வியாழன், 22 ஜூலை, 2010

சிங்கள ஒப்பந்தகாரர்களுக்கு கல்லுடைக்கும் ஊனமுற்ற போராளிகள்

இராணுவத்தினரால் அண்மையில் விடுவிக்கப்பட்ட கால் இல்லாத போராளிகள் சிலர் சிங்களஒப்பந்தகாரர்களுக்கு கல் உடைத்தல் கல் அரிதல் வேலைகளை செய்து பிழைக்கின்றார்கள்.



நேற்று முந்தினம் தொடர்பு கொண்ட ஓர் போராளி (இவர் செயற்கை உறுப்பு பொருத்தும் பணியில் முன்னர் பயிற்சி பெற்றிருந்தவர்). தான் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டு இப்போ கிளியில் வசிப்பதாகவும் தனக்கு கால் பொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். தானும் தம்மை போன்ற சிலரும் சைக்கிளில் தேங்காய் கட்டி வியாபாரம் செய்ய நினைத்ததாகவும் எனினும் சைக்கிள் ஓட காலில் புண்வருவதுடன் வியாபாரம் செய்ய போதிய முதல் இல்லை என்றதனால் சிங்கள ஒப்பந்தகாரர்களிடம் வேலைக்கு போனதாகவும் கூறினார்.


இப்போ கல்லுடைக்கும் வேலையும் , கல் அரியும் வேலையும் செய்வதாக கூறிய அவர் இந்த வேலை மிகவும் கடினமானது. எங்களுக்கு கால் எல்லாம் புண் வந்திட்டுது அத்துடன் பொருத்தியகாலும் விடைவில் பழுதாகப்போகுது எனவும் கூறினர்.


வேறு ஏதாவது தொழில் முயற்சிக்கு உதவினால் நல்லது என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக