ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

ஒரு இனத்தின் வாழ்வாதாரப் போராட்டம் இன்னொருவரின் பொழுதுபோக்கு........

அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஈழத்தில் நடந்துவரும் தமிழ் உரிமைப் போர் கடும் சவால்களை எதிர்நோக்கியிருக்கிறது. இப்போரில் நிகழ்ந்த படுகொலைகளும், இன்றும் இலங்கையின் திரைமறைவில் தொடரும் சுமார் 12000 போராளிகளின் சிறைவைப்பு, அவர்கள் மீதான வன்கொடுமைகள், மக்களின் நிலங்களை அரசு பறித்தல், சிங்களப் பேரினவாத அரசியல் ஆகியன உலகின் உணர்வுள்ள தமிழர்களின் ...மனங்களைச் சொல்லொணாத வேதனையில் ஆழ்த்தி வருவதைக் காண்கிறோம். இந்த வேதனைக்கு மருந்திட வேண்டிய உலகம் மௌனத்தில் ஆழ்ந்திருக்க, ஒரு விளையாட்டு நிறுவனம் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோன்ற செயலொன்றைச் செய்திருக்கிறது.


2ம் லெப். சுரேந்தினி

ஜனந்தினி-பரமானந்தம் - இளவாலை வலிகாமத்தின் வடபகுதியில் அமைந்த அழகிய கிராமம்தான் இளவாலை. விவசாயிகளின் கை வண்ணத்ததில் பசுமை குறையாது செழிப்புடன் விளங்கியது. தமிழீழ சுதந்திரப் போராட்டத்திற்கு பெரும் உறுதுணையாக பல ஆண், பெண் போராளிகளைத் தந்து புகழ் பூத்த மண்ணது. அந்த மண்ணில் பிறந்ததாலோ என்னவோ ஜனந்தினியும் அச்சம் சிறிதும் இன்றி ஆயுதம் கரத்தில் ஏந்தி களம் பல கண்டு வீரச்சாவை புகழுடன் தழுவிக் கொணடவள்.

அனுருத்த ரத்வத்தை மலேசியாவிற்கான புதிய தூதர்.

சந்திரிக்காவின் மாமனும் முன் நாள் பாதுகாப்பு துணை அமைச்சரும் பிரபல தமிழின படுகொலைகளின் சூத்திரதாரியுமான அனுருத்த ரத்வத்தை அவர்கள் மலேசியாவிற்கான புதிய தூதராக விரைவில் செல்கின்றார்.

இதற்கான பேச்சுவார்த்தை அண்மையில் மஹிந்தவினால் மேற்கொள்ளப்பட்டது.

தமிழா, நீ பேசுவது தமிழா?.........

உலகின் மூலையெங்கும் தமிழ் இருக்கிறது. தமிழனின் மூளையில் மட்டும்தான் தமிழ் இல்லை' என தமிழ்க் கவிஞர் ஒருவர் கவலைப்பட்டதுபோல் இன்று தமிழர்களின் நாவில் தமிழ் இல்லை. தமிழன் உச்சரிக்கும் வார்த்தைகளைச் சலித்தெடுத்தால் பத்துக்கு இரண்டு தமிழ்ச் சொற்கள் மிஞ்சுமா என்று தெரியவில்லை.


ஒன்றுபடு ஒன்றுபடு ..........

மாவீரர் நாமென்று

மகுடங்கள் வேண்டா
புகழுரைகள் வேண்டா
புதுச் சோடனைகள் வேண்டா
வண்ணமலர் வேண்டா
வாசனைகள் வேண்டா
நெய்விளக்கு வேண்டா
நெக்குருகும் பாடல்தணும் வேண்டா
ஒன்றுமட்டும் வேண்டுகிறோம் உந்தனிடம்
ஒன்றுபடு ஒன்றுபடு ..........

'எக்னாமிஸ்ட்' சஞ்சிகை பறிமுதல்


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ‘எக்னாமிஸ்ட்’சஞ்சிகை சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த சஞ்சிகையின் இறக்குமதியாளரும் பிரசுரிப்பாளருமான விஜித யாப்பா தெரிவித்துள்ளார்