ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

காருக்குள் 'வொயிஸ் பேஸ்புக் அப்டேட்டிங்

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் (ஜிஎம்) புதிய வகை மென்பொருள் ஒன்றினைத் தற்போது பரீசீலித்து வருகின்றது. கார் சாரதியின் கட்டளைக் குரலுக்கு இணங்க 'பேஸ்புக்'கில் 'ஸ்டேடஸ் அப்டேட்' செய்வதே இம்மென்பொருளாகும்.மேலும் 'பேஸ்புக்'கில், தான் பெற்றுள்ள செய்திகளினை (மெசேஜஸ்) வார்த்தைகளாக கேட்பதையும் இது உள்ளடக்கவுள்ளது.மேற்படி சொற்கள் மூலமான 'அப்டேட்கள்', 'ஒன்ஸ்டார் நெட்வோர்க்' மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளன.


வவுனியாவில் ஜே.வி.பி அலுவலகம் திறப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட கட்சிக் காரியாலம் திறப்பு வைபவத்திற்கு பொலிஸார் இடையூறு விளைவித்ததாக மக்கள் விடுததலை முன்னணியின் ஊடக பிரிவு தெரிவித்தது.குறித்த காரியாலயத்தை அமைப்பதற்கு காணி வழங்கியவரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவை நம்பி ,, இந்தியாவை கைகழுவுகிறது

இந்தியா ,சீனா இரண்டு நாடுகளும் உலகின் சர்வவல்லமை பொருந்திய நாடுகளாக நிலைமாற்றம் பெற்று வருகின்றன.மூன்றாவது உலகப் போர் இடம்பெறுமாக இருந்தால்,அது இந்தியாவுக்கும் சீனாவுக்கு மான போரில் இருந்து ஆரம்பிப்பதாக அமை யும்.அந்தளவிற்கு இரண்டு நாடுகளினதும் எதிர்த்தன்மை அதிகரித்த வண்ணமுள்ளதுடன் உலகமும் அந்த இரண்டு நாடுகளின்பால் பிளவு பட்டிருப்பதைக் காணமுடியும். இந் நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு முற்பட்டது.


இடம்பெயர்ந்த மக்களுக்கு வழங்கிய சிமெந்து மூடைகள் பதுக்கிவைப்பு

யுத்தம் காரணமாக வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்தின் போது மக்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 1500 சிமெந்து மூடைகள் வவுனியா பலநோக்கு கூட்டுறவுச் சங்க கட்டிடத்தொகுதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இவை மேற்படி கட்டிடத்தில் அடுக்கப்பட்டதாகவும் அவ்வேளையில் ஒரு சில சிமெந்து மூடைகளை மீள்குடியேறிய மக்களுக்கு வழங்கிய பின்னர் ஏனையவற்றை வழங்காது அங்கேயே பதுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.


அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது

இலங்கை அரசியலமைப்பில் அண்மையில் செய்யப்பட்ட 18 வது திருத்தம் குறித்து அமெரிக்கா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.இது குறித்து அமெரிக்க பொது விவகார பணியக துணைச் செயலர் பிலிப் ஜே கிரௌலி அவர்களால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்தக் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

காணாமல் போயுள்ள தமது உறவுகள் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையுடன்.....

இலங்கையில் கிழக்கு மாகாணம் அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்பட்டு, மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் பெண்கள் உட்பட 95 பேர் காணாமல் போயிருப்பதாக மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா கூறுகின்றார். காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் தங்களிடம் பதிவு செய்துள்ள விபரங்களின்படி, பாதுகாப்பு தரப்பு மற்றும் தமிழ் ஆயுதக்குழுக்கள் மீதே இது தொடர்பான சந்தேகங்களை அவர்கள் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறியிருக்கின்றார்.