களப் போராளிகளை!!


வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா... தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது. தமிழனின் அடையாளம் இதோ,