வியாழன், 3 ஜூன், 2010

இங்கிலாந்தில் உள்ள கும்பிரியா நகரில் மர்ம மனிதர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து தெருவில் போவோர் வருவோர் மீது கண் மூடித்தனமாக சுட்டார்.
ஒரு இடத்தில் துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு அடுத்து காரில் மற்றொரு இடத்துக்கு சென்று சுட்டார். இப்படி 11 இடத்துக்கு சென்று கண்ணீல் கண்டவர்களை எல்லாம் சுட்டார்.

கடைசியில் அவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்
.

அவர் சுட்டதில் 12 பேர் உயிர் இழந்தனர். 25-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு நடத்தி அவர் டெரிக்கோப் (வயது 52) என்ற டாக்சி டிரைவர் என்று தெரிய வந்தது.

அவர் ஏன் இப்படி நடந்து கொண்டார் என்று தெரியவில்லை. அவருடைய முதல் குண்டுக்கு பலியானவர் மற்றொரு டாக்சி டிரைவர். அவரை கொன்ற பிறகு தான் மற்றவர்களை தாக்கியுள்ளார்.

துப்பாக்கி சூட்டால் அந்த நகரம் முழுவதும் பெரும் பதட்டம் ஏற்பட்டது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக பீதி ஏற்பட்டது. ஏராளமான போலீசார் துப்பாக்கி மனிதரை பிடிக்க தேடினார்கள். ஆனால் அவர் ஒவ்வொரு இடமாக சென்று சுட்டபடி இருந்தார்.
இதனால் 2 மணி நேரத்துக்கு மேலான நகரம் முழுவதும் பதட்டம் ஏற்பட்டது.

இது முக்கிய சுற்றுலா நகரம் ஆகும். ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து இருந்தனர். துப்பாக்கி சூடு நடப்பது பற்றி அறிந்ததும் அனைவரும் வீடுகளுக்குள் சென்று பதுங்கி இருந்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக