புதன், 12 ஜனவரி, 2011

மழை மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள்:பத்து லட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பத்து லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போதுவெளியாகியுள்ளதகவல்கள்தெரிவிக்கின்றன.மட்டக்களப்பு மற்றும் அப்பாறையில் கடுமையான பாதிப்புகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மணிக்கு மணி அகதிகளுக்கான முகாம்களின் தேவை அதிகரித்து வருகின்றது என்று இலங்கை அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.அங்கு பால், குழந்தைகளுக்கான உணவு, கொசு வலைகள், துண்டுகள், படுக்கை விரிப்புகள் ஆகியவற்றுக்கான உடனடி தேவை ஏற்பட்டுள்ளது.

இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா? குமுறுகிறார் செங்கடல் பட இயக்குநர் லீனா மணிமேகலை

இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாது என்று நிபந்தனையே விதிக்கும் அளவுக்கு மோசமான நிலைமைக்குள் படைப் பாளிகளைச் சிறைப்படுத்தப் பார்க்கிறது இந்திய அரசு இவ்வாறு  "செங்கடல்" படத்தின் இயக்குநர் லீனா மணிமேகலை குமுறுகிறார்.துயரத்தில் தவிக்கும் இலங்கைத் தமிழர், இந்தியத் தமிழ் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை  இந்திய  தமிழக அரசுகளின் நிலைப்பாட்டை விமர்சிப்பதால் "செங்கடல்" படத்துக்கு சென்னை தணிக்கைக் குழு  தடை விதித்துள்ளது. இப்போது படத்தை மறுதணிக்கைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார் இயக்குநர் லீனா

தமிழ் தேசிய கூட்டமைப்பு - ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சந்திப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. தற்போதைய அரசியில் சூழ்நிலைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், மற்றும் செல்வம் அடைக்கல நாதன், ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவுப் ஹக்கிம் மற்றும் பொது செயலாளர் ஹசன் அலி ஆகியேர் பங்கு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல்

ஹம்பாந்தோட்டை நகரில் சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் துறைமுக அபிவிருத்தி திட்டம் தொடர்பில் இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அமெரிக்க இரகசிய இராஜதந்திர ஆவணங்களை வெளியிட்டு வரும் விக்கிலீக்ஸின் பிந்திய வெளியீடுகளில் இந்த விடயம் தொடர்பான தகவல்கள் அடங்கியுள்ளதாக ஏஷியன் ட்ரிபியூன் செய்தி வெளியிட்டுள்ளது.ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி 2007 ஆம் ஆண்டு என திகதியிடப்பட்ட இராஜதந்திர தகவல் பரிமாற்ற கோப்பில் இது தொடர்பான தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளன.

வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு...இராணுவத்தினர் பிரசாரம்

தென்பகுதி ஆடை உற்பத்தித் தொழிற்சாலைகளில் வடபகுதி யுவதிகளுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத்தரப்படும் என்றும் அதற்காக யுவதிகள் தேவைப்படுவதாகவும் நாட்டின் வடபகுதியில் இராணுவத்தினர் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய பிரசாரங்கள் எத்தகைய உத்தரவாதமும், ஒப்பந்தமும்,வெளிப்படைத்தன்மையும்இன்றிமேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் இது குறித்து விழிப்பாக இருக்குமாறும் வடபகுதியில் அமைந்துள்ள சிவில் அமைப்புக்கள் கேட்டுள்ளன. இலங்கை இராணுவத்திலுள்ள பல்வேறு தரத்தையும் சேர்ந்த அதிகாரிகள் வடபகுதியின் யாழ்ப்பாணம்,வன்னி மற்றும் மீள் குடியேறிய கிராமப்புறங்களுக்குச் சென்று இவ்வாறான பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே!!!!!

ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்​னாண்டோ.
இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ என்ற கவலை எல்லோர் முகத்திலும் முளைத்தது.இலங்கை மனித உரிமைப் போராளி நிமல்காவின் ஆங்கிலப் பேச்சில் அழுத்தமான அரசியல் பொறி தெறித்தது. ''நான் தமிழில் பேச முடியாமல் இருப்பதற்கு முதலில் வருந்துகிறேன்.