வியாழன், 22 ஜூலை, 2010

எல்லா நாட்டு போர்க்கப்பல்களும் இலங்கை நோக்கி .....ஏதோ நடக்கபோகிறது ......

கொரிய குடியரசின் கடற்படை போர்க்கப்பல் ஒன்று மூன்று நாள் சுற்றுப்பயணமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை இன்று வந்தடைந்துள்ளது.




"வாங் ஜியோன்" என்ற போர்க்கப்பலே இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலயம் தெரிவித்தது.




கொரியா மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையிலான நல்லுறவைப் பேணும் வகையிலேயே இந்த சுற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்த ஊடக மத்திய நிலையம், குறித்த கப்பல் கொழும்பில் தரித்து நிற்கும் நிலையில் பல்வேறு சிறப்பு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளதாக கூறியது.


சுமார் 149 மீற்றர் நீளமுடைய இந்தப் போர்க்கப்பல் துருப்புக்களைத் தரையிறக்கும் வகையைச் சேர்ந்ததாகும். 42 அதிகாரிகள் மற்றும் 264 கடற்படை வீரர்கள் பணியாற்றும் இந்தப் போர்க்கப்பல் படையினரைத் தரையிறக்கும் கலங்களைக் கொண்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக