ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

'எக்னாமிஸ்ட்' சஞ்சிகை பறிமுதல்


இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட ‘எக்னாமிஸ்ட்’சஞ்சிகை சுங்க அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை இந்த சஞ்சிகையின் இறக்குமதியாளரும் பிரசுரிப்பாளருமான விஜித யாப்பா தெரிவித்துள்ளார்

கடந்த வாரம் இதே போன்று ‘இண்டர்நேஷன்ல் ஹெரால்ட் ட்ரீபியூன்’ பிரதிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவை நான்கு நாட்களுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும், த எகொனொமிஸ்ற் சஞ்சிகையின் இம்மாத இதழினை கொழும்பு சுங்க பகுதி இலங்கைக்குள் வினியோகிக்க தடைசெய்துள்ளது.

இந்த மாத இதழில் இலங்கையின் போருக்கு பிந்திய புனர்வாழ்வு நடவடிக்கையும், அபிவிருத்தியும் பற்றி எதிர்மறையாக விமர்சனம் செய்து கட்டுரை வரையப்பட்டுள்ளது. இந்த கட்டுரைக்காகவே இந்த இதழ் தடை செய்யப்பட்டுள்ளது.இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் நிலங்கள் பங்கீடு சிறுபான்மை மக்களினை புறக்கணித்தல்,எதிரணி எம்பிக்களை கைது செய்தல், பொலிசாரின் அராஜகம் ஆகியவற்றை விமர்சனம் செய்தும் இந்த கட்டுரை அமைந்து
ள்ளது.

இறுதியாக இந்த எகொனொமிஸ்ர் கட்டுரையில் , போரின் பின்னர் இலங்கை அபிவிருத்தி அடைந்தாலும் அங்கு ஜன நாயகம் என்பது தழைப்பதாக தெரியவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக