வியாழன், 22 ஜூலை, 2010

மாமழையிலும் மங்கிய ஒளியிலும்
மரங்களுக்கிடையிலும் மதகுக்கரையிலும்
கருப்பாய் காத்திருந்து நெருப்பாய் போனவரே
மெழுகுதிரியால் சுட்டுவிரல் சுட்டவலி பெரிதென்று பீற்றினோம் நீர்மெழுகோடு மெழுகாய் கருகுகையில் நம்கை வெட்கினோம்
எம்நெஞ்சிலே நீரேற்றிய தீயை அணையவிடாது
காற்றோடு காற்றாய் கடலோடு அலையாய் இருந்து காப்பீராக


தன்னுயிர்போகும் நாளாறிவர் நேரமறிவர் வகையறிவர்
தன்னிலைமறந்து தாய்மண்வேண்டி தற்கொடை ஈய்ந்த தவப்புதல்வர் தலைவனின் வழியில் தன்நடை பயின்று
தரணியில் தமிழர் தலைநிமிர்வரென்று தமக்குதகனமூட்டியோர்
தம‌க்குள்ளூட்டிய தீயை தமிழர்க்குமூட்டினர் இன்று
அவர்கண் கனவை நனவாக்க‌ மறவர் நாங்கள் ஒருமுறை
மரத்தோம் இனி மறுகண் எடுப்போம் இவர் மறக்கோம்.


நல்வரிகள் நாலு சொல்லி நாமறுக்க முடியவில்லை
நல்வினைகள் செய்ய எண்ணி மாண்டாரை மறக்குதில்லை
என் மனம் மறக்குதில்லை இன்று ஓர் தினம் நினைப்பதற்க்கு
அவர் செய்த காரியங்கள் நினைவிருக்கு இருந்தும் என்றும்
மறக்கவிலா மாமனிதர் அவர் வெளியில் கறுப்பு உடை
உள்ளே வெள்ளையுடை..........................!

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல-சர்வதேச நீதிமன்றம்

செர்பியாவில் இருந்து கொசோவா சுதந்திரம் பெற்றதாக பிரகடனம் செய்தமை சர்வதேச சட்டத்தை மீறும் செயல் அல்ல என்று தி ஹேக்கில் இருக்கின்ற சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மொத்தமான 14 நீதிபதிகளில் 10 பேர் இந்தத் தீர்ப்புக்கு ஆதரவளித்துள்ளனர்.

எப்போ எமக்கு விடிவு காலம்? ......அரசனும் இல்லை ....புருசனும் இல்லை ..... காவலர்களும் இல்லை ....ஏன் கடவுளும் இல்லை !!!!

நாங்கள் உம் நிலத்துக்கு ஆசைப்படவில்லைநீயோ எம் நிலம்
வேண்டுமென்றாய்...முதுகெலும்பு இல்லாத புழு கூடபோராடித்தான்
சாகுமாம்..! நாங்கள் மட்டும் எப்படி தூக்கி கொடுப்போம் என
நினைத்தாய்....!!??அத்தோடு விட்டாயா..!?
எம் மண்ணில் பிணம்
விதைத்தாய்..!எம் பெண்டிரின்
கற்பை கருவறுத்தாய்..!பிஞ்சு
மழலைகள் என்று கூடப்பாராது தூக்கிலிட்டாய்..!
துண்டாக்கினாய்..!இருப்பிடத்தில்
குண்டு எறிந்தாய்..!நெருப்புக்
குண்டுகளின் பசி தீர்த்த எச்சங்கலாய்
எங்கள் உடல்கள்...!உண்ண உணவின்றி, உறங்க பாயின்றி, எத்தனைபேர் மரநிழலில்அட, மரத்தை கூட
நீ விட்டுவைக்கவில்லையே!பட்டினியால்
பலபேரும்.. நீகொட்டிய குண்டினாலே பல பேரும்துடித்து இறந்து
ஏன் உனக்கு வலிக்கவில்லை?மனித உடம்பெடுத்து வந்த சாத்தானா நீ? மாண்டவர்
மீளார் என துயர் ஆற்றலாம் ஆனால்இழந்தவர் துயர்
எப்படி போகும் ??கூடிவாழ்ந்த சொந்தத்தை....எறும்புபோல்
சேர்த்த சொத்தைஇழந்த துயர் கூட நாளடைவில் ஆறிவிடும்....ஆனால்
தன் அங்கம் இழந்தவர் துயரோ ஆயுள்வரை அல்லவா?'அரசன் அன்று
கொல்வான்தெய்வம் நின்று கொல்லும் என்பர்'உண்மையா என
தெரியாது ஆனால் இவர்களின் கதறலும் சாபமும்
நிச்சயம் உன்னை வந்துசூழும் இது
சத்தியம்..!!

புலம்பெயர் தமிழரால் கிடைத்த பலன் முழுவதுமாக ஈழ தமிழர் கைகளில் கிடைக்க நாம் இன்னும் செல்ல வேண்டியது சிறு தூரமே ...........சேர்வோம் , செல்வோம் ,வெல்வோம் ....

உலகத்தமிழர்களின் நிலைத்த உறுதியான போராட்டத்தின் விளைவாக இப்போதுதான் நாகரீகத்தேசங்கள் என கூறிக்கொள்பவை, ஈழத்தொடர்பான தனது பிழையான புரிதல்களை மறுபரிசீலினைக்கு உட்படுத்த தொடங்கியிருக்கின்றன.


இந்திய தமிழ் அரசியல்வாதிகள் எப்போ நிறுத்தபோகிறார்கள்!? ஈழ தமிழனின் துன்பத்தில் அரசியல் நடத்துவதை ..........?

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இலங்கையில் உள்ள தமிழ் மக்களை சொல்லொணாத் துயரத்திற்குத்தள்ளிய இலங்கை போர் ஓர் ஆண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது. அப்பாவி இலங்கைத்தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் கொத்து கொத்தாக இடைவிடாது குண்டுகளை வீசி அவர்களை ஈவு இரக்கமின்றி படுகொலை செய்தனர்.

கரும்புலி லெப்.கேணல் போர்க்

வன்னிப் பிராந்தியத்தின் மையத்தில் அதன் இருதயத்தில் மாங்குளம் சிங்களப்படை முகாம் இருந்தது. அது அங்கு பல அட்டூழியங்களைச் செய்து வந்தது.


இரண்டாவது ஈழப்போர் தொடங்கிய நாட்களிலிருந்து இம்முகாம் விடுதலைப் புலிகளால் முற்றுகையிடப்பட்டிருந்தது. எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப்படை முகாம் மீது தாக்குவதற்கான திட்டம் தயாரிக்கப்படுகிறது.

எல்லா நாட்டு போர்க்கப்பல்களும் இலங்கை நோக்கி .....ஏதோ நடக்கபோகிறது ......

கொரிய குடியரசின் கடற்படை போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.

நாட்டுக்கு முக்கியம் இப்போ தொலைபேசி .?பாடசாலைகளில் தளபாடம் ,கற்பதற்கு உரிய உபகரணம் இல்லை , புலம்பெயர் தொடர்புகளை ஏற்படுத்தி பணம் வசூலித்து பாடசாலை நிர்வாகம் தமது பாக்கெட்டை நிரப்ப ஏதுவாக அமய சிறந்த உதவி

கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகளுக்கான தொலைத் தொடர்பு குறைபாட்டை தீர்க்கும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 52 CDMA தொலைபேசிகளை வழங்கியுள்ளார்.

கிளியில்..இராசநாயகம் புதிய இராணுவ அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் ....

கிளி முன்னாள் அதிபரும் தற்போதைய வடமாகாண ஆளுனர் சந்திரசிறியின் பதில் செயலாருமான இராச நாயகம் சமூக சேவை அமைச்சின் கீழ் கிளியில் உள்ள பொதுக்காணிகளை எடுத்து பண்ணைத்திட்டம் செய்யப்போவதாக அங்கிருப்போரை விரட்டி வருகின்றார்.

எங்கே மிகுதி போராளிகள் ?

12 ஆயிரம் போராளிகள் அரசிடம் சரணடைந்தனர் எனவும் இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் டியூ குணசேகர.


சிங்கள ஒப்பந்தகாரர்களுக்கு கல்லுடைக்கும் ஊனமுற்ற போராளிகள்

இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட கால் இல்லாத போராளிகள் சிலர் சிங்களஒப்பந்தகாரர்களுக்கு கல் உடைத்தல் கல் அரிதல் வேலைகளை செய்து பிழைக்கின்றார்கள்.