வியாழன், 3 ஜூன், 2010

தேசிய தலைவரை தவிர்த்து யார்?-கண்மணி

வீரம் செறிந்த போராட்டம் ஒரு தற்காலிக பின்னடைவை சந்தித்திருக்கிறது. அடக்கமுடியா ஆற்றலோடு அளவில்லா இழப்புகளை சந்தித்தப்பின்னும் இன்று ஒரு சிறு தீவிலே நடைபெற்ற சிறப்பு வாய்ந்த இனவிடுதலை சமர் இன்று உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் பற்றி எரிய தொடங்கியிருக்கிறது. யாராலும் அடக்கமுடியாது என்று இறுமாப்போடு இயங்கத் தொடங்கியிருக்கும் சிங்கள பாசிச ஆட்சியாளன் ராசபக்சே மனம்திறந்து `தி டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழுக்கு அளித்த நேர்க்காணலில்,

தொடரும் கைதுகள் புலம்பெயர் தமிழ்பேசும் மக்களே யாக்கிரதை !

மத்தியகிழக்கு நாடான டோகா கட்டாறிலிருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறிலங்கன் விமானமூலம் இலங்கைக்கு வந்த யாழ் சுண்ணாகத்தைச் சேர்ந்த 28வயதான ரட்னம் மயூரன் என்பவர் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டு 4ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த 6 வருடங்களாக கட்டாறில் வேலை செய்துவிட்டு இலங்கை திரும்பிய வேளையிலேயே கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாறு பலபேர் வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்லும்வேளைகளில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் கொலண்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்று பதிவுத்திருமணம் செய்துவிட்டு மீண்டும் கொலண்ட் திரும்பும்போது இன்னொருவர் கைதுசெய்யப்பட்டு 4ம்மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று ஜேர்மனியில் இருந்து சென்ற பெண் ஒருவரும் கைதுசெய்யப்பட்டு 4ம் மாடியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் இருந்து செல்வோரை புலிகள் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்து கைதுசெய்து உடன் 4ம் மாடிக்கு அனுப்பப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு தமிழ் கட்சி உதயம்,,,,,


தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்.சிறீகாந்தா மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் இணைந்து தமிழ் தேசிய விடுதலை முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.இந்த புதிய கட்சி எதிர்வரும் வட மாகாண தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தமது கொள்கையுடன் ஒத்துப்போகும் ஏனைய தமிழ் கட்சிகள் அனைத்தையும் தமது கட்சியுடன் இணைத்துக்கொள்வது தொடர்பாக தாம் சிந்தித்துவருவதாகவும் -இந்த விடயங்கள் தொடர்பாக ஏனைய தமிழ் கட்சிகளுடன் பல சுற்றுப்பேச்சுக்கள் நடத்துவதற்கு தாம் திட்டமிட்டுள்ளதாகவும் கட்சியின் பொது செயலர் சிவாஜிலங்கம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, கட்சியை தேர்தல் ஆணையகத்தில் உத்தியோகபூர்வமாக பதிவு செய்வது தொடர்பான நடவடிக்கைகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீகாந்தா மேற்கொண்டுவருகிறார்.

கேணல் ராயு- அம்பலவாணன் நேமிநாதன் யாழ்-மாவட்டம் சுன்னாகம்



மனித வாழ்வில் ஒவ்வொருவருடைய வாழ்வனுபவமும் தனித்துவமானது. இவ வாழ்வனுபவ நிலையில் எல்லா மனிதர்களும் தனித்துவமானவர்கள். ஆனால் இத்தனித்துவத்தை மனித இருப்பு நிலையின் ஆழத்துக்குச்சென்று அதனைத் தரிசித்து அதை வெளிக்கொணர்பவர்கள் ஒருசிலரே. ஈழ விடுதலைப்போராட்டப் பாதையில்...

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவை வீழ்த்துவதற்கு இந்தியா கடும் முயற்சி ...



சிறீலங்காவில் வலுவாக கால்பதித்துள்ள சீனாவை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருந்து அகற்றி இந்து சமுத்திர பிராந்திய நாடுகளை தனது பொருளாதார அபிவிருத்தி குடையின் கீழ் கொண்டு வர இந்தியா கடும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றது.


இந்தியாவுக்கும் – சீனாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்த போட்டியில் சிறிலங்கா கடும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது

சர்வதேசத்தை ஏமாற்றவே மஹிந்த ஆணைக்குழு அமைக்கின்றார்

சர்வதேசத்தை ஏமாற்றவும் காலத்தைக் கடத்துவதற்காகவுமே அரசாங்கம் தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைத்துள்ளதே தவிர, பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்காக அல்ல. அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் இலங்கையை தனிமைப்படுத்துவதாகவே அமையும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்
இங்கிலாந்தில் உள்ள கும்பிரியா நகரில் மர்ம மனிதர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து தெருவில் போவோர் வருவோர் மீது கண் மூடித்தனமாக சுட்டார்.
ஒரு இடத்தில் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு அடுத்து காரில் மற்றொரு இடத்துக்கு சென்று சுட்டார். இப்படி 11 இடத்துக்கு சென்று கண்ணீல் கண்டவர்களை எல்லாம் சுட்டார்.

கடைசியில் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்

செய்தித் துளிகள்



ஐ.தே.க – பாலித ரங்கே பண்டார பிளவு.............ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை........,தென்னிந்திய திரைப்பட சபை மீண்டும் எச்சரிக்கை............

இஸ்ரேல் படுகொலை செய்துள்ளமையானது சீற்றத்தைத் தூண்டியுள்ளது




காசாவிற்கு உதவுவதற்கு கப்பல் தொடரணியில் சென்றிருந்த ஆதரவளார்களில் கிட்டத்தட்ட 19 பேரை இஸ்ரேல் படுகொலை செய்துள்ளமையானது சர்வதேச அளவில் சீற்றமான எதிர்ப்புக்களை தூண்டியுள்ளது. ஆனால் ஒபாமா நிர்வாகம் இந்த இரத்தம் தோய்ந்த நடவடிக்கைக்கு உட்குறிப்பான ஒப்புதலை அடையாளம் காட்டி, இஸ்ரேலிய நடவடிக்கையைக் குறைகூறாமல் உயிரழப்புக்கள் பற்றி வெறுமனே வருத்தம் தெரிவித்துள்ளது