சனி, 4 டிசம்பர், 2010

ராஜபக்சவின் தலைக்கனத்துக்கும் இனிப் போகப் போக மேலும் அடிகள் விழும்......

புகழ்பெற்ற ஒக்ஸ்போட் மாணவர் கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக பிரி. தமிழர்கள் காட்டிய வலுவான எதிர்ப்புக் காரணமாக அவரது பேச்சு கைவிடப்பட்டது. இது அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் சந்தித்த பாரிய தலைக்குனிவும் மூக்குடைப்பும் ஆகும்.
அவரது ஆணவப் போக்குக்குக் கிடைத்த முதல் அடி இதுவாகும்.



போன மச்சான் திரும்பி வந்தான் வெறுங்கையோடு என்பது போல ராஜபக்ச தனது பரிவாரங்களோடு சிறீலங்காவுக்கு வெறுங்கையோடு திரும்பியுள்ளார். அவரது ஆணவப் போக்குக்குக் கிடைத்த முதல் அடி இதுவாகும். தலைக்கனத்துக்கும் இனிப் போகப் போக மேலும் அடிகள் விழும்.


சிறீலங்கா ஒரு தீவாக இருக்கலாம். ஆனால் அரசியல், இராஜதந்திர மட்டத்தில் அது ஒரு தீவு அல்ல. அதன் இறைமை பன்னாட்டு சட்டங்கள் மற்றும் மரபுகளுக்குக் கட்டுப்பட்டது.


மஹிந்த ராஜபக்ச மீதும் அவரது இராணுவம் மீதும் மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை போன்ற குற்றச்சாட்டுக்கள் தமிழர்களால் மட்டுமல்ல மனிதவுரிமை அமைப்புகளாலும் சுமத்தப்பட்டு வருகின்றன.


தமிழ்ப் போராளிகள் கைகள் கட்டப்பட்ட நிலையில் சிங்கள இராணுவத்தினரால் முதுகுப்புறம் சுட்டுக் கொல்லப்படும் காணொளிக் காட்சிகள் பெருமளவில் வெளிவரத் தொடங்கியுள்ளன.


கற்பழிக்கப்பட்ட பின்னர் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் போராளிகளது காணொளிப்படங்கள் வெளிவந்துள்ளன. போராளிகள் சிறைபிடிக்கப்பட்ட பின்னர் கண், கை கட்டப்பட்ட நிலையில் பின்புறமாக சிறீலங்கா இராணுவத்தினரால் சுடப்படும் காணொளியை சனல்4 ஒளிபரப்பியுள்ளது. பின்னணியில் வெடிச் சத்தங்கள் கேட்கின்றன.


இராணுவத்திடம் சரணடைந்த மட்டக்களப்பு மாவட்ட தளபதி ரமேஸ் சிங்கள இராணுவத்தால் விசாரணை செய்யப்படும் காணொளி வெளிவந்துள்ளது.


அதே சமயம் சிறிலங்கா இராணுவம் ரமேஸை தாங்கள் கைது செய்யவோ சுட்டுக்கொல்லவோ இல்லை என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் புதைக்கப் பார்க்கிறது. அவரை விசாரணை செய்யும் காணொளி வெளிவந்துள்ள நிலையில் இராணுவத்தின் தலைமைத் தளபதி மஹிந்த ராஜபக்சவும் இராணுவமும் கையும் மெய்யுமாகப் பிடிபட்டுள்ளது. .


சிறீலங்காவின் அப்பட்டமான மனிதவுரிமைகள் பற்றி மௌனம் சாதித்த இந்திய ஆங்கில ஊடகங்கள் அது பற்றி எழுத தொடங்கியுள்ளன. விதிவிலக்கு இந்து. இந்துக்கு எதிராக தமிழ் உணர்வாளர்கள் போர் தொடுக்கக் கிளம்பியுள்ளனர்.


சிறிலங்கா அரசின் இந்த மோசமான மனிதவுரிமை மீறல்களை இந்தியா வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. காரணம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, பயிற்சி எல்லாம் கொடுத்தது இந்தியாதான். இந்தியாவின் போரைத்தான் சிறிலங்கா செய்து முடித்தது என்று இராசபக்சே பலமுறை இந்தியாவுக்குப் புகழ்மாலை சூட்டியுள்ளார். இதன் பொருள் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஆகியோரின் கைகளிலும் தமிழர்களின் பச்சை இரத்தம் படிந்துள்ளது என்பதாகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக