சனி, 4 டிசம்பர், 2010

போதை மருந்து கடத்த பேஸ்புக் வாயிலாக ஆள் தேர்வு!

மலேஷியாவில் இளம் பெண்களை போதை மருந்து கடத்தல் தொழிலுக்கு பேஸ் புக் வாயிலாக வேலைக்கு தேர்வு செய்துள்ளதாக பரபரப்பு புகாரினை அந்நாட்டு வெளியுறவு துணை அமைச்சர் வெளியிட்டுள்ளார். இது குறித்து மலேஷிய வெளியுறவு துணை அமைச்சர் ரிச்சர்ட்ரையாட் கூறுகையில்,
மலேஷியாவில் போதை மருந்து கடத்தல் கும்பல் அதிகரித்து வருகிறது. இவர்கள் சிண்டிகேட் அமைத்து போதை மருந்தினை கடத்தி வருகின்றனர். இவர்களில் ஆப்ரிக்க நாட்டினைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம் உள்ளனர். இவர்கள் சீனா, ஜப்பான், லத்தீன் அமெரி்க்கா நாடுகளுக்கு போதை மருந்து கடத்துகி்ன்றனர். மேலும் இவர்கள் மீது மலேஷிய போலீசார் கண்காணித்து வந்தாலும் அதனை முறியடிக்க தற்போது மலேஷிய நாட்டு இளம் பெண்களை பேஸ் புக் எனும் சமூக வலைதளம் வாயிலாக வேலைக்கு ஆள் எடுப்பது போன்று நியமித்து கடத்தல்தொழிலில் ஈடுபடுத்துகி்ன்றனர். இவர்கள் டூரிஸ்ட் வழிகாட்டி என தங்களை அறிமுகப்படுத்தி இத்தகைய தொழிலில் ஈடுபடுகின்றனர் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக