சனி, 4 டிசம்பர், 2010

இங்கிலாந்தில், மேற்கொள்ளப்பட்ட தமிழர்களின ஆர்ப்பாட்டத்திற்கு பதிலடியாக, கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கான (தமிழ்?)மக்களை திரட்டி, மகிந்தவுக்கு ஆதரவான போராட்டம் நடத்தியுள்ளது இலங்கை அரசு.??

விசுவமடு, ஒட்டுசுட்டான்,  கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான (தமிழ்?) மக்கள் ஒன்றிணைந்து மகிந்தவுக்கு ஆதரவான இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.

காலம் போகும் போக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அரசுடன் இணைந்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை என தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம்

அண்மையில் அரசுடன், ஸ்ரீ லாங்கா முஸ்லிம் காங்கிரஸுனர் இணைந்து கொண்டனர். அதுபோல தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் அரசுடன் இணைந்து கொள்வார்களா என நாம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மகிந்தவிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களின் தென்னிலங்கை பிரதிபலிப்புகள்

ஒக்ஸ்போர்ட் யூனியனில் உரையாற்றுவதற்காக லண்டன் சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக ஹீத்ரு விமான நிலையித்திலும் பின்னர் மத்திய லண்டனிலும் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் குறித்து தென்னிலங்கையில் எதிர்ப்பலைகள் உருவாகியுள்ளன.

இலங்கை அரசியலில் "வெள்ளாள-கொவிகம" ஆதிக்கம்-கலையரசன்

தமிழர்கள் மத்தியில் ஆழமாக வேரூன்றியுள்ள சாதி பிரச்சினை பற்றி பேச வாய் திறந்தால், ஒரே கேள்வியில் எங்களை மடக்குவார்கள். "சிங்களவன் சாதி பார்த்தா அடிக்கிறான்?" உண்மை தான். அவன் தான் "மோட்டுச் சிங்களவன்" ஆயிற்றே?(தமிழின வாதிகள் அப்படித் தான் அழைப்பார்கள்) தமிழர்கள் சாதி வாரியாக பிரிந்திருக்கிறார்கள் என்று மோட்டுச் சிங்களவனுக்கு தெரியுமா? தமிழ் இனவாதிகள் சிங்களவர்கள் அனைவரும் சாதி வேறுபாடற்ற ஒரே இனமாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே மாதிரித் தான்
நீயும் நானும் பேசுவது தமிழ்தான்
நாம் இருவருமே தமிழர்கள் தான்
இதைவிட நமக்குள் என்ன ஒற்றுமை?


போராட்டங்கள் மட்டுமே
வாழ்வாகி போனது எனக்கு
போராட்டமா அப்படி என்றால்
என்கிறாய் நீ...


சொந்த மண்ணிலேயே
அகதிகளாய் நாங்கள்
வெந்துவிட்ட இதயங்கள்..
தொலைந்துவிட்ட சொந்தங்கள்...
சந்ததியே வேரறுந்து ...
நிம்மதியை தானிழந்து ..
இத்தனையும் இழந்தாலும்
இழக்கவில்லை நம்பிக்கை..


கூடிழந்த பறவைகளாய் நாங்கள்
கூடி வாழும் குருவிகளாய் நீ
ஆனாலும் என்னவோ
உன்மீது எனக்கு துளியேனும்
பொறாமை வரவில்லை
நீயேனும் நன்றாக இருக்கிறாய்
அது போதும் .


ஒரு வேளை சோற்றிற்கும் ,
ஒண்ட ஓரமாய் சிறிது இடத்திற்கு
நாங்கள் சிந்தியக் குருதிகளும் , உணர்வுகளும் ,
கத்தலும் , கதறலும் ,மொத்தமாய்
இந்த முற்கம்பி வேலிக்குள்ளேயே
புதைந்து போகட்டும்
வேண்டாம் இனியும்
எந்த எதிரிக்கும் இந்த அவல நிலை.!


நீ எங்கு
பிறந்திருந்தாலும்
தமிழனாய் போனதினால்
நீயும் என் சகோதரனே .!


தமிழ் அன்னை ஈன்றெடுத்த
மக்கள் தானே நாம்!
இதிலாவது நமக்குள்
ஒற்றுமை ஒன்று
இருந்துவிட்டு போகட்டும் !!

உலகின் ஊடகங்களை மாபெரும் அதிர்வுக்குள்ளாக்கிய நிகழ்வு.. வன்னிப்போர் மர்மங்கள் வெளிவரும் நாள் தொலைவில் இல்லை..வன்னிப்போர் உண்மைகளையும் அறியத்தருமா.???

உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கி ஊடகங்களில் முன்னணி இடம் பிடித்துள்ளது விக்கிலாக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்கள். உலகத்தில் உள்ள 38 நாடுகளின் சுதந்திரமான ஊடகவியலாளர்கள் சேகரித்த இரகசிய தகவல்கள் விக்கிலாக்ஸ் இணையம் மூலம் அமெரிக்காவிலிருந்து கசியவிடப்பட்டுள்ளன.

போதை மருந்து கடத்த பேஸ்புக் வாயிலாக ஆள் தேர்வு!

மலேஷியாவில் இளம் பெண்களை போதை மருந்து கடத்தல் தொழிலுக்கு பேஸ் புக் வாயிலாக வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக பரபரப்பு புகாரினை அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இது குறித்து மலேஷிய வெளியுறவு துணை அமைச்சர் ரிச்சர்ட்ரையாட் கூறுகையில்,

நான் உலகிலுள்ள அனைத்து வெள்ளைக்காரர்களையும் இலங்கைக்கு அழைக்கிறேன்!!!!!-அமைச்சர் மேர்வின்

மஹிந்த சிந்தனை தொடர்பில் பாடம் படிக்க உலகிலுள்ள அனைத்து வெள்ளைக்காரர்களையும் இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள அமைச்சர் மேர்வின் சில்வா, வெள்ளைக்காரர்களுக்கு பாடம் புகட்ட தான் தயார் எனவும் தெரிவித்துள்ளார்.

“ விடுதலைப் போராட்டம் என்பது இரத்தம் சிந்தும் புரட்சிகர அரசியல் பாதை’-வேலுப்பிள்ளை பிரபாகரன்

தமிழன் யார் என்பதை அகிலமே திரும்பிப் பார்க்க வைத்தவர் ஒரு நாட்டின் வரலாற்றை மாத்தரமல்ல உலகின் பெரும் பகுதி வரலாற்றையே தலைகீழாக புரட்டிப் போட்ட ஈழப் போராட்டத்தின் நாயகன் பெயர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உலகத் தமிழினத்தின் எண்ணம், சொல், செயல், மாற்றமடையக் காரணமானவர் பிரபாகரன்
சிவப்பா இருக்குற எல்லாம் புலிக்கொடியாவே தெரியுதுய்யா... இந்த மூணு நாள்ல இப்பதான் மாலைன்னு ஒண்ணை பாக்குறேன்

நான் மாறுவேடமணிந்து மக்கள் மத்தியில் நடமாடவுள்ளேன்-ர் மேர்வின் சில்வா

மக்கள் முன் மாறுவேடம் அணிந்து சென்று குறைநிறைகளை அறிந்துகொள்ளும் தனது அதிரடி நடவடிக்கை அடுத்தவாரம் முதல் ஆரம்பமாகுமெனத் தெரிவித்த மக்கள் தொடர்பு அமைச்சர் மேர்வின் சில்வா, எதிர்க்கட்சியினரின் வீடுகளில் கூடத்தான் மாறுவேடத்தில் இருப்பேன் என்றும் கூறினார்.

கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான்- ஜெயலலிதா

கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதை தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அ.தி.மு.க., என்பதை மறந்து, ‘கணக்கு காட்டுகிறேன் கண்ணுடையோர் காண’ என்ற தலைப்பிலே கருணாநிதி தனது கணக்கை காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது.

ராஜபக்சவின் தலைக்கனத்துக்கும் இனிப் போகப் போக மேலும் அடிகள் விழும்......

புகழ்பெற்ற ஒக்ஸ்போட் மாணவர் கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக பிரி. தமிழர்கள் காட்டிய வலுவான எதிர்ப்புக் காரணமாக அவரது பேச்சு கைவிடப்பட்டது. இது அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் சந்தித்த பாரிய தலைக்குனிவும் மூக்குடைப்பும் ஆகும்.
அவரது ஆணவப் போக்குக்குக் கிடைத்த முதல் அடி இதுவாகும்.