வியாழன், 22 ஜூலை, 2010

எங்கே மிகுதி போராளிகள் ?

12 ஆயிரம் போராளிகள் அரசிடம் சரணடைந்தனர் எனவும் இவர்களில் 3,038 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் எனவும் அரசாங்கம் கூறியுள்ளது. தற்போது 7,980 பேருக்கு மாத்திரம் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வருகின்றது. 1,300 பேர் தீவிர புலி உறுப்பினர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர். இவர்களுக்கு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் இவ்வாறு தெரிவித்தார் அமைச்சர் டியூ குணசேகர.





ஆனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இராணுவ தளபதி உட்பட பல அதிகாரிகள் 15, 000 பேர் வரையில் புலி உறுப்பினர்கள் என தாம் அடையாளம் கண்டிருப்பதாகவும் இதில் சரணடைந்தவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளடங்குவர் எனவும் கூறி இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் விடுவிக்கப்பட்டவர்களில் பல போராளிகளை மீண்டும் புலனாய்வுத்துறையினரும் படையினரும் பிடித்தும் சென்றுள்ளனர். சரணடைந்தவர்கள் போக மெனிக் பாம் உட்பட பல முகாம்களில் கைது செய்யப்பட்டோர்கள் இந்த எண்ணிக்கைக்குள் உல்லடங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


புனர்வாழ்வு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சில் நேற்றுக்காலை நடை பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:
சரணடைந்த புலிப் போராளிகள் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனராம். புலி முக்கியஸ்தர்கள் கூட கூண்டில் அடைத்து வைக்கப்படவில்லையாம். பிரபல நடிகை அனோஜா வீரசிங்க இவர்களுக்கு நடனப் பயிற்சியளித்து வருகிறாராம். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும் கிரிக்கெட் பயிற்சி அளிக்க முன்வந்துள்ளார். இவ்வாறு கூறியுள்ளார் குணசேகரா.


சரணடைந்த போராளிகளில் 2,000 பெண்களும் அடங்குவர். இவர்களில் 600 பேருக்குத் தொழில் பயிற்சி அளிக்கப்பட்டு ஆடைத் தொழிற்சாலைகளில் தொழில் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டவர்களில் 364 பேர் ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்ற உள்ளனர். கொழும்பில் உள்ள பிரபல ஆசிரியர்கள் இவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துகின்றனர். பரீட்சைக்குப் பின்னர் இம்மாணவர்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவர்.
இவ்வாறு கூறியுள்ளார் குணசேக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக