ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

காருக்குள் 'வொயிஸ் பேஸ்புக் அப்டேட்டிங்

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் (ஜிஎம்) புதிய வகை மென்பொருள் ஒன்றினைத் தற்போது பரீசீலித்து வருகின்றது. கார் சாரதியின் கட்டளைக் குரலுக்கு இணங்க 'பேஸ்புக்'கில் 'ஸ்டேடஸ் அப்டேட்' செய்வதே இம்மென்பொருளாகும்.மேலும் 'பேஸ்புக்'கில், தான் பெற்றுள்ள செய்திகளினை (மெசேஜஸ்) வார்த்தைகளாக கேட்பதையும் இது உள்ளடக்கவுள்ளது.மேற்படி சொற்கள் மூலமான 'அப்டேட்கள்', 'ஒன்ஸ்டார் நெட்வோர்க்' மூலமாக மேற்கொள்ளப்படவுள்ளன.


'ஒன்ஸ்டார்' நிறுவனம் வாகனங்களின் நவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் பிரபல்யம் பெற்றதாகும். தனது பிரதான போட்டியாளரான 'போர்ட்' நிறுவனத்தின் நவீன தொழில்நுட்பங்களுக்குப் போட்டியாகவே இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.கையடக்கத் தொலைபேசி மூலமான 'மெசேஜ்'களுக்கு உடனடியாகப் பதிலளிக்கும் வகையில் காரின் ஸ்டீரிங்குடன் இணைந்த வகையிலான தொழில்நுட்பம் ஒன்றையும் அது பரீட்சித்து வருகின்றது.மேலும் அதிநவீன தொழில்நுட்ப வானொலி, நெவிகேசன் சிஸ்டம் போன்றவற்றையும் ஜிஎம் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக