சனி, 4 டிசம்பர், 2010

இங்கிலாந்தில், மேற்கொள்ளப்பட்ட தமிழர்களின ஆர்ப்பாட்டத்திற்கு பதிலடியாக, கிளிநொச்சியில் நூற்றுக்கணக்கான (தமிழ்?)மக்களை திரட்டி, மகிந்தவுக்கு ஆதரவான போராட்டம் நடத்தியுள்ளது இலங்கை அரசு.??

விசுவமடு, ஒட்டுசுட்டான்,  கிளிநொச்சி மற்றும் முல்லைதீவு ஆகிய பிரதேசங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான (தமிழ்?) மக்கள் ஒன்றிணைந்து மகிந்தவுக்கு ஆதரவான இப்போராட்டத்தில் ஈடுபட்டதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.



சிறிலங்கா தேசிய கொடியை ஏந்தியவாறு, கைகளில் பல கோசங்கள் அடங்கிய பதாகைகளை தாங்கி இப்போராட்டத்தை அவர்கள் நடத்தியுள்ளனர். விடுதலைப்புலிகள் எங்கள் வாழ்வை அழித்தனர்.


வெளிநாடுகளில் புலம்பெயர் மக்கள் எங்களுக்காக மேற்கொண்ட போராட்டத்தினால் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே எங்களை விடுவித்தார். அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படுவதை வன்மையாக கண்டிக்கிறோம். ஒன்றுபட்ட நாட்டை கட்டியெழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு கைகொடுப்போம் என்ற வாசகங்கள் இப்பதாகைகளில் ஆங்கிலத்திலும், தமிழிலும் அச்சடிக்கப்பட்டுள்ளன.


புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் எதிர்ப்பார்ப்பாட்டங்களால், எங்களது வாழ்வு மேலும் சீரழியும். அதைவிடுத்து, அரசின் புனர்நிர்மாண பணிகளுக்கு உதவிபுரியுங்கள் என அவர்கள் சார்பில் கோரிக்கையும் வெளியிட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக