வியாழன், 22 ஜூலை, 2010

நாட்டுக்கு முக்கியம் இப்போ தொலைபேசி .?பாடசாலைகளில் தளபாடம் ,கற்பதற்கு உரிய உபகரணம் இல்லை , புலம்பெயர் தொடர்புகளை ஏற்படுத்தி பணம் வசூலித்து பாடசாலை நிர்வாகம் தமது பாக்கெட்டை நிரப்ப ஏதுவாக அமய சிறந்த உதவி

கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலைகளுக்கான தொலைத் தொடர்பு குறைபாட்டை தீர்க்கும் பொருட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் 52 CDMA தொலைபேசிகளை வழங்கியுள்ளார்.

தொலைபேசிகளை வழங்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் காலை 10 மணிக்கு இடம் பெற்றது


வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கிளிநொச்சி கல்வி வலயத்தின் 50 பாடசாலைகளின் அதிபர்களிடம் CDMA தொலைபேசிகளை வழங்கியதுடன் பளை மற்றும் கண்டாவளை கோட்டக்கல்வி அலுவலகங்களுக்கான தொலைபேசிகளை கோட்டக்கல்வி அதிகாரிகளிடமும் வழங்கினார்.


இந்த நிகழ்வில் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், வலயக் கல்விப் பணிமனை உத்தியோகத்தர்கள் என கல்விச் சமூகத்தினர் கலந்து கொண்டிருந்தனர். மேற்படி நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனுக்கான கிளிநொச்சி கல்வி வலய அதிபர்கள், கல்வி அதிகாரிகளின் வரவேற்பு வைபவமாகவும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக