ஞாயிறு, 12 செப்டம்பர், 2010

சீனாவை நம்பி ,, இந்தியாவை கைகழுவுகிறது

இந்தியா ,சீனா இரண்டு நாடுகளும் உலகின் சர்வவல்லமை பொருந்திய நாடுகளாக நிலைமாற்றம் பெற்று வருகின்றன.மூன்றாவது உலகப் போர் இடம்பெறுமாக இருந்தால்,அது இந்தியாவுக்கும் சீனாவுக்கு மான போரில் இருந்து ஆரம்பிப்பதாக அமை யும்.அந்தளவிற்கு இரண்டு நாடுகளினதும் எதிர்த்தன்மை அதிகரித்த வண்ணமுள்ளதுடன் உலகமும் அந்த இரண்டு நாடுகளின்பால் பிளவு பட்டிருப்பதைக் காணமுடியும். இந் நிலைமையை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள இலங்கை அரசு முற்பட்டது.


விடுதலைப் புலிகள் மீதான யுத்தத்தில் இந் தியாவிடம் முழுமையான உதவிகளைப் பெற்று போரில் வெற்றி கொண்ட இலங்கை அரசு இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு,இந்தி யாவின் வற்புறுத்தலில் இருந்து விடுபடுவதற்கும்,இந்தியாவின் அச்சுறுத்தலை வெற்றி கொள் வதற்குமாக சீனாவை அதீதமாக ஆதரிக்கத் தொடங்கியது.சீனாவை நாட்டிற்குள் ஊடுருவ விடுவதன் மூலம் இந்தியாவின் தடிப்பை மட்டுப்படுத்தவும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகளை வழங்குமாறு இந்திய அரசு அழுத்தம் தருவதை எதிர்கொள்ளவும் சீனாவை உறவாக்குவதே ஒரே வழியயன இலங்கை அரசு முடிபு செய்தது.இத்தகைய தொரு நிலைமையை இந்தியா உணர்வதற்கு சந்தர்ப்பம் இல்லை என்றே கூறவேண்டும். இலங்கையில் விடுதலைப் புலிகள் அமைப் பிற்கு முடிபு கட்டவேண்டும் என்பது,காலஞ் சென்ற ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா வின் நிலைப்பாடாக இருந்தது.

மத்தியில் பலம் பெற்றிருக்கும்போது-தமிழ கத்தில் தனது கூட்டணிக் கட்சியான தி.மு.க. ஆட்சி இருக்கும்போது விடுதலைப் புலிகளை முற்றாக அழித்துவிட வேண்டும் என்ற சிந்த னையைத் தவிர இலங்கை அரசு பற்றி எந்தவித சந்தேகமும் இந்தியாவிடம் இருக்கவில்லை.இதன் காரணமாகவே யுத்தம் முடிந்த கை யோடு இலங்கைக்கு வருகை தந்த மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு “ எல்லாம் யாம் அறி வோம்” என்ற கர்ச்சிப்போடு கூறியிருந்தார். ஆனால் இப்போதுதான் இலங்கை அரசு சீனாவைத் தனக்கு துணையாக்கி தன்னை ஏமாற்றி விட்டது என்ற உண்மையை இந்தியா உணர்ந்து கொண்டது.இதன் காரணமாகவே மக்களவையில் அமைச்சர் டி.ஆர்.பாலு இலங்கை அரசுக்கு எதிராக உரையாற்றியதும்,வெளியுறவுச் செய லர் நிருபமா ராவின் இலங்கை விஜயமும் அமைந் தது எனலாம். எதுவாயினும் அண்டை நாடான இந்தியாவை ஏமாற்றுவதற்கு இலங்கை அரசு எடுக்கும் முயற்சியானது ஆபத்தானது என்பது மட்டு மல்ல-இலங்கைக்கு அடி கொடுக்க இந்தியா நினைத்தால் அவ்விடத்தில் சீனா தலையிட்டு இலங்கையைக் காப்பாற்ற முற்படாதென்பதும் தெரிந்த உண்மை.அவர்கள் எதிரிகளாக இருந்தாலும் மிகச் சிறிய நாடான இலங்கைக்காக ,அந்த இரண்டு நாடுகளும் பகையை வேகப்படுத்த மாட்டா என் பதே உலக அனுபவமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக